Skip to main content

Posts

Showing posts from December, 2025

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

நோய்கள் நீங்க எதிரிகள் ஒழிய வழிபாடு | Varahi Amman – Destroy Enemies & Remove Diseases

வராஹம் எனப்படுவது பன்றியின் அம்சமாகும். அன்னை வராஹி பன்றி முகத்தோடு மூன்று கண்களுடன் காட்சியளிப்பவள். மிருகசக்தியும்,தேவகுணமும் கொண்ட வாரஹி பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். வராஹி எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள். சிவனின் அம்சமான வராஹி அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள்.  வராஹி என்றாலே வரம் என்று பொருள். இவள் அதர்வண வேதத்தின் தலைவியாகவும் விளங்குகிறாள். வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும். இதனால் தன வசியம் ஏற்படும் தொழில் விருத்தியாகும் வியாபாரம் செழிக்கும். வராஹிதேவிக்கு இஞ்சி பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை நைவேத்தியம் செய்யலாம் நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் பிடித்தமானது. மிளகும் ஜீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூவும் சர்க்கரையும் ஏலக்காயும் லவங்கமும் பச்சைக்கற்பூரமும் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாக படைக்கலாம். சுக்கு அதிகம் சேர்த்து ...

21 தலைமுறையாய் தொடர்ந்த பூர்வ ஜென்ம பாவம் தீரும்

கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் 32 கிலோமீட்டர் தொலைவில் அன்னூர் என்ற ஊர் இருக்கிறது. அன்னூரில் பாவிக்கும் சிவபெருமான் கோவிலுக்கு செல்லுங்கள். இத்திருத்தலத்தில் இருக்கும் சிவனை மன்னிஸ்வரர் என்ற பெயர் கொண்டு அழைக்கிறார்கள். இந்த கோவிலுக்கு சென்று 21 மண் அகல்விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த ஸ்தலத்தை 21 முறை வளம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுப்பதன் மூலமாக நம்முடைய கர்ம வினைகள் படிப்படியாக குறைய தொடங்கும். ஒரு நாள் இதை செய்துவிட்டு அப்படியே விடக்கூடாது. உங்கள் வாழ்நாள் முழுவதும் வாயில்லா ஜீவன்களுக்கு உங்கள் கைகளால் சாப்பாட்டு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் பச்சரிசி, எள்ளு, திணை இந்த 3 பொருட்களையும் ஒன்றாக கலந்து கோவிலுக்கு செல்லும்போது எடுத்துச் சென்று  மரத்தடியில் உங்கள் கையால் தூவ வேண்டும். அதை எறும்புகளும், சின்ன சின்ன பூச்சிகளும் பசிக்கு சாப்பிட்டும். பாதி கர்ம வினை தீர்ந்துவிடும். பசு மாட்டிற்கு உங்கள் கைகளால் பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய பொருளை வாங்கி கொடுக்க வேண...

பன்னீர் இலை விபூதியின் மகிமை

இவர் கி.பி.8 ம் நூற்றூண்டில் வாழ்ந்தவராக கருதப்படும் ஆதிசங்கரர் கேரளாவில் காலடி என்ற சிற்றூரில் அவதரித்தார். அபிநவகுப்தன் என்னும் பகைவனால் வளர்க்கப் பெற்ற வேள்வியால் காசநோயால்  அவதிபட்டு வந்தார் ஆதிசங்கரர். எல்லா ஆலயங்களுக்கும் சென்று வந்தார்.அவருக்கு குணமாகவில்லை.பின்பு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று அங்கு 48 நாட்கள் இலைவிபூதி உண்டார். அதனால் வயிற்று வலி குணமானது. இன்றும் அங்கு இலைவிபூதி கொடுக்கப்படுகிறது.அங்கு குகை கோயிலில் பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டு 33 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்கம் பாடினார். "கண்டால்நின் இலைநீறு கைகால் வலிப்புக்  காசம் கயம்குட்ட முதலாய நோயும்  விண்டோடு மேபூத பைசாசம் யாவும்  வினையாவு மேசெந்தி லமர்தேவ தேவே"  பாடல் எண்   --- 25 பன்னீரிலை விபூதியினால் கை கால்கள் வலிப்பு, காசநோய், குஷ்டம், வயிற்றில் வலி, பயம், பூத தொல்லை முதலியவற்றில் நிவர்த்தி அடையும்.  ஆதிசங்கரர் சிலை மூலவரின் எதிரில் ஒரு தூணில் உள்ளது.இதை காண வேண்டுமானால் தர்மதரிசன வழியாக சென்றால் ஒரு மர பெட்டியால் தூணோடு மாட்டி வைத்திருப்பதை ...

கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில்

இக்கோயிலில் வழிபாட்டு முறைகள் கேரள கலாச்சாரத்தை ஒத்துள்ளது. கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மனுக்கு இரண்டு கோயில்கள் உள்ளன. ஒரே வழிபாட்டு முறை கொண்ட அம்மனுக்கு இங்கு மட்டுமே இரண்டு கோயில்கள் உள்ளது மற்றுமொரு சிறப்பாகும்.   கொல்லங்கோடு கண்ணனாகம் ஜங்ஷனில் இருந்து மேற்கு நோக்கி சுமார் 500 மீட்டருக்கு அப்பால் வட்டவிளையில் மூலகோயிலும், கண்ணனாகத்தில் இருந்து கிழக்கு நோக்கி 0.5 கி. மீட்டருக்கு அப்பால் வெங்கஞ்சியில் திருவிழா கோயிலும் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் பங்குனி பரணியை முன்னிட்டு 10 நாட்கள் நடக்கும் தூக்க திருவிழாவிற்காக அம்மன் மூலகோயிலில் இருந்து வெங்கஞ்சி திருவிழா கோயிலுக்கு எழுந்தருளுவார். இதேப்போன்று ஆண்டுதோறும் மகரவிளக்கை முன்னிட்டு 41 நாட்கள் நடக்கும் மண்டலகால சிறப்பு பூஜைக்கும் அம்மன் எழுந்தருளுவார். இந்த பூஜை இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை வெங்கஞ்சி திருவிழா கோயிலில் நடக்கிறது. ஏனைய நாட்கள் அம்மன் மூலகோயிலில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பச்சிளம்  குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. அதுவும் கொல்லங்கோட்டில் மட்டுமே ஒரே நேரத்தில் நான்கு குழந...

ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திர சத நாமாவளி

1.    ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நம: 2.    ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி தேவ்யை நம: 3.    ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நம: 4.    ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நம: 5.    ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நம: 6.    ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு வல்லபாயை நம: 7.    ஓம் ஐம் க்லௌம் பலாயை நம: 8.    ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நம: 9.    ஓம் ஐம் க்லௌம் வாமாயை நம: 10.    ஓம் ஐம் க்லௌம் தர்மிண்யை நம: 11.    ஓம் ஐம் க்லௌம் அதிசயகார்ய ஸித்திதாயை நம: 12.    ஓம் ஐம் க்லௌம் பகவத்யை நம: 13.    ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புர ரக்ஷிண்யை நம: 14.    ஓம் ஐம் க்லௌம் வனப்ரியாயை நம: 15.    ஓம் ஐம் க்லௌம் காம்யாயை நம: 16.    ஓம் ஐம் க்லௌம் காஞ்சன்யை நம: 17.    ஓம் ஐம் க்லௌம் கபாலின்யை நம: 18.    ஓம் ஐம் க்லௌம் தாராயை நம: 19.    ஓம் ஐம் க்லௌம் லக்ஷ்ம்யை நம: 20.  ...

