Skip to main content

Posts

Showing posts from October, 2025

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

27 நட்சத்திரங்கள்

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் ஹஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி

விரத நாட்களில் வெங்காயம் வெள்ளைப் பூண்டு சாப்பிடக் கூடாதா

 

பஞ்ச பட்சி சாஸ்திரம்

பஞ்சபூதங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது பஞ்சபட்சி. நிலம் (வல்லூறு), நீர் (ஆந்தை), நெருப்பு (காகம்), காற்று (கோழி), ஆகாயம் (மயில்). பட்சிகள் மொத்தம் ஐந்து வல்லூறு (ந), ஆந்தை (ம), காகம் (சி), கோழி (வ), மயில் (ய). பஞ்ச பட்சிகள் பஞ்சாட்சர மந்திரத்தின் (நமசிவய) ஒவ்வொரு எழுத்துக்களையும் கொண்டுள்ளன. ஒருவரின் நட்சத்திரம் மூலம் பட்சி பார்ப்பது நட்சத்திர பட்சி எனப்படும். வல்லூறு  அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகினி, மிருகசீரிஷம். ஆந்தை   திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம். காகம்  உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம். கோழி  அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம். மயில்  திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி. நட்சத்திரம் தெரியாதவர்கள் தங்களுடைய பெயரில் முதல் எழுத்தை வைத்து பார்ப்பது அச்சரபட்சியாகும். முருகன் என்ற பெயரில் முதல் எழுத்து மு என்பதை 'ம் + உ' என்று பிரித்து 'உ' க்கான பட்சியை பார்க்கவும். 'உ' க்கான வளர்பிறை பட்சி காகம். வளர்பிறை  வல்லூறு - அ.ஆ ஆந்தை - இ.ஈ கோழி - எ.ஏ காகம்  - உ.ஊ மயில் -...

ஆரியங்காவு

சபரிமலையில் பிரம்மச்சரியம் காக்கும் சாஸ்தா ஆரியங்காவில் மாப்பிள்ளை அய்யனாராக கிரகஸ்த நிலையில் இருக்கிறார். செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் கேரளா தமிழ்நாடு எல்லைப் பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது பரசுராமர் நிறுவியதாக சொல்லப்படும் மிக முக்கியமான ஐந்து ஸ்தலங்களில் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலும் ஒன்றாகும் இங்கு சாஸ்தா புஷ்கலா தேவியுடன் மாப்பிள்ளை கோலத்தில் காட்சி தருகிறார் சவுராஷ்டிரா இன மக்களின் குல தெய்வமான புஷ்கலாவிலேயே இங்கே சாஸ்தா உடன் ஐக்கியமானார். அவரை சாஸ்தா திருமணம் செய்யும் காட்சியை ஒவ்வொரு டிசம்பர் மாதமும் இங்கு நடத்துகின்றனர். மதம் கொண்ட யானையை அடக்கி அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு சாஸ்தா இருப்பதால் மதகஜ வாகன ரூபன் என்றொரு பெயரும் இவருக்கு உண்டு. இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் விரைந்து நடக்கும். இக்கோயிலின் பூஜை முறைகள் கேரள முறைப்படியும் தமிழ்நாட்டு முறைப்படியும் நடைபெறுவது சிறப்பு

