Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

விரைவில் திருமணமாக

கல்வியில் கரையிலாக்காஞ்சியில் தேவஸ்வாமி என்பவர் தனவதி என்னும் தன் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இவருக்கு ஏழு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் இருந்தனர். ஆண்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. பெண்ணுக்குக் திருமணம் ஆகவில்லை.


ஒரு நாள் ஒழுக்கமும் சீலமும் உள்ள ஒரு அந்தணர் தேவஸ்வாமி வீட்டிற்கு பிக்ஷைக்கு வந்தார். பிக்ஷை முடிந்ததும், தேவஸ்வாமியின் ஏழு மருமகள்களும் வந்த அந்தணரை நமஸ்காரம் செய்ய அவரும் தீர்க்க சுமங்கலீபவ என்றார். தேவஸ்வாமியின் பெண்ணான குணவதி அவரை நமஸ்காரம் செய்யும்போது, அமங்கல்யவதியாவாய் என்றார். விவரம் அறிந்த குணவதியின் தாய் காரணம் கேட்க அம்மா உன் பெண்ணுக்கு திருமணம் நடக்கும்போது சப்தபதி நேரத்தில் (7 அடி நடந்த பின்) கணவனை இழப்பாள். அதைத்தான் சொன்னேன் என்றார். தாயான தனவதி இந்தத்துயரம் தீர என்ன வழி? என்று கேட்டாள். அதற்கு அந்தணர் திருமண சமயத்தில் சிம்ஹளதேசத்திலிருந்து வரும் சோமவதி என்ற பெண் உன் மகளின் துயரைத் தீர்ப்பாள் என்றார்..

அந்தணர் போனதும் தேவஸ்வாமியின் கடைசி குழந்தை ஆன சிவஸ்வாமி பெற்றோருக்கு நமஸ்காரம் செய்து  சகோதரியான குணவதியுடன் சோமவதி என்னும் பெண்ணை அழைத்து வருவதற்காக சிம்ஹளதேசம் செல்லக் கிளம்பினான். கிளம்பிய சிவஸ்வாமியும் குணவதியும் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது. ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் ஓய்வெடுக்கத் தங்கினார்கள். அந்த மரத்தில் ஒரு மிகப்பெரிய பறவை அப்போது தன் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டத் தொடங்கியது. குஞ்சுகளோ உணவை உண்ண வில்லை. தாய்ப்பறவை காரணம் கேட்க அம்மா இந்த மரத்தின் அடியில் இரண்டு பேர் சாப்பிடாமலிருக்கு நாங்கள் மட்டும் எப்படிச் சாப்பிட முடியும்? என்று குஞ்சுகள் கூறியது. தாய்பறவை அவர்களுக்கும் உணவு தந்து நீங்கள் சாப்பிடுங்கள் என்று சொன்னபின்தான் குஞ்சுகள் சாப்பிட்டன. தாய்ப்பறவை குணவதி, சிவஸ்வாமி இருவருக்கும் உணவு தந்து அவர்கள் வந்த விஷயத்தை  விசாரித்து உதவி செய்து இருவரையும் சிம்ஹள தேசத்தில் கொண்டு சேர்த்தது.

சிம்ஹள தேசம் சேர்ந்த இருவரும் சோமவதியை சந்தித்து விவரம் சொல்ல குணவதியின் துயரம் தீர்க்கத் நானும் உங்களுடன் வருகிறேன் என்று காஞ்சிபுரம் சென்றாள்.

சில நாள் சென்ற பின்னர் குணவதிக்கும் தேவ சர்மா என்பவர் மகனான ருத்ர சர்மா என்பவருக்கும் திருமணம் நடக்கும் பொழுது சப்தபதி சமயத்தில் ருத்ரசர்மா இறந்து கீழே விழுந்ததை கண்டு எல்லோரும் அழுதார்கள். சோமவதி எல்லோரையும் பார்த்து கவலைப்படாதீர்கள் இத்தனை நாட்களாக நான் கடைப்பிடித்து வந்த அமாவாஸ்யா சோமவார விரதத்தின் பலனைக் குணவதிக்குத் தருகிறேன் என்று தாரை வார்த்துக் கொடுத்தாள். விரதத்தின் மகிமையால் ருத்ரசர்மா தூங்கி எழுந்தவன் போல எழுந்தான். சோமவதி அவர்கள் திருமணத்தை பூர்ணமாக முடித்து வைத்து அமாவாஸ்யா சோமவார விரதத்தை குணவதிக்கு உபதேசம் செய்து தன் ஊர் சென்றாள்.

அமாவாசை திங்கள்கிழமையுடன் கூடி வந்த தினத்தில் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். அரச மரத்தை 108 முறை வலம் வரவேண்டும். வலம் வரும்பொழுது  108 கல்கண்டுகளை அல்லது பூக்களை  மரத்தடியில் போடவும். குழந்தை இல்லாதவர் விரதம் கடைபிடித்தால் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உருவாகும்.