கரணம் மற்றும் வாழ்க்கை பலன் | ராசி மற்றும் ஜாதகத்தில் முக்கியத்துவம்

உங்கள் தலைப்பு இங்கே உங்கள் ராசியை போல கரணமும் முக்கியம். ஒருவரது ஜாதகத்தில் ராசி, நட்சத்திரம், லக்கினம் எவ்வளவு முக்கியமோ அதே போல கரணமும் முக்கியம். அந்த வகையில் கரணம் என்றால் என்ன. எந்த வகையான கர்ணத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்ப்போம். சந்திரனின் 16 நாட்கள் வளர்பிறை நிலை, 16 நாட்கள் தேய்பிறை. சந்திரனின் வளர்பிறை, தேய்பிறைக் காலங்களிலில் வருவது கரணங்கள். கரணங்கள் என்பது ஒரு மாதத்தில் வரும் திதிகளில் அரைப் பகுதியாகும். 11 கரணங்கள் இருக்கின்றன. 7 கரணங்கள் “ஸ்திர” கரணங்கள் அதாவது நிலையான கரணங்கள் 4 கரணங்கள் “சர” கரணங்கள் அதாவது நகரும் கரணங்கள். கரணங்களுக்குக்கான உருவமாக சில விலங்குகள், பறவைகள் உருவங்களும். அதிதேவதைகளும் ஜோதிட சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நீங்கள் பிறந்த நேரத்தை வைத்து உங்களுக்கான கரணத்தின் குணாதிசியங்கள் இருக்கும். முக்கிய தகவல்கள் ஒருவரது ஜாதகத்தில் ராசி, நட்சத்திரம், லக்கினம் எவ்வளவு முக்கியமோ அதே போல கரணமும் முக்கியம். பொருத்தம் பொதுபலன்கள் பவம் கரணம் அதிதேவதை இ...

நட்சத்திர அதிபதிகள் - Nakshatra Adhipathi List in Tamil

  அஸ்வினி – கேது பரணி – சுக்கிரன் கார்த்திகை – சூரியன் ரோகிணி – சந்திரன் மிருகசீரிஷம் – செவ்வாய் திருவாதிரை – ராகு புனர்பூசம் – குரு பூசம் – சனி ஆயில்யம் – புதன் மகம் – கேது பூரம் – சுக்கிரன் உத்திரம் – சூரியன் அஸ்தம் – சந்திரன் சித்திரை – செவ்வாய் சுவாதி – ராகு விசாகம் – குரு அனுஷம் – சனி கேட்டை – புதன் மூலம் – கேது பூராடம் – சுக்கிரன் உத்திராடம் – சூரியன் திருவோணம் – சந்திரன் அவிட்டம் – செவ்வாய் சதயம் – ராகு பூரட்டாதி – குரு  உத்திரட்டாதி – சனி ரேவதி – புதன்

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் | வரலாறு, வழிபாடு மற்றும் விழாக்கள்

பகவதி அம்மன் புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தருகின்ற புற்றுவடிவ மூலவர் தேவிக்கு முன்பாக வெண்கலச்சிலையாக நின்ற கோலத்திலும், வெள்ளிச்சிலையாக அமர்ந்த கோலத்திலும் பகவதியம்மன் அருள் பாலிக்கிறார். இவ்வளவு பிரம்மாண்டமான புற்று வேறு எங்கும் இல்லை என்றும், இப்புற்றில் இதுவரை எந்த பாம்பும் வசித்ததில்லை என்றும் கூறுகின்றனர். பொதுவாக புற்றுக்கோயிலில் பக்தர்கள் பால் ஊற்றுவதும், முட்டைகளை வைத்து வேண்டுவதும் உண்டு. ஆனால் இங்கு பால் ஊற்றுவதோ, முட்டைகளை உடைப்பதோ கிடையாது. ஆனால் இந்த புற்றுக்கு தினமும அபிஷேகம் நடைபெறுகிறது. பூசாரி ஓர் ஏணி மரத்தை வைத்து அதில் ஏறி அம்மனுக்கு பூமாலைகளைச் சாற்றுகிறார்.   காணிக்கை 15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அமைந்துள்ள பகவதி அம்மன் இக்கோயிலின் சிறப்பாகும். பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது.  மாசி மாத கொடை விழா இந்த ஆலயத்துக்குப் புகழ் சேர்க்கும் ஒரு திருவிழா. பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து, கால்நடையாக இங்கு ஆயிர...