மகாலக்ஷ்மி மந்திரம்

வியாபாரம் செய்யும் இடங்களில் மந்தமான சூழ்நிலை இருக்கும் பொழுது இந்த மந்திரத்தை உச்சரித்தால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து பண வரவு அமோகமாக இருக்கும். மகாலட்சுமியின் இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை உங்கள் கடை மற்றும் தொழில் ஸ்தாபனங்களில் உச்சரித்தால் வியாபாரம் மற்றும் தொழில் பன்மடங்கு விருத்தியாகும். அது போல் நீங்கள் வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால் பணவரவு அதிகரித்துக் கொண்டே வருமாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு கடன்கள் வாங்கும் சூழ்நிலையில் ஒரு சிலர் இருப்பார்கள். அவர்கள் அவர்களுடைய தொழில் செய்யும் இடத்தில் வெள்ளிக் கிழமை மற்றும் பவுர்ணமி தினத்தில் காலையில் கடையை திறந்ததும் மகாலக்ஷ்மி தேவிக்கு விளக்கு ஏற்றும் பொழுது, பாலில் ஏலக்காயும் கலந்து நிவேதனம் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு தாம்பூலம் வைத்து, பாயாசம், கற்கண்டு, பழங்கள் முதலியவற்றை நிவேதனமாக வைத்து மகாலட்சுமி தேவியை வழிபட உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும். விளக்கேற்றும் பொழுது கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரிக்கவும். நீங்கள் சாதாரணமாக வாடிக்கைய...

நவகிரக அதிபதி உள்ள கோவில்

நவகிரக அதிபதி உள்ள கோவில் திருச்செந்தூர் முருகன் கோவில் . இங்கு எந்த அதிபதி உள்ளார் என்பதை கீழே தெரிந்து உங்களுக்கு உண்டான கிரக அதிபதிகளை வணங்கலாம். நவக்கிரக தெய்வங்களை வணங்கும் பலன் முழுவதும் கிரகாதிபதிகளை வணங்கினாலும் கிடைக்கும். நவகிரகத் தலங்கள்: தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகில் உள்ள 9 ஆலயங்கள் நவகிரகத் தலங்களாகப் போற்றப்படுகின்றன நவகிரக கோவில்கள் நவ திருப்பதி நவகைலாயம் நவக்கிரகங்களை எத்தனை சுற்று சுற்ற வேண்டும்? கிரகம் கிரக அதிபதி   சூரியன் (Sun) தங்க கொடிமரம் சந்திரன் (Moon)  செப்பு கொடிமரம் செவ்வாய் (Mars)  மூலவர் முருகன்  புதன் (Mercury)  நிற்கின்ற பெருமாள் (பெருமாள் கோவில்) குரு / வியாழன் (Jupiter)  தட்சிணா மூர்த்தி  சுக்கிரன் (Venus)  சயன பெருமாள் (பெருமாள் கோவில்)  சனி (Saturn)    சனி பகவான் ராகு (Rahu)  பார்வதி அம்மன் (மூலவர் சன்னதி அருகில்) கேது (Ketu) கரிய மாணிக்க விநாயகர் (மூலவர் சன்னதி அருகில்) ...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

ஆண் குழந்தை பிறக்க

ஆண் பெண் இருவரும் சேரும் போது அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டு செயல்பட்டாலே என்ன குழந்தை வேண்டுமோ அதைப் பெற முடியும் என்று நம்முடைய முன்னோர்களும் கூறியிருக்கிறார்கள். ஆண்  சேரும் போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண் குழந்தை இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். இரு நாசிகளிலும் இணைந்து சுழுமுனை சுவாசம் ஓடினால் குழந்தை அலியாகப் பிறக்கும். பெண் குழந்தை பிறக்க வேண்டுமென்றால் உடலுறவில் ஈடுபட்ட பின்னர் பெண் இடதுபக்கம் சாய்ந்தும் ஆண் குழந்தை வேண்டுமென்றால் வலதுபக்கம் சாய்ந்தும் இருக்க வேண்டும் ஆண் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள் சூரியன் சிம்மத்திலும், சந்திரன் கன்னி, விருச்சிகம், தனுசுவில் இருக்கும்போது உடலுறவில் ஈடுபடலாம். பெண் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள் தேய்பிறை சந்திரன் நேரத்திலும், துலாம், கும்பத்தில் இருக்கும்போதும் உடலுறவில் ஈடுபடலாம். இரவில் அரை வயிறளவு மட்டும் தான் சாப்பிட்டு  பால்  வாழைப் பழம் சாப்பிட்டு. இரவு முழுக்க இடது கை பக்கமாகத் திரும்பிப் படுக்க வேண்டும்.  வலது புறத்தில் சூரியக்கலை இயங்கிக் கொண்டிருக்கும் போது விடியற்காலை 4...