தர்ம புத்திரருக்கு பீஷ்மர் உபதேசித்தது 

அரச பிரதட்சணம்

அமாவாசையும், திங்கட்கிழமையும் சேருவதால் இதை அமாசோம வார விரதம் என்பர். இது புத்திர லாபத்தை அளித்து வயிறு சம்பந்தமான வியாதிகளையும் போக்கக் கூடியது. அரச மரத்தை ஏழு முதல் 108 வரை அவரவர் தேக சவுகரியப்படி வலம் வரலாம். ஒவ்வொரு பிரதட்சணத்தின் முடிவிலும் கிழக்கு நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும். நிவேதனத்துக்குப் பழமும் பூக்களும் பட்சணங்களும், விளையாட்டு சாமான்களும் போடுவது வழக்கம். எதுவும் முடியாதவர்கள் எள்ளும், வெல்லமும் கூடப் போடலாம். இதனால் கடன், கலகம், பகை அனைத்து தீரும். செவ்வாய், வெள்ளி, தவிர மீதமுள்ள கிழமைகளில் வயிறு அரச மரத்தின் மேல் படும்படி அனைத்துக்கொள்ள வேண்டும். அவசரப்படாமல் நிதானமாகச் பிரதட்சணம் செய்ய வேண்டும். மாதர்களுக்கு கர்ப்பப்பை ரோகங்கள்  இதனால் நீங்கிவிடும். தொடக்கத்தில் விநாயகருக்குக் குட்டிக்கொண்டு, அரச மரத்தடியில் நாகர் இருந்தால் நல்லெண்ணெயை மரத்தின் ஒரு பகுதிக்கு பூசி தீர்த்தத்தால்  அபிஷேகம் செய்தபின் பால் அபிஷேகம் செய்து பிரதட்சிணத்தைத் தொடங்க வேண்டும்.

தீர்க்காயுள், தேகபலம், சர்வசம்பத்து, புத்திக் கூர்மை அனைத்தும் கிட்டும், நேத்ர ரோகம், நரம்புத் தளர்ச்சி ஆகியவை நீங்கும். கெட்ட கனவுகள்  பலிக்காது. சந்ததிகள் செழிப்பாய் இருப்பர்.

அரச மரத்தை வலம் வரும்போது ஸ்லோகத்தைச் சொல்வது அதிக புண்ணியத்தைக் கொடுக்கும்.

மூலதோ ப்ரஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத: சிவரூபாய வ்ருக்ஷராஜாயதே நம:
அஸ்வத்த ஸர்வ பாபானி ஸதஜன்மார்ஜிதானி ச
நுதஸ்வ மம வ்ருக்ஷேந்திர ஸர்வைஸ்வர்ய ப்ரதோபவ

அரச மரத்தின் அடியில் பிரம்மாவும், நடுவில் விஷ்ணுவும் நுனியில் சிவனும்  உறைவதாக ஐதீகம். நூற்றுக்கணக்கான ஜென்மங்களில் செய்த சகல பாபங்களும் நீங்குகின்றன. ஒரு சுற்றுக்கு ஒன்றாக கொழுக்கட்டை போட்டால் காரியத் தடைகள் அகலும் வாழைப்பழம், போட்டால் வம்சம் விருத்தியாகும். சீப்பு போட்டால் தலைமுடி சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். வளையல்கள் போட்டால் வளை காப்பு வரும். கருகமணி கோர்த்த மாங்கல்ய சரடு போட்டால் விவாகம் கூடிவரும். ஒவ்வொரு பிரதட்சணம் முடிந்ததும் நமஸ்கரித்தால் பூரண பலன் கிட்டும்.

மலடு நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும்.

அச்வத்த நாராயண பூஜை

அமாவாஸையும் திங்கட்கிழமையும் ஒன்றாக சேர்ந்து வரும்போது விரதத்தை மேற்கொள்ள வேண்டும். சுமங்கலி பெண்கள் தீர்க்க ஸௌமாங்கல்யம் மற்றும் புத்ர ஸௌபாக்யம் பெற இதைச் செய்வது நல்லது. அரச மரத்திற்கு பூஜை செய்யவும். இயலாதவர்கள் வீட்டில் பூஜையில் அரசமரக் கொத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

பொதுவாக பூஜைக்கு தேவையான பொருட்கள்

1. மஞ்சள் பொடி
2. குங்குமம்
3. சந்தனம்
4. பூமாலை
5. உதிரிப்பூக்கள்
6. வெற்றிலை, பாக்கு
7. ஊதுபத்தி
8. சாம்பிராணி
9. பஞ்சு (திரிக்காக)
10. நல்லெண்ணெய்
11. கற்பூரம்
12. வெல்லம்
13. மாவிலை
14. வாழைப்பழம்
15. அரிசி
16. தேங்காய்
17. தயிர்
18. தேன்
19. தீப்பெட்டி
20. பூணூல்
21. வஸ்த்ரம்
22. அட்சதை  (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
23. பஞ்சாமிருதம்
24. கோலப்பொடி / அரிசி மாவு
25. பஞ்சகவ்யம்
26. திராட்சை
27. கல்கண்டு
28. சர்க்கரை கலந்த பால்

ஹோமங்களுக்கு நெய் உபயோகிக்க வேண்டும்.