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில் | சனி ஸ்தலம் | நவகைலாயம் 6வது ஸ்தலம் திருத்தல இருப்பிடம்

ஸ்ரீவைகுண்டம் – சனி தோஷ நிவாரணம் தரும் நவகைலாயம் 6வது ஸ்தலம் நவகயிலாயத்தில் ஆறாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சனி பகவான் அம்சமாக விளங்குகிறார்.  "தோமாம் பொழிலுடுத்த தென் வைகுந்தக் கயிலை"  என்கிறார் குமரகுருபர சுவாமிகள். நவதிருப்பதி நாயகரின் பெயர் வைகுண்டபதி. நவ கைலாயபிரானின் பெயர் கைலாசநாதர் சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. கைலாச நாதர் சுயம்புலிங்கம். ஓவியங்கள் கோயிலின் உட்புறத்தில் கிழக்கில் திருக்கல்யாண மண்டப விதானத்தில் மூலிகைகளால் வரையப்பட்ட நவ கைலாய ஓவியங்கள் உள்ளன. நந்தவனத்துக்குச் செல்லும் முன்மண்டபத்தில் உரோமச முனிவர் வடிவமைக்கப்பட்டுள்ளார். வடக்குப் பகுதியில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சி அம்பிகையும் உள்ளனர். இங்கு கைலாசநாதர், சிவகாமி அம்மை, விஸ்வநாதர், விசாலாட்சி, அம்பிகை ஆகியயோரின் கருவறைகளின் மேல் அழகான விமானங்கள் உள்ளன. சிற்பங்கள் இக்கோயிலில் பூதநாதர் உள்ளார். இவர் இந்தக் கோயிலின் காவல் தெய்வம் மட்டுமல்ல இந்த ஊர் மக்களின் காவல் தெய்வம் சாஸ்தாவும் ஆவார். நவக்கிரகங்களும் இந்தக் கோயிலில் உள்ளன. இந்த கோயிலின் காவல் ...

18 சித்தர்கள் – தமிழ் சித்தர்களின் வரலாறு, சித்த மருத்துவம், யோகம், ஞானம்

அகத்தியர் போகர் கோரக்கர் கைலாசநாதர் சட்டைமுனி திருமூலர் நந்தி தேவர் கூங்கன்னர் கொங்கணவர் மச்சமுனி வாசமுனி கூர்ம முனி கமல முனி இடைக்காடர் புண்ணாக்கீசர் சுந்தரானந்தர் உரோமரிஷி பிரமமுனி

வம்சம் தழைக்க செய்யும் வாகையடி இசக்கியம்மன்

இசக்கி அம்மன் என்ற ஒரு காவல் தெய்வத்தை தெய்வமாக வணங்கி வருகின்றனர்.அவரவர் தோட்டத்தில் கன்னி மூலையிலே இந்த தெய்வத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு எண்ணெய் மஞ்சனம் என்ற குங்குமங்கள் சாத்துவார்கள் அம்மனை குளிமை படுத்துவதற்காக நல்லெண்ணெய் சாத்துவார்கள் அம்மனுக்கு சிவப்பு பட்டு உடுத்தி அரளி மாலை அணிவிப்பார்கள். இங்கு திருமணம் நடக்காமல் இருப்பவர்கள் மூன்று கடைசி வெள்ளிக்கிழமை வந்தால் திருமணம் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். இந்தியாவில் தமிழ்நாடு, திருநெல்வேலியிலிருந்து நான்குநேரி செல்லும் வழியில் நெடுங்குளம் என்ற சிற்றூர் உள்ளது.  இங்கு குளற்றுக்கரை அருகே வாகையடி இசக்கி அம்மன் அருள்புரிந்து வருகிறாள். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பது போல கோவில் சிறியதாக இருந்தாலும் குறைகளை தீர்ப்பதில் கைதேர்ந்தவளாக இருக்கிறாள்.  இசக்கி அம்மனுக்கு பிடித்த நெய்வேத்தியம் பால் கொழுக்கட்டையும் பச்சரிசி சாதமுமே ஆகும்.  அன்போடு பக்தர்கள் தரும் காணிக்கை பொருட்களை கண்டிப்புடன் வசூல் செய்வதில் கில்லாடி இசக்கி அம்மன்.  நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு மறந்து விட்டாலோ ...