வம்சம் தழைக்க செய்யும் வாகையடி இசக்கியம்மன்

இசக்கி அம்மன் என்ற ஒரு காவல் தெய்வத்தை தெய்வமாக வணங்கி வருகின்றனர்.அவரவர் தோட்டத்தில் கன்னி மூலையிலே இந்த தெய்வத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு எண்ணெய் மஞ்சனம் என்ற குங்குமங்கள் சாத்துவார்கள் அம்மனை குளிமை படுத்துவதற்காக நல்லெண்ணெய் சாத்துவார்கள் அம்மனுக்கு சிவப்பு பட்டு உடுத்தி அரளி மாலை அணிவிப்பார்கள். இங்கு திருமணம் நடக்காமல் இருப்பவர்கள் மூன்று கடைசி வெள்ளிக்கிழமை வந்தால் திருமணம் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். இந்தியாவில் தமிழ்நாடு, திருநெல்வேலியிலிருந்து நான்குநேரி செல்லும் வழியில் நெடுங்குளம் என்ற சிற்றூர் உள்ளது.  இங்கு குளற்றுக்கரை அருகே வாகையடி இசக்கி அம்மன் அருள்புரிந்து வருகிறாள். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பது போல கோவில் சிறியதாக இருந்தாலும் குறைகளை தீர்ப்பதில் கைதேர்ந்தவளாக இருக்கிறாள்.  இசக்கி அம்மனுக்கு பிடித்த நெய்வேத்தியம் பால் கொழுக்கட்டையும் பச்சரிசி சாதமுமே ஆகும்.  அன்போடு பக்தர்கள் தரும் காணிக்கை பொருட்களை கண்டிப்புடன் வசூல் செய்வதில் கில்லாடி இசக்கி அம்மன்.  நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு மறந்து விட்டாலோ ...

இன்று தாலி கயிறு மாற்றலாமா.....

திருமணம் முடிந்து சில மாதங்களுக்கு தாலிக்கயிற்றில் மஞ்சள் சேர்த்தே கட்டப்படும்.. காரணம், இந்த மஞ்சள்தான், தாய்க்கும் சேய்க்கும் பாதுகாக்கும் கிருமிநாசினியாகும். அத்துடன், பெண்களின் மார்பகத்தில் தொற்றுக்களை நெருங்க விடாமல் இவை தடுத்து நிறுத்துகின்றன.  தாலியை தங்கத்தில் அணிந்தாலும், மஞ்சள் கயிற்றில்தான் கட்ட வேண்டும். எப்போதுமே கழுத்தில் போடப்பட்டிருக்கும் மாங்கல்யம் நெஞ்சு குழிக்கு கீழே தொப்புள் இருக்கும் இடத்திற்கு சற்று மேலே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிலர் தொப்புளுக்கு நேராக அணிந்திருப்பார்கள் இது தவறான முறையாகும். எப்போதுமே தாலிக்கயிற்றில் ஊக்கு, சாவி தொங்க விடக்கூடாது.   தாலி கயிறு மாற்ற நாள், கிழமை கண்டிப்பாக பார்க்க வேண்டும். தாலி கயிறு மாற்றுவதற்கு சந்திர தரிசனம், சுபமுகூர்த்த நாள், மேல் நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த்த யோகம் என்று எல்லாமே கூடி வரக்கூடிய நாளாக இருக்க வேண்டும். முக்கியமாக கயிறு மங்குவது போல இருந்தால் வந்தால் மட்டுமே, அதை மாற்றவேண்டும். அப்படி புதிய தாலி கயிறு மாற்றுவதானால் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாற்றுவது நல்லதாக இருக்கும...