நிவேதன  பொருட்கள்
சித்திரான்னம், நெய், பருப்பு பாயஸம், உளுந்து வடை, தேங்காய்,  பழங்கள்.

பூர்வாங்க பூஜை

தீப மந்திரம்

விளக்கை ஏற்றி தீபத்தைப் பார்த்து மந்திரத்தை சொல்லி பூ  போடவும்.

தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே

ஆசமனம்

நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.

தண்ணீர் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு மந்திரத்தை சொல்லி படாமல் மூன்று முறை குடிக்கவும். (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.

1. கேசவா   வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
2. நாராயணா  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவா  வலக்கை மோதிர விரல் வலக்கண்
4. கோவிந்தா  வலக்கை மோதிர விரல் இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதனா  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமனா  வலக்கை சிறுவிரல் இடது காது
9. ஸ்ரீதரா  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேசா வலக்கை நடுவிரல், இடது தோள்
11. பத்மநாபா நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதரா  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை

குரு த்யானம்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:
குருர்தேவோ மஹேச் ’ வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:

கணபதி தியானம்

இரண்டு கைகளிலும் அட்சதை எடுத்துக் கொண்டு 5 முறை தலையில் குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும்
சசி வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோப சாந்தயே

ப்ராணாயாமம்

மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும் மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக சத்தமாகச் சொல்லக்கூடாது. 

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்
மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்
தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ
ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்
ஸுவரோம்

மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.

ஸங்கல்பம்

வலது கையில் அட்சதையை எடுத்து கையை மூடிக்கொண்டு இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்து மந்திரம்  அட்சதையை வடக்கே போடவும்.

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்வர ப்ரீத்யர்த்தம்
கரிஷ்யமாணஸ்ய கர்மண:
நிர்விக்னேன பரிஸமாப்த்
யர்த்தம் ஆதௌ விக்னே
ச்வர பூஜாம் கரிஷ்யே

ஆசன பூஜை

நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.

ப்ருத்வி த்வயா த்ருதா லோகா
தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம்

ஆத்ம பூஜை

மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து  மந்திரங்களைச் சொல்லி தலையில் அட்சதையைப் போட்டுக்கொள்ளவும்.

தேஹோ தேவாலய: ப்ரோக்த:
ஜீவோ தேவ: ஸநாதன:
த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்
ஸோஹம்பாவேன பூஜயேத்

ஸ்ரீகணபதி பூஜை

ஸ்ரீகணபதி பூஜை எல்லா பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில்  செய்ய வேண்டிய பூஜையாகும்.

மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை

மஞ்சள் பிள்ளையாருக்கு மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அட்சதையை போடவும். 

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்
அஸ்மின் ஹரித்ராபிம்பே
விக்னேச்’ வரம் த்யாயாமி,
விக்னேச்’வரம் ஆவாஹயாமி

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

அஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்வரம்
த்யாயாமி விக்னேச்வரம் ஆவாஹயாமி

மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம் அட்சதை போட்டு மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.

விக்னேச்வராய நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி

மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.

விக்னேச் வராய நம:
பாத்யம் ஸமர்ப்பயாமி

மந்திரம் சொல்லி  தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.

விக்னேச்வராய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி

தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.

விக்னேச் வராய நம:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

மஞ்சள் பிள்ளையார் மீது துளி தீர்த்தத்தை தெளிக்கவும்

விக்னேச்  வராய நம:
ஸ்நானம் ஸமர்ப்பயாமி

அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்

விக்னேச் வராய நம: ஸ்நாநாநந்தரம்
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அட்சதை சமர்ப்பிக்கவும்

விக்னேச் வராய நம:
வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அட்சதை சமர்ப்பிக்கவும்

விக்னேச்  வராய நம: யக்ஞோப
வீதார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்

விக்னேச்  வராய நம: கந்தாம்
ஸமர்ப்பயாமி

மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.

விக்னேச் வராய நம: கந்தோபரி
குங்குமம் ஸமர்ப்பயாமி

மஞ்சள் பிள்ளையாருக்கு அட்சதை சமர்ப்பிக்கவும்.

விக்னேச் வராய நம: அட்சதை ஸமர்ப்பயாமி

மஞ்சள் பிள்ளையாருக்கு பூ சமர்ப்பிக்கவும்.

விக்னேச் வராய நம:
புஷ்பை: பூஜயாமி

அர்ச்சனை

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் