Skip to main content

Posts

Showing posts from November, 2025

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

27 நட்சத்திரங்களுக்கு உரிய தொழில்கள் – Nakshatra Wise Career Guide

பொருத்தம் பொதுபலன்கள் அஸ்வினி   உடல் கல்வி ஆசிரியர், விளையாட்டு வீரர், விளையாட்டு பயிற்சியாளர், ஆலோசகர்கள், நீர் சுத்திகரிப்பு, வேதியல் துறை, மருத்துவ அறிவு பெற்றவர், ஓட்டுநர் பயிற்சியாளர், காவல்துறை, ராணுவ வீரர், ஸ்டண்ட், நடனம், கட்டிட தொழில், கான்கிரீட் தொழில், பொறியியல் துறை, இயந்திர மேலாளர். பரணி     அமானுஷ்ய வல்லுனர்கள், மேனேஜர், குழந்தைகள் பராமரிப்பு, மகப்பேறு மருத்துவர், பெண்கள் மருத்துவம், பதிவாளர், ஹோட்டல் துறை, இறைச்சி துறை, தேயிலை, கால்நடை, திரைத்துறை, இசைத்துறை, பொழுதுபோக்கு சாதனங்கள் விற்பனை, உர விற்பனை, நீதிபதி, பதப்படுத்துதல், உற்பத்தி செய்தல். கார்த்திகை   கட்டுமான பொருள் விற்பனை, நெருப்பு சார்ந்த தொழில், தையல் தொழில், எம்ராய்டிங், ப்யூட்டிஷியன், மேக் அப் ஆர்டிஸ்ட், கூர்மையான ஆயுதங்கள் தயாரிப்பு, நகை விற்பனை, கண்ணாடி உற்பத்தி, ராணுவ ஜெனரல், மேனேஜர், விமர்சகர், பைனான்ஸ், வங்கி, பாத்திர வியாபாரம் அல்லது உற்பத்தி ரோகிணி பைலட், கப்பற்படை, உணவு பதப்படுத்துதல் துறை, அறி...

பந்தளத்தில் புலியுடன் காட்சி தருகிறார் மணிகண்டன் | Pandhalam for Festivals

அறிமுகம் பெரும்பாலான பக்தர்கள் பந்தளத்தை தவிர்த்துவிட்டு கோட்டையம் மற்றும் எர்ணாகுளம் வழியாக சபரிமலைக்குச் செல்கிறார்கள். ஐயப்பன் வளர்ந்த இடம் தான் இந்த பந்தளம். பந்தள மகா ராஜாவின் குடும்ப கோவில் இங்கு உள்ளது. பந்தளத்தில் அமைந்துள்ள சன்னிதியில் புலியுடன் நிற்பது போல் காட்சி தருகிறார் மணிகண்டன். பந்தள மகா ராஜாவிடம் வளர்ந்த போது தாம் கடவுளின் அவதாரம் என்று தெரியாமலேயே சுமார் 12 ஆண்டுகள் ஓடி ஆடி விளையாடிய புனிதமான  இடம். மணிகண்டன்  வளர்ந்த அரண்மனையும் அவர் படித்து பயன்படுத்திய ஒலைகளும் இன்னும் இங்கு உள்ளன. இங்குள்ள குளமானது ஐயப்பன் குளிப்பதற்கு ஆகவே ஏற்படுத்தப்பட்டதாகும். அந்த குளத்தில் நீர் எப்பொழுதும் வெதுவெதுப்பாக இருக்கும். மற்ற இடங்களில் உள்ள நீர் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். மகரவிளக்கு திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியான திருஆபரண பெட்டி இங்கிருந்துதான் புறப்படுகிறது. மார்கழி 26ம் தேதி பந்தளத்தில் இருந்து புறப்படும் திருவாபரணம் தை முதல் தேதி சபரிமலை வந்து சேருகிறது. மகர சங்கிரம தினத்தில் ஜோதியாய் ஐயன் தெரியும் போது மட்டுமே சபரிமலை ஐயப்பனுக்கு திருவாபரணம் சா...