நவகிரக கோவில்கள் – முழுமையான வழிகாட்டி | Navagraha Temples Guide

🛕 நவகிரக கோவில்களின் முக்கிய பட்டியல் தென்தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற நவகிரக கோவில்கள் கும்பகோணத்தைச் சுற்றி அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம்.  நடைதிறக்கும் நேரம் மாறுபடலாம். ஆதலால் கோவிலுக்கு செல்லும் முன் நடைதிறக்கும் சரியான நேரத்தை கோவில் அலுவலகத்தில் தெரிந்து கொண்டு செல்வது நல்லது. சூரியன் – சூரியநாராயணர் கோவில், சூரியனார்  கோவில் கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல், சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது.  ...

வைத்தமாநிதி பெருமாள் கோவில், திருக்கோளூர்

திருநெல்வேலி திருக்கோளூரில் அமைந்துள்ளது வைத்தமாநிதி பெருமாள் கோவில். இது நவதிருப்பதி கோவில்களில் எட்டாவது திருப்பதியாகவும் 108 திவ்ய தேசங்களில் 57-வது திவ்ய தேசமாகவும் அமைந்துள்ளது.திருநெல்வேலி- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் திருநெல்வேலியிலிருந்து 37-வது கிலோ மீட்டரில் அமைந்துள்ள பால்குளத்தில் இறங்கி 1 கி.மீ. தூரம் நடந்தால் வருவது திருக்கோளூர். இங்குதான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் வைத்தமாநிதி பெருமாள். இது நவதிருப்பதி கோவில்களில் எட்டாவது திருப்பதியாகவும் 108 திவ்ய தேசங்களில் 57-வது திவ்ய தேசமாகவும் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவராக வைத்தமாநிதி பெருமாளும், அவரின் வலதுபுறத்தில் குமுதவள்ளியும், இடதுபுறம் கோளூர் வள்ளிதாயாரும் அமைந்திருக் கிறார்கள். இங்கு பெருமாள் சயன கோலத்தில் வீற்றிருக்கிறார். இங்கு உச்சவராக நிக்சோப வித்தான் உள்ளார். பெருமாளின் தலைக்கு அடியில் நாழியும், அவரின் இடது உள்ளங்கை விண்னை நோக்கியும், வலது கை பூமியை நோக்கியும் உள்ள கோலத்தில் காட்சி தருகிறார்.இக்கோவில் கிழக்கு பார்த்த திசையில் அமைந்துள்ளது. குபேரன் பார்வதியை கடை கண்ணால் பார்த்ததால் சாபத்திற்குள்ளாகி, பின்பு ...

கஷ்டம் நீங்கி சந்தோஷமாக வாழ

மேஷம் ஓம் ஐம் க்லீம் சௌம் ரிஷபம் ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம் மிதுனம் ஓம் க்லீம் ஐம் சௌம் கடகம் ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம் சிம்மம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம் கன்னி ஓம் ஸ்ரீம் ஐம் சௌம் துலாம் ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் விருச்சிகம்  ஓம் ஐம் க்லீம் சௌம் தனுசு  ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம் மகரம்  ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம் கும்பம்  ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம் மீனம்  ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம் இந்த மந்திரத்தை தினம் 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதீகம்

