நரசிம்மர் வழிபாடு எதிரி தொல்லையில் இருந்து விடுபட மாதம் தோறும் அவிட்ட நட்சத்திரம் வரும். அவிட்ட நட்சத்திரத்தில் நரசிம்மர் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு எதிரிகள் தொல்லை விலக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, நரசிம்மரை 5 முறை வலம் வர வேண்டும். 9 மாதம் வரக்கூடிய அவிட்டம் நட்சத்திரத்தில் தொடர்ந்து நரசிம்மரை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரி தொல்லை இருக்காது. காலம் காலமாக பரம்பரை பரம்பரையாக கூட சில பேருக்கு எதிரிகளால் பிரச்சனை இருக்கும். அப்படிப்பட்ட பெரிய தொந்தரவிலிருந்து விடுபட இந்த நரசிம்மர் வழிபாடானது வழி வகுக்கும்.
குடும்ப சண்டை, பங்காளிகள் சண்டை, வியாபார சண்டை, சொந்த பந்தங்கள் சண்டை என்று எது இருந்தாலும் சரி, கோர்ட் கேஸ் வழக்குகள் இருந்தாலும் சரி, இந்த வழிபாடு செய்து பாருங்கள். உங்களுடைய பிரச்சனைகளுக்கு அந்த நரசிம்மர் ஏதாவது ஒரு வகையில் தீர்வினை காட்டிக் கொடுப்பார். அவிட்டம் நட்சத்திரத்தன்று நீங்கள் ஆயுதத்தை தானமாக கொடுப்பது சிறப்பான பலனைத் தரும். அய்யனார் கோவிலுக்கு அருவாள் சாத்துவாங்க. அம்மன் கோவிலுக்கு திரிசூலம் வாங்கி கொடுங்க. முருகர் கோவிலுக்கு வேல் வாங்கி கொடுப்பது, இதுபோல ஆயுதங்களை கோவிலுக்கு வாங்கி தானம் கொடுத்தாலும் உங்களுடைய எதிரி தொல்லை தீரும்
Comments
Post a Comment