ஐயப்பன் பதினெட்டு படிகளின் தத்துவம் – 18 படிகளின் அர்த்தம், தெய்வங்கள் மற்றும் ஆன்மீகப் பொருள்

சபரிமலைக்கு செல்லும் ஒவ்வொரு பக்தனும் கடைசியில் எதிர்கொள்ளும் மிகப் புனிதமான பகுதி — பதினெட்டு கனக படிகள் (18 Golden Steps). சபரிமலை ஐயப்பனின் பதினெட்டு படிகள் (18 Padikal) என்பது ஆன்மீகமும் ஞானமும் கோர்த்த புனிதப் பாதை. ஐயப்பன் பதினெட்டு படிகளின் தத்துவம் – ஆன்மீகப் பயணத்தின் நிறமிகு, உயிர்மிகு கதை. இந்த 18 படிகள் வெறும் படிகள் அல்ல…இவை மனிதனின் உள்ளார்ந்த மாற்றத்தையும், பஞ்ச இந்திரியம் முதல் திரிகுணம் வரை ஆன்ம சுத்தத்தையும் குறிக்கின்றன.  ஒருவரின் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் தத்துவங்கள் உள்ளார்ந்த மாற்றத்திற்கான ஆன்மீக பயணம் குண பரிசுத்தத்தின் பாதை. அறிவு–அனுபவ–முருகன்–சிவன்–விஷ்ணு சக்திகள் இணையும் இயற்கை. எல்லாம் இதனுள் மறைந்திருக்கின்றன. ஐயப்பனின் சக்தி மிளிரும் 18 போர்க் கருவிகள் இவை வெறும் போர்க் கருவிகள் மட்டுமல்ல— 🕉️ நம்முள் இருக்கும் 18 குறைகளையும் அழித்து 🕉️ ஞானத்தின் ஒளி பரவ செய்யும் ஆன்மீக ஆயுதங்கள் ஆகப் போற்றி கூறப்படுகின்றன. வில் (Bow) – சிந்தனையை குறிவைக்கும் சக்தி மனதை ஒரு நோக்கில் நிறுத்தும் ஒருமுகத்தன்மையின் குறியீடு, திசை திர...

அம்மன் கோவில் வழிபாடு | Famous Amman Kovil

பண்டைய தெய்வங்களிடம் அருள்பெறக் கோவில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். தமிழ்நாட்டில் பல தலங்கள் குழந்தைவரம் அருளும் தலங்களாக பரவலாக அறியப்படுகின்றன.தோஷம் நீக்கும் கோயில்களில் வழிபாடு திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில் தமிழ்நாடு மாவட்டங்கள் (38 Districts of Tamil Nadu) தமிழ்நாடு மாநிலத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. அவை வரிசையாக: அரியலூர் செங்கல்பட்டு சென்னை கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கன்னியாகுமரி முப்பந்தல் இசக்கி அம்மன் மேலாங்கோடு இசக்கி அம்மன் கரூர் கருவூரம்மன் கோவில் – கரூர் கிருஷ்ணகிரி மதுரை மயிலாடுதுறை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தென்காசி தஞ்சாவூர் தேனி திருவள்ளூர் திருவண்ணாமலை திருவாரூர் தூத்துக்குடி திருச்சிராப்பள்ளி சமயபுரம் மாரியம்மன் கோவில் – திருச்சி திருநெல்வேலி அருள்மிகு பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவில் திருப்பத்தூர் திருப்பூர் திருவள்...

பொன்னம்பலமேடு – வரலாறு, சன்னிதானம், சபரிமலை

அறிமுகம் சபரிமலை தரிசனத்துடன் ஆழ்ந்த தொடர்புடைய புனித மலைகளில் ஒன்றானது பொன்னம்பலமேடு (Ponnambalamedu). இது சபரிமலை அய்யப்பன் சன்னிதானத்துக்கு அருகே அமைந்துள்ள மிக உயர்ந்த ஆன்மிக சக்தி மிக்க மலை. மகா தீபாராதனை, மந்திர சத்துவம், பழமையான வழிபாட்டு மரபுகள் போன்றவை காரணமாக பொன்னம்பலமேடு சிறப்பிடமாக கருதப்படுகிறது.    ஐயப்பன் ஜோதியாய் இருக்கும் இடம்தான் இந்த பொன்னம்பலமேடு. இங்கு கண்ணுக்கு தெரியாத ஒரு கோயில் இருப்பதாகவும் இங்கு சாஸ்தா தியானத்தில் ஆழ்ந்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பொன் என்றால் தங்கம், அம்பலம் என்றால் கோவில், மேடு என்றால் மலை பரசுராமர் இங்கு ஐயப்பனை கற்சிலையாக வடித்து ஆவாகனம் செய்து பூமிக்கடியில் வைத்ததாக  கூறுகின்றனர். சாஸ்தா சிலை ஆவாகனம் செய்யும்போது பரசுராமர் பாடிய பாடல்தான் லோகவீரம் ஸ்லோகம் அதனால் இங்கே லோகவீரம் சஸ்லோகம் சொல்லி நாம் எது வேண்டினாலும் அது நிச்சயம் நிறைவேறும் என்பது உண்மை. பொன்னம்பலமேடு பொன்னம்பலமேடு  என்பது சபரிமலைக்கு அருகில் உள்ள ஒரு உயரமான மலைச்சிகரம். இங்கு பழமையான வழிபாட்டு முறைகள்,குலபூசை மரபுகள்,மகர ஜோதி தீபாராதனை ச...