எதிரி தொல்லை விலக நரசிம்மர் வழிபாடு

நரசிம்மர் வழிபாடு எதிரி தொல்லையில் இருந்து விடுபட  மாதம் தோறும் அவிட்ட நட்சத்திரம் வரும். அவிட்ட நட்சத்திரத்தில் நரசிம்மர் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு எதிரிகள் தொல்லை விலக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, நரசிம்மரை 5 முறை வலம் வர வேண்டும். 9 மாதம் வரக்கூடிய அவிட்டம் நட்சத்திரத்தில் தொடர்ந்து நரசிம்மரை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரி தொல்லை இருக்காது. காலம் காலமாக பரம்பரை பரம்பரையாக கூட சில பேருக்கு எதிரிகளால் பிரச்சனை இருக்கும். அப்படிப்பட்ட பெரிய தொந்தரவிலிருந்து விடுபட இந்த நரசிம்மர் வழிபாடானது வழி வகுக்கும். குடும்ப சண்டை, பங்காளிகள் சண்டை, வியாபார சண்டை, சொந்த பந்தங்கள் சண்டை என்று எது இருந்தாலும் சரி, கோர்ட் கேஸ் வழக்குகள் இருந்தாலும் சரி, இந்த வழிபாடு செய்து பாருங்கள். உங்களுடைய பிரச்சனைகளுக்கு அந்த நரசிம்மர் ஏதாவது ஒரு வகையில் தீர்வினை காட்டிக் கொடுப்பார். அவிட்டம் நட்சத்திரத்தன்று நீங்கள் ஆயுதத்தை தானமாக கொடுப்பது சிறப்பான பலனைத் தரும். அய்யனார் கோவிலுக்கு அருவாள் சாத்துவாங்க. அம்மன் கோவிலுக்கு திரிசூலம் வாங்கி கொடுங்க. முருகர் கோவிலுக்கு வேல் வாங்கி கொடுப்பது, இதுபோல ஆயு...

பண வரவு உண்டாக

பச்சை கற்பூரம் , சோம்பு , ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வரவும். இலவங்கப் பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை குத்தி நம் பண பெட்டியில் வைத்து வர பண வரவு மிகும். புதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண வளர்ச்சி நிச்சயம். ஒவ்வொரு முறை பணத்தை வெளியே எடுக்கும் போதும் இலையை பார்த்து வர வேண்டும். மேலும் மூன்று நாட்களுக்கொரு முறை மாற்றி விட வேண்டும். வெந்தயம் சிறுது கிண்ணத்தில் போட்டு திறந்த நிலையில் வீடு அடுக்களையில் வைத்து வர என்றும் உணவு பொருட்களுக்கு குறைவிருக்காது . வாரம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் போட்டு விட்டு புதியதாய் மாற்றி விடவும்.  

திருச்செந்தூர் முருகனுக்கு காட்டப்படும் தீபங்கள்

 தீபங்கள் அலங்கார தீபம் சர்ப்ப தீபம் புருடா மிருக தீபம் மயில் தீபம் யானை தீபம் புலி தீபம் குதிரை தீபம் சிம்ம தீபம் அன்ன தீபம் சேவல் தீபம் சக்தி தீபம் கும்ப தீபம் ஆமை தீபம் மேரு தீபம் நட்சத்திர தீபம் கற்பூர தீபம் முதலிய தீபங்கள் திருச்செந்தூர் முருகனுக்கு விஷேச காலங்களில் காட்டப்படும்.

முத்துமாலை அம்மன் கோவில், குரங்கனி

சீதாவை இராவணன் கடத்தி செல்லும் போது இராமருக்கு வழிகாட்ட ஒவ்வொரு பொருளாக போட்டு கொண்டு வந்தாள். அந்த இடத்தில் முத்துமாலை விழுந்தது. முத்துமாலை முத்துமாலை அம்மனாக வழிபடுகின்றனர்.  ஏரல் அருகே உள்ள முக்கூடல் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் அந்த காலத்தில் குரங்கனியில் உள்ள முத்துமாலை அம்மனை வழிபட்டு வந்தனர். அந்நாளில் திருடர்கள் இடையூறு அதிகமாக இருந்ததால் மக்கள் குரங்கனி செல்ல பயந்தனர். அதனால் முக்கூடல் இந்து நாடார் சமுதாயத்தைச் சார்ந்த பெரியவர்கள்சேர்ந்து குரங்கனி முத்துமாலை அம்மன் கோயிலில் இருந்து பிடிமண் கொண்டு வந்து முக்கூடல் தாமிரபரணி வடக்கரையில் குடில் அமைத்து அம்பாளை வழிபாடு செய்து வந்தனர். அந்நாளில் சலவைத் தொழிலாளர்கள் துணிகளை துவைத்த பின்பு மண் தாழிகளை ஈரப்பதம் காய்வதற்கு மணல் மீது கவிழ்த்து வைப்பார்கள். அடுத்த நாள் எடுக்கும் போது ஒரு தாழியை எடுக்க முடியவில்லை. இந்த அதிசயம் அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அன்று இரவு கோயில் பூசாரி மாடக்கண் நாடார் அவர்கள் கனவில் அம்மன் வந்து தாழியை எடுக்க வேண்டாம். அங்கு நான் இருக்கிறேன் அந்த இடத்தை சுற்றி கோயில் கட்டி வழிபடுங்கள் என்று கூறினா...

அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்

ஜென்மம் ஜென்மாய் செய்த பாவங்கள் அனைத்தையும் தீர்க்கும் ஒரே தலம் கோடீஸ்வரர் திருக்கோயில்... 1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனி பகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதே போல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர். இங்குள்ள சனிபகவான் “பாலசனி’ என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது. மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர். இவ்வூரை ஒட்டி காவேரி நதி, “உத்திரவாஹினி’ யாக அதாவது தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது. இங்குள்ள உத்திரவாஹினியில் கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது பூர்வ நம்பிக்கை. இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. இத்தலத்தில் நவகிரகங்கள் கிடையாது. விதியின் பயனை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் மதியால் குறைக்க முடியும். விதியினால் கஷ்டப்படுபவர்கள் இத்தலம் வந்து தரிசித்தால் அதன் பாதிப்பு வெகுவாக குறையும். ஒரு சமயம் கைலாசத்தையும், திரிக்கோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது, இத்தலம் உயர்ந்து, கைலாசம்...

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது அலங்காரங்கள்

நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான புஷ்பம் கொண்டு ஒன்பது வகையான அலங்காரம் செய்வது வழக்கம். நவராத்திரியில் சுமங்கலிகளை யும் 10 வயதிற்குட்பட்ட கன்னிப் பெண்களையும் பூஜித்து வணங்குவது சிறப்பு.  பிரதமை  நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. அன்றைய தினம் அவளை மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்கவேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்யலாம்.   துவிதியை  இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி தேவியாக போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாக வும் ஆராதிக்கப்படுகிறாள். முல்லை, துளசியால் அலங்காரம் செய்து புளியோதரை நிவேதனம் பண்ண வேண்டும்.    திரிதியை  மூன்றாவது நாளுக்கு உரிய வாராகி அன்னை, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். செண்பகம் மற்றும் சம்பங்கிகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.    சதுர்த்தி  நான்காம் நாளில் அருள்பவள் மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.    பஞ்சமி  ஐ...

