விருச்சிகம் (Scorpio)
விருச்சிக ராசி அன்பர்களே! இந்த பெயர்ச்சியில் உங்களுக்கு உதவி செய்திட பலரும் முன் வருவார்கள். மனதை அரித்துக் கொண்டிருந்த பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வுத் தெரியும். செய்தொழிலில் சிறிது தேக்கநிலை இருந்தாலும் வருமானத்திற்குக் குறைவு வராது. புதிய முயற்சிகளும் ஓரளவுக்குக் கை கொடுக்கும். உங்கள் செயல்களுக்குப் புதிய அங்கீகாரம் கிடைக்கும். திருமணப் பிரச்சினை, குடும்பப் பிரச்சினை ஏற்பட்டாலும் முடிவு சாதகமாக இருக்கும். மற்றபடி வெளியூரில் இருந்து மனதிற்கு நம்பிக்கை ஊட்டும் செய்திகள் வந்து சேரும். மேலும் பழைய கடன் பாக்கிகளும் வசூலாகும்.

Comments
Post a Comment