Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

ஆண் குழந்தை பிறக்க

ஆண் பெண் இருவரும் சேரும் போது அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டு செயல்பட்டாலே என்ன குழந்தை வேண்டுமோ அதைப் பெற முடியும் என்று நம்முடைய முன்னோர்களும் கூறியிருக்கிறார்கள். ஆண்  சேரும் போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண் குழந்தை இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். இரு நாசிகளிலும் இணைந்து சுழுமுனை சுவாசம் ஓடினால் குழந்தை அலியாகப் பிறக்கும். பெண் குழந்தை பிறக்க வேண்டுமென்றால் உடலுறவில் ஈடுபட்ட பின்னர் பெண் இடதுபக்கம் சாய்ந்தும் ஆண் குழந்தை வேண்டுமென்றால் வலதுபக்கம் சாய்ந்தும் இருக்க வேண்டும் ஆண் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள் சூரியன் சிம்மத்திலும், சந்திரன் கன்னி, விருச்சிகம், தனுசுவில் இருக்கும்போது உடலுறவில் ஈடுபடலாம். பெண் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள் தேய்பிறை சந்திரன் நேரத்திலும், துலாம், கும்பத்தில் இருக்கும்போதும் உடலுறவில் ஈடுபடலாம்.


இரவில் அரை வயிறளவு மட்டும் தான் சாப்பிட்டு  பால்  வாழைப் பழம் சாப்பிட்டு. இரவு முழுக்க இடது கை பக்கமாகத் திரும்பிப் படுக்க வேண்டும்.  வலது புறத்தில் சூரியக்கலை இயங்கிக் கொண்டிருக்கும் போது விடியற்காலை 4 மணிக்கு எழுந்து சிறிது மனதை கட்டுப்படுத்தி ஆணும் பெண்ணும் சேர்ந்தால் ஆண் குழந்தை பிறக்கும்.


அரைவயிறு சாப்பிட்டுத் தூங்கும் போது அதிகாலையில் வயிறு பசிக்கும். சூரியக்கலையில் வயிறு பசிக்கும் போதுகணவன் மனைவி சேர்ந்தால்  ஆண் குழந்தை பிறக்குமாம். ஆண் குழந்தை வேண்டுமென்றால் பெண் மாதவிலக்கான நாளிலிருந்து 6,8,10,12, 14, 16, 18 ஆவது நாட்களில் சேர்ந்தால்  ஆண் குழந்தை பிறக்கும் என்கின்றனர் சித்தர்கள். ஆண் குழந்தை பிறப்பதற்கு வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், வைட்டமின் டி மற்றும் பொட்டாசியமான அதிக அளவில் காளானில் இருப்பதால், வைட்டமின் சி நிறைந்த உணவு பொருட்கள், இனிப்புகள் சாப்பிட ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. 

ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்க  கடல் உணவுகளான கடல் சிப்பியை ஆண்கள் அதிகம் எடுத்து வருவது நல்லது.

நாம் சுவாசத்தை சரியாக கணிக்க முடியாது. தவம் மேற்கொள்பவர்களே மூச்சை இழுத்து பிடித்து வலது நாசி இடது நாசி என்று சுவாசம் செய்ய பயிற்சி எடுத்து இருப்பார்கள். சுவாதி நட்சத்திரத்து ராகுவை வணங்கி முழு உளுந்து தானம் செய்து அன்று ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை பிறக்க வாய்ப்பு உருவாகும். ராகு என்பவர் போகத்திற்கு காரணமானவர்.ஆண் பெண் குழந்தைகள் பிறப்பதே மகிழ்ச்சி.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...