சபரிமலையில் பிரம்மச்சரியம் காக்கும் சாஸ்தா ஆரியங்காவில் மாப்பிள்ளை அய்யனாராக கிரகஸ்த நிலையில் இருக்கிறார். செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் கேரளா தமிழ்நாடு எல்லைப் பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது பரசுராமர் நிறுவியதாக சொல்லப்படும் மிக முக்கியமான ஐந்து ஸ்தலங்களில் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலும் ஒன்றாகும் இங்கு சாஸ்தா புஷ்கலா தேவியுடன் மாப்பிள்ளை கோலத்தில் காட்சி தருகிறார் சவுராஷ்டிரா இன மக்களின் குல தெய்வமான புஷ்கலாவிலேயே இங்கே சாஸ்தா உடன் ஐக்கியமானார். அவரை சாஸ்தா திருமணம் செய்யும் காட்சியை ஒவ்வொரு டிசம்பர் மாதமும் இங்கு நடத்துகின்றனர். மதம் கொண்ட யானையை அடக்கி அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு சாஸ்தா இருப்பதால் மதகஜ வாகன ரூபன் என்றொரு பெயரும் இவருக்கு உண்டு. இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் விரைந்து நடக்கும். இக்கோயிலின் பூஜை முறைகள் கேரள முறைப்படியும் தமிழ்நாட்டு முறைப்படியும் நடைபெறுவது சிறப்பு
ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம் அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம் விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...
Comments
Post a Comment