திருமங்கலக்குடி | தோஷம் நிவர்த்தி ஸ்தலம்

பித்ரு தோஷம் என்பது நளமகாராஜாவை பற்றிய சனி தோஷத்தைவிட கொடுமையானது; யாரையேனும் கொல்வதால் வரக்கூடிய ப்ரம்ம ஹத்தி தோஷம் என்பதனைவிடக் கொடியது. ராவணேஸ்வரனை கொன்ற கடவுளான ராமனும் சூரபத்மன் என்ற கொடியவனை அழித்த முருகனுமே பிரம்மஹத்தி தோஷத்திற்கு பயந்து பல பரிகாரங்கள் செய்தனர். முனிவர்களும் சித்தர்களும். தோஷத்தைவிட கொடுமையானது பித்ரு தோஷம். அதை அறவே அழிக்க வல்லவர் சூரிய பகவான். திருமங்கலக்குடி’ என்ற நாகபூமியில், சூரியன், நவநாயகர்கள் புடை சூழ கம்பீரமாக வீற்றிருக்கிறார். பக்தர்களை காப்பதற்காக சப்தம் என்ற ஏழு வர்ணங்களை கொண்ட ஏழு குதிரைகளைக் கொண்டு, ஒற்றை சக்கரத்தை உடைய, அச்சு இல்லாத தேரில், தாமரை மலரை கையில் தாங்கி, பக்தர்களின் குறைகளை குருபகவான் எடுத்துரைக்க, மேற்கு நோக்கி, திருமகள் அம்சமுடைய உஷாதேவி மற்றும் சாயாதேவியுடன் காட்சி தர, ஏனைய கிரஹாதி தேவர்கள், மூலவரான சூரியனை சுற்றி வருகின்றனர். சனி பெயர்ச்சியால் ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்புகளை, சிவன்-பார்வதி- முருகனுக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து பின் சூரியனாரை மனமுருக பிரார்த்தித்தால், எப்படிப்பட்ட சனி தோஷமும் விலகும். சுக்ரீவன், அனுமனுடன் இந்த தலத...

குழந்தை பாக்கியம் தரும் முப்பந்தல் இசக்கி அம்மன் | சிறந்த தலங்கள் மற்றும் வழிபாடுகள்

பந்தல் முவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வரி வசூல் செய்ய காற்றோட்டமான இடத்தைத் தேடி சென்றனர். அப்போது கிடைத்த நல்ல இடத்தில் பந்தல் அமைத்து வரி வசூல் செய்தனர். அது காலப்போக்கில் “முப்பந்தல்” எனப் பெயரடைந்தது என்று செவி வழிச் செய்தி கூறுகிறது. கோவிலின் பக்கத்தில் உள்ள பணகுடியில் இருந்த அருணாச்சலத்தின் மனைவிக்கு தொடர்ந்த வயிற்றுவலியால் கவலையடைந்தார். அவரது பேத்தி கனவில் இசக்கியம்மன் “முப்பந்தல் மரத்திற்குக் கீழே நான் இருக்கிறேன்” எனக் கூறியதாக தெரிகிறது. அந்த இடத்தில் கண்ட கல்லை சிலையாக்கி கோவில் அமைக்கப்பட்டது. சிறு குழந்தைகள் மண்ணில் அம்மன் சிலைபோல் வடிவமைத்து விளையாடினர். மறுநாள் அந்த இடத்தில் ஒருவரின் கால் தட்டியதும், அங்கு சாமி வந்து “நான் இந்த இடத்தில் இருக்கிறேன்” என்று கூறியதாக நம்பப்படுகிறது. அதனால் அந்த இடத்தில் கல் வைத்து வழிபாடு தொடங்கப்பட்டது. இன்றும் இங்கு மக்கள் அதிக அளவில் வருகின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் அல்லாமல் தினமும் கூட்டம் காணப்படுகிறது....

வாஸ்து குறிப்பு | வீட்டிற்கு நல்ல வாய்ப்புகள் மற்றும் அமைதி

வாஸ்து என்பது வீட்டில் அமைதி, வளம் மற்றும் ஆரோக்கியம் பெறும் வழிகாட்டியாகும். ஒவ்வொரு வீட்டுக்கும் சரியான வாஸ்து அம்சங்களை பின்பற்றுவதன் மூலம் உங்கள் குடும்ப வாழ்க்கை நல்ல நேரம், செல்வம் மற்றும் சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும். வீட்டின் முக்கிய வாஸ்து குறிப்புகள்: முகப்புக் கோணம்: வீட்டின் முகப்புக் கோணம் தெளிவாகவும், அழகாகவும் இருக்க வேண்டும். இது நல்ல வாய்ப்புகள் மற்றும் செல்வம் வர உதவும். சமையலறை: சமையலறை வீட்டின் தென்முனையில் இருக்க வேண்டும். உணவு மற்றும் ஆரோக்கியம் மேம்படும். கடவுளுக்கான இடம்: பூஜை அறை வடக்கே அல்லது கிழக்கே அமைக்க வேண்டும். இதனால் மன அமைதி மற்றும் ஆன்மீக வளர்ச்சி ஏற்படும். பக்கப்பகுதிகள்: முக்கிய அறைகள், படுக்கை அறை மற்றும் படுக்கை இடங்கள் வாஸ்து விதிகளுக்கு ஏற்ப அமைக்கப்பட வேண்டும். வாஸ்து பின்பற்றும் நன்மைகள்: வீட்டில் நல்ல சக்தி நிலைமை உருவாகும். குடும்பத்தில் ஆரோக்கியம், அமைதி மற்றும் செழிப்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் நிதி வளம் மேம்படும். வாஸ்து குறிப்பு பின்பற்றுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்களை காணலாம். வீட்ட...

கூரம்

காஞ்சிபுரத்தில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கூரம். இங்குள்ள கூரத்தாழ்வார் கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் அரிய சக்தி உள்ளவர்.

ஹரிவராசனம் | Harivarasanam | Ayyappan Devotional Song

ஹரிவராசனம் விஷ்வமோஹனம் ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம் ஹரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணகீர்த்தனம் பக்தமானசம் பரணலோலுபம் நர்த்தனாலசம் அருணபாசுரம் பூதநாயகம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம் ப்ரணத்தகல்பகம் சுப்ரபாஞ்ஜிதம் ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா துரகவாகனம் சுந்தரானனம் வரகதாயுதம் வேதவர்நிதம் குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா த்ருபவனார்ச்சிதம் தேவதாத்மகம் த்ரினயனாம்ப்ரபும் திவ்யதேஷிகம் த்ருதஷபூஜிதம் சிந்திதப்ரதம் ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா ...

ஐயப்பன் 108 சரண கோஷங்கள் | சபரிமலை ஐயப்பன் | Sabarimalai Ayyappan Saranam Iyappa Pattu | Devotional Song

ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா ஓ...

சனி மந்திரம் | சனி பகவான் அருள் பெறும் சக்திவாய்ந்த மந்திரங்கள் மற்றும் வழிபாடு

சனி மகா மந்திரம் நீலாஞ்ஜந ஸமபாஸம் ரவிபுத்ரம் யமக்ரஜம் சாயா மார்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைஸ்சரம்  சனி காயத்ரி மந்திரம் ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ சனைச்சர ப்ரசோதயாத் சனி பீஜ மந்திரம் ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹே சனி பரிகார ஸ்தோத்திரம் சனிக்கிழமைகளில் சனி பகவானை வணங்கும் போது உச்சரிக்க சனி பகவானின் அருள் கிடைக்கும். சங்கடந் தீர்க்கும் சனி பகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றிச் சாகா நெறியில் இச்சகம் வாழ இன்னருள் தா தா

சனி பெயர்ச்சி 2026 | பலன்கள், பரிகாரங்கள் மற்றும் ராசிபலன்

ஜென்மராசி அதன் முந்தைய ராசி அடுத்த ராசி ஆகிய இடங்களில் சனி வரும் காலம் ஏழரைச் சனி காலமாகும். மனிதனின் ஆயுளில் மூன்று அல்லது நான்கு முறை வரும். இளமையில் வரும் ஏழரைச் சனி மங்குசனி ஆகும். இதனால் படிக்கும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். உடல் தொந்தரவுகள், பெற்றோருக்கு பொருளாதார சிரமம் ஏற்படும். மற்றும் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒற்றுமை சீர்குலையும். இரண்டாவதாக வரும் ஏழரைச் சனி பொங்குசனி ஆகும். தொழில், பொருளாதார விருத்தி அடையும். பெற்றோருக்கு உடல் தொந்தரவுகள், கண்டங்கள் ஏற்படலாம்.  மூன்றாவதாக வரும் ஏழரைச் சனி மரணசனி ஆகும். இதனால் முதுமையினால் ஏற்படும் நோய், உடல்தளர்ச்சி, மரணம் ஏற்படலாம். அட்டமசனி                      சனிபகவான் எட்டாம் இடத்தில் வருவதே அட்டமசனி ஆகும். இதனால் வீண் அவமானம், பழிபாவம், மரணபயம், அளவற்ற சிரமம், எடுத்த காரிய தோல்வி ஏழரைச் சனியால் ஏற்படலாம். கண்டசனி                      ஏழாமிடத்தில் வருவது கண்டசனி ஆகும். இதனால்...