64 பைரவர்களின் சக்திகள்

சிவனிடமிருந்து முதலில் தோன்றிய பைரவர் சொர்ணாகர்ஷன பைரவர். நான்கு பைரவரானார். பின்பு திசைகளுக்கு ஒரு பைரவராக எட்டு பைரவர்களாக மாறியது. எட்டு பைரவ வடிவங்கள் ஒவ்வொன்றும் எட்டு வடிவங்களாக மாறி 64 பைரவர்களாக வெளிப்பட்டனர். 64 யோகினிகளே 64 பைரவர்களின் சக்திகளாக மாறினர்.  1. நீலகண்ட பைரவர் - ஜயா 2. விசாலாட்சி பைரவர் - விஜயா 3. மார்த்தாண்ட பைரவர் - ஜயந்தி 4. முன்டனப்பிரபு பைரவர் - அபராஜிதா 5. ஸ்வஸ்சந்த் பைரவர்- திவ்யமோகினி 6. அதிசந்துஷ்ட பைரவர் - மகாயோகினி 7. கேசர பைரவர் - ஸித்தமோகினி 8. ஸம்ஹார பைரவர் - கணேஸ்வர யோகினி 9. விஸ்வரூப பைரவர் - ப்ரேதாஸின்யை 10. நானாரூப பைரவர் - டாகினி 11. பரம பைரவர் - காளி 12. தண்டகர்ண பைரவர் - காளராத்ரி 13. ஸீதாபத்ர பைரவர் - நிசாசரி 14. சிரீடன் பைரவர் - டங்கார்ரீ 15. உன்மத்த பைரவர் - வேதாள்யா 16. மேகநாத பைரவர் - ஹும்காரி 17. மனோவேக பைரவர் - ஊர்த்துவகேசி 18. ஷேத்ரபாலக பைரவர் - விருபாட்சி 19. விருபாஷ பைரவர் - சுஷ்காங்கீ 20. காரள பைரவர் - நரபோஜினி 21. நிர்பய பைரவர் - பட்சார்ரி 22. பிசித பைரவர் - வீரபத்ரா 23. ப்ரேஷ்த பைரவர் - தூம்ராக்ஷி 24. லோகபால பைரவர் - கலகப்ரிய...

நீங்கள் வராஹியை வணங்கினால்....

சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும். சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது. ஒன்று காசி மற்றொன்று தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ளது. இங்குள்ள வராகி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக உள்ளார். இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாளின் போர்ப் படைத்தளபதி ஆவாள். ராஜராஜசோழன் எச்செயலைத் தொடங்கினாலும், வராகியை வழிபட்ட பின்னரே தொடங்குவார். இதனால் இந்த அம்மனை ராஜராஜ சோழனின் வெற்றித்தெய்வம் என்று வர்ணிப்பர். தஞ்சைப் பெரியகோயில் கட்டுவதற்கு முன்பே, வராகி வழிபாடு இங்கிருந்ததாகக் கூறுவர். மற்ற கோயிலில் எங்கும் இல்லாத ஒரு நடைமுறையும் தஞ்சைப்பெரியகோய...

விரைவில் திருமணமாக

கல்வியில் கரையிலாக்காஞ்சியில் தேவஸ்வாமி என்பவர் தனவதி என்னும் தன் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இவருக்கு ஏழு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் இருந்தனர். ஆண்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. பெண்ணுக்குக் திருமணம் ஆகவில்லை. ஒரு நாள் ஒழுக்கமும் சீலமும் உள்ள ஒரு அந்தணர் தேவஸ்வாமி வீட்டிற்கு பிக்ஷைக்கு வந்தார். பிக்ஷை முடிந்ததும், தேவஸ்வாமியின் ஏழு மருமகள்களும் வந்த அந்தணரை நமஸ்காரம் செய்ய அவரும் தீர்க்க சுமங்கலீபவ என்றார். தேவஸ்வாமியின் பெண்ணான குணவதி அவரை நமஸ்காரம் செய்யும்போது, அமங்கல்யவதியாவாய் என்றார். விவரம் அறிந்த குணவதியின் தாய் காரணம் கேட்க அம்மா உன் பெண்ணுக்கு திருமணம் நடக்கும்போது சப்தபதி நேரத்தில் (7 அடி நடந்த பின்) கணவனை இழப்பாள். அதைத்தான் சொன்னேன் என்றார். தாயான தனவதி இந்தத்துயரம் தீர என்ன வழி? என்று கேட்டாள். அதற்கு அந்தணர் திருமண சமயத்தில் சிம்ஹளதேசத்திலிருந்து வரும் சோமவதி என்ற பெண் உன் மகளின் துயரைத் தீர்ப்பாள் என்றார்.. அந்தணர் போனதும் தேவஸ்வாமியின் கடைசி குழந்தை ஆன சிவஸ்வாமி பெற்றோருக்கு நமஸ்காரம் செய்து  சகோதரியான குணவதியுடன் சோமவதி என்னும் பெண்ணை...