குபேரன் போற்றி – செல்வம், வளம் மற்றும் அதிர்ஷ்டம் தரும் குபேர ஸ்லோகங்கள் | Kuberan Pottri Tamil Slokas
அளகாபுரி அரசே போற்றி ஆனந்தம் தரும் அருளே போற்றி இன்பவளம் அளிப்பாய் போற்றி ஈடில்லாப் பெருந்தகையே போற்றி உகந்து அளிக்கும் உண்மையே போற்றி ஊக்கம் அளிப்பவனே போற்றி எளியோனுக்கு அருள்பவனே போற்றி ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி ஒன்பது நிதி பெற்றவனே போற்றி ஓங்கார பக்தனே போற்றி கருத்தில் நிறைந்தவனே போற்றி கனகராஜனே போற்றி கனகரத்தினமே போற்றி காசு மாலை அணிந்தவனே போற்றி கிந்நரர்கள் தலைவனே போற்றி கீர்த்தி அளிப்பவனே போற்றி கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி குருவாரப் பிரியனே போற்றி குணம் தரும் குபேரா போற்றி குறை தீர்க்கும் குபேரா போற்றி கும்பத்தில் உறைபவனே போற்றி குண்டலம் அணிந்தவனே போற்றி குபேர லோக நாயகனே போற்றி குன்றாத நிதி அளிப்பாய் போற்றி கேடதனை நீக்கிடுவாய் போற்றி கேட்டவரம் அளிப்பவனே போற்றி கோடி நிதி அளிப்பவனே போற்றி சங்க நிதியைப் பெற்றவனே போற்றி சங்கரர் தோழனே போற்றி சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி சமயத்தில் அருள்பவனே போற்றி சத்திய சொரூபனே போற்றி சாந்த சொரூபனே போற்றி சித்ரலேகா பிரியனே போற்றி சித்ரலேகா மணாளனே போற்றி சிந்தையில் உறைபவனே ப...