இசக்கி அம்மன் என்ற ஒரு காவல் தெய்வத்தை தெய்வமாக வணங்கி வருகின்றனர்.அவரவர் தோட்டத்தில் கன்னி மூலையிலே இந்த தெய்வத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு எண்ணெய் மஞ்சனம் என்ற குங்குமங்கள் சாத்துவார்கள் அம்மனை குளிமை படுத்துவதற்காக நல்லெண்ணெய் சாத்துவார்கள் அம்மனுக்கு சிவப்பு பட்டு உடுத்தி அரளி மாலை அணிவிப்பார்கள்.
இங்கு திருமணம் நடக்காமல் இருப்பவர்கள் மூன்று கடைசி வெள்ளிக்கிழமை வந்தால் திருமணம் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.
இந்தியாவில் தமிழ்நாடு, திருநெல்வேலியிலிருந்து நான்குநேரி செல்லும் வழியில் நெடுங்குளம் என்ற சிற்றூர் உள்ளது. இங்கு குளற்றுக்கரை அருகே வாகையடி இசக்கி அம்மன் அருள்புரிந்து வருகிறாள். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பது போல கோவில் சிறியதாக இருந்தாலும் குறைகளை தீர்ப்பதில் கைதேர்ந்தவளாக இருக்கிறாள்.
இசக்கி அம்மனுக்கு பிடித்த நெய்வேத்தியம் பால் கொழுக்கட்டையும் பச்சரிசி சாதமுமே ஆகும். அன்போடு பக்தர்கள் தரும் காணிக்கை பொருட்களை கண்டிப்புடன் வசூல் செய்வதில் கில்லாடி இசக்கி அம்மன். நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு மறந்து விட்டாலோ அல்லது கால தாமதமாகி விட்டாலோ கனவில் வந்து எச்சரிப்பாள்.
பிள்ளை வரம் பெற்றவர்கள் மரத்தொட்டில் காணிக்கை செலுத்துவார்கள். பலவேறுபட்ட பிராத்தனைகளுக்கு மண் பொம்மைகளே காணிக்கையாக வைக்கபடுகிறது. திருமணம் மற்றும் மங்கள விஷயங்களை முடித்து தரும் தாய்க்கு சிவந்த பட்டுபுடவை திருமேனியில் சாத்தப்படுகிறது. உங்களுக்கு எந்த குறை இருந்தாலும் அவளிடம் வேண்டுதல் வையுங்கள். சந்தேகமே வேண்டாம் அது நிறைவேறுவது சத்தியம்.
Comments
Post a Comment