Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

பஞ்ச பட்சி சாஸ்திரம்

பஞ்சபூதங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது பஞ்சபட்சி. நிலம் (வல்லூறு), நீர் (ஆந்தை), நெருப்பு (காகம்), காற்று (கோழி), ஆகாயம் (மயில்). பட்சிகள் மொத்தம் ஐந்து வல்லூறு (ந), ஆந்தை (ம), காகம் (சி), கோழி (வ), மயில் (ய). பஞ்ச பட்சிகள் பஞ்சாட்சர மந்திரத்தின் (நமசிவய) ஒவ்வொரு எழுத்துக்களையும் கொண்டுள்ளன. ஒருவரின் நட்சத்திரம் மூலம் பட்சி பார்ப்பது நட்சத்திர பட்சி எனப்படும்.


வல்லூறு 
அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகினி, மிருகசீரிஷம்.

ஆந்தை 
திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம்.

காகம் 
உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம்.

கோழி 
அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்.

மயில் 
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.

நட்சத்திரம் தெரியாதவர்கள் தங்களுடைய பெயரில் முதல் எழுத்தை வைத்து பார்ப்பது அச்சரபட்சியாகும். முருகன் என்ற பெயரில் முதல் எழுத்து மு என்பதை 'ம் + உ' என்று பிரித்து 'உ' க்கான பட்சியை பார்க்கவும். 'உ' க்கான வளர்பிறை பட்சி காகம்.

வளர்பிறை 
வல்லூறு - அ.ஆ

ஆந்தை - இ.ஈ

கோழி - எ.ஏ

காகம்  - உ.ஊ

மயில் - ஒ.ஓ

தேய்பிறை 
வல்லூறு - இ.ஈ

ஆந்தை - உ.ஊ

கோழி - அ.ஆ

காகம் - ஒ.ஓ

மயில் - எ.ஏ

ஒருவர் தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு செயலுக்காகவோ பட்சியை பார்த்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும். அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கீழ்கண்டவாறு பட்சிகள் பலம் பெறும். 

அரசு - 100%
ஊண் - 75%
நடை - 50%
துயில் - 25%
சாவு - 0

ஒவ்வொரு பட்சியும் பகல் ஐந்து தொழிலையும் இரவு ஐந்து தொழிலையும் செய்யும் சில நாட்களில் பட்சி செயலிழந்து காணப்படும். அது படுபட்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் சுப நிகழ்ச்சிகள் பிரயாணம் மேற்கொள்வதை மற்றும் மருத்துவம் செய்வதை தவிர்ப்பது நல்லது. இவை பகல் மற்றும் இரவு வேலைகளுக்கும் பொருந்தும்.

வளர்பிறை படுபட்சி நாட்கள்
வல்லூறு - வியாழன், சனி
ஆந்தை - ஞாயிறு, வெள்ளி
கோழி - செவ்வாய்
காகம் - திங்கள்
மயில் - புதன்

தேய்பிறை படுபட்சி  நாட்கள்
வல்லூறு - செவ்வாய்
ஆந்தை - திங்கள்
கோழி - வியாழன், சனி
காகம் - ஞாயிறு
மயில் - புதன், வெள்ளி

இந்த பட்சிகளுக்கு ஊண் பட்சி நாட்கள் இருக்கின்றன. அன்று செய்யும் காரியங்கள் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கும். எல்லா சுபகாரியங்களும் செய்யலாம்.

பகல் ஊண் பட்சி நாள் வளர்பிறை 
வல்லூறு - ஞாயிறு, செவ்வாய்
ஆந்தை - புதன், திங்கள்
கோழி - வெள்ளி
காகம் - வியாழன்
மயில் - சனி

இரவு ஊண் பட்சி நாள் வளர்பிறை 
வல்லூறு - வெள்ளி
ஆந்தை - ஞாயிறு
கோழி - திங்கள், புதன்
காகம் - ஞாயிறு, செவ்வாய் 
மயில் - வியாழன்

பகல் ஊண் பட்சி நாள் தேய்பிறை 
வல்லூறு - வெள்ளி
ஆந்தை - வியாழன்
கோழி - ஞாயிறு, செவ்வாய்
காகம் - புதன்
மயில் - திங்கள், சனி

இரவு ஊண் பட்சி நாள் தேய்பிறை 
வல்லூறு - ஞாயிறு, செவ்வாய்
ஆந்தை - புதன்
கோழி - திங்கள், சனி
காகம் - வியாழன்
மயில் - வெள்ளி

படுபட்சி நாளில் உங்களுடைய பட்சி குறிப்பிட்ட நேரத்தில் அரசு என்ற நிலையில் இருந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. அதே போல ஊண் பட்சிநாளில் உங்களுடைய பட்சி குறிப்பிட்ட நேரத்தில் துயில் மற்றும் சாவில் இருந்தாலும் அது பலம் இழந்தது ஆகாது.

அடுத்து பட்சியின் பொதுவான நிர்ணயங்கள். பட்சிகளின் பலம் இறங்கு முகமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
காகம் 
ஆந்தை 
வல்லூறு 
கோழி 
மயில் 
அதாவது காகம் எல்லாவற்றிலும் பலம் மிகுந்தது. மயில் எல்லாவற்றையும் விட பலம் குறைந்தது. இதன் மூலம் முடிவுக்கு வரலாம். இது எதற்கு என்றால் உங்கள் பட்சி காகம் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் பட்சியை விட பலம் குறைந்த ஆந்தை மயில் உடன் போட்டியிட்டு வெற்றி பெறுவது சுலபம். உங்கள் பட்சி படுபட்சியாக இருந்து எதிராளியின் பட்சி ஊண் பட்சி இருந்தால் நீங்கள் வெற்றி பெறுவது கடினம். இது தங்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தலாம். பிறருக்கு தீங்கு செய்வதற்கு அல்ல
தனக்கு சாதகமாக காரியங்கள் சாதித்துக் கொள்வதற்காக இந்த பட்சிகளின் நிலை அறிந்து செயல்பட்டால் வெற்றி கிட்டும். ஊண்பட்சி நாட்களில் வேலைக்கு மனு கொடுத்தால் நமக்கு சாதகமான வாய்ப்பு கிடைக்கும். ஐந்து பட்சிகளும் ஐந்து விதமான தொழில்களை செய்கின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 60 நாழிகை. பகல் 30 நாழிகை இரவு 30 நாழிகை. பகல் 30 நாழிகை 6 நாழிகை வீதம் ஐந்து தொழில்களை செய்கின்றன. ஒரு நாழிகை என்பது இரண்டு மணி 24 நிமிடங்கள் ஆகும்.

வளர்பிறை பகல் பொழுதில் ஊண் நடை அரசு துயில் சாவு என்ற தொழிலை செய்யும். இரவு நேரத்தில் ஊண் அரசு சாவு நடை துயில் என்ற தொழிலை செய்யும். தேய்பிறை பகல் பொழுதில் ஊண்சாவு துயில் அரசு நடை என்ற தொழிலை செய்யும். தேய்பிறை இரவு பொழுதில் ஊண் துயில் நடை சாவு அரசு
என்ற தொழிலை செய்யும்.
வளர்பிறை மற்றும் தேய்பிறையில் ஞாயிறு செவ்வாய் ஒரே தொழிலை செய்யும். வளர்பிறையில் திங்கள், புதன் தேய்பிறையில் திங்கள், சனி பட்சிகளின் செயல் ஒரே மாதிரியாக இருக்கும். மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தவாறு மாறி வரும். இது அன்று சூரிய உதயத்திலிருந்து கணக்கெடுக்க வேண்டும். 

வல்லூறு வளர்பிறை 
நட்பு - மயில், ஆந்தை
பகை - காகம், கோழி

வல்லூறு தேய்பிறை
நட்பு - மயில், காகம்
பகை - ஆந்தை, கோழி

ஆந்தை வளர்பிறை 
நட்பு - வல்லூறு, காகம்
பகை - மயில், கோழி

ஆந்தை தேய்பிறை 
நட்பு - கோழி, காகம்
பகை - வல்லூறு, மயில்

காகம் வளர்பிறை
நட்பு - ஆந்தை, கோழி
பகை - வல்லூறு, மயில்

காகம் தேய்பிறை 
நட்பு - ஆந்தை, வல்லூறு 
பகை - மயில், கோழி

கோழி வளர்பிறை 
நட்பு - மயில், ஆந்தை
பகை - காகம், வல்லூறு 

கோழி தேய்பிறை
நட்பு - மயில், ஆந்தை
பகை - காகம், வல்லூறு
 
மயில் வளர்பிறை 
நட்பு - வல்லூறு, கோழி 
பகை - ஆந்தை, காகம்

மயில் தேய்பிறை 
நட்பு - வல்லூறு, கோழி 
பகை - ஆந்தை, காகம்

நட்பு பட்சிகளுடன் சேர்ந்து இருப்பது நன்மை பயக்கும். பகை பட்சிகளுடன் சேர்ந்து இருப்பதை தவிர்ப்பது நல்லது.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...