ஜோதிடத்தில் முப்பிறவி, மறுபிறவி & அடுத்த பிறவி – கர்ம விதி மற்றும் வாழ்க்கைச் சுழற்சி விளக்கம்

அறிமுகம் இந்த உலகில் பிறப்பு, மறுபிறப்பு, முப்பிறவி என்கிற கருத்துகள் ஆயிரம் ஆண்டுகளாகவே வேத ஜோதிடத்தில் பேசப்பட்டு வருகிறது. ஒருவரின் முற்பிறவி (Past Life), இப்பிறவி (Present Life), அடுத்த பிறவி (Next Birth) பற்றிய தகவல்கள் அனைத்தும் லக்னம், லக்னாதிபதி, கேது, 5ஆம் இடம், 12ஆம் இடம் போன்ற கிரகஸ்தானங்களின் மூலம் அறிய முடியும். ஜோதிடத்தில் முப்பிறவி வேத ஜோதிடத்தில் முப்பிறவி என்பது முற்பிறப்பு (Past Life), இப்பிறப்பு (Present Life), மறு பிறப்பு / அடுத்த பிறவி (Next Birth) என்பவற்றின் சுழற்சியைக் குறிக்கிறது. ஜோதிட சாஸ்திரப்படி, மனித ஆன்மா பிறவி பெறுவது பாப புண்ணியம், கர்ம பலன், கிரக நிலை, பூர்வ ஜென்ம செயல்கள் அவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவரின் அடுத்த பிறவி பொதுவாக லக்னாதிபதி, யாருடன் சேர்ந்து இருக்கிறான்,யாரின் பார்வை பெற்றிருக்கிறான், எந்த இடத்தில் transit ஆகியிருக்கிறான், லக்னாதிபதியின் பார்வை எங்கு விழுகிறது இதன் மூலமாக தெரிந்துகொள்ளப்படுகிறது. லக்னாதிபதி மூலம் முப்பிறவி கணிப்பது லக்னாதிபதி மிகவும் முக்கியமான கிரகமாகும். முற்பிறவியில...

12 ராசிக்காரர்கள் தங்கள் ராசிக்குரிய மரத்தை வளர்த்தால் – ராசி அடிப்படையில் உங்களுக்கு ஏற்ப மரங்கள்

12 ராசிக்காரர்களுக்கும் தங்கள் ராசிக்குரிய மரத்தை வளர்த்தால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு மரம் ராசியானதாக இருக்கும். அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய அல்லது நட வேண்டிய மரங்கள் என்னென்ன? இதனால் அவர்களுக்கு நடக்கப் போகும் அதிசயங்களும் என்ன? என்பது தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். நம் ராசிக்குரிய மரங்களை வீட்டில் வளர்ப்பதை விட, சமுதாயத்திற்காக சாலை ஓரங்களில் வளர்த்து தானம் செய்யும் பொழுது கூடுதல் பலன்கள் கிடைக்கும். வாருங்கள் பதிவுக்குள் போகலாம். மேஷம் (Aries) மேஷ ராசியில் பிறந்தவர்கள் உங்கள் ராசிக்குரிய செவ்வரளி செடியை வீட்டில் பின்புறமாக அல்லது நெடுஞ்சாலைகளில் நட்டு வளர்க்கப்பட்டு வந்தால் வாழ்க்கையில் சகல யோகங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். செவ்வரளி மலரை பைரவருக்கு சாற்றி வழிபட்டு வந்தால் தீராத நோயெல்லாம் தீர்ந்துவிடும். ரிஷபம் (Taurus) ரிஷப ராசியில் பிறந்தவர்கள் உங்கள் ராசிக்குரிய அத்தி மரத்தை வீட்டில் அல்லது சாலையோரங்களில் வளர்த்து வருவதன் மூலம் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இறையர...

முருகன் போற்றி – பக்தி, அருள் மற்றும் வெற்றிக்கான துதிகள் | Murugan Pottri Tamil Devotional Slokas

ஓம் அழகா போற்றி ஓம் அறிவே போற்றி ஓம் அரன் மகனே போற்றி ஓம் அயன்மால் மருகா போற்றி ஓம் சக்திவேலவா சரவணா போற்றி ஓம் முக்தி அருளும் முருகா போற்றி ஓம் பன்னிருகை வேலவா போற்றி ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி ஓம் இடும்பனை வென்றவனே போற்றி ஓம் இடர் களைவோனே போற்றி ஓம் உமையவள் மகனே போற்றி ஓம் உலக நாயகனே போற்றி ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி ஓம் ஓம்கார சொருபனே போற்றி ஓம் மூலப்பொருளே குகனே போற்றி ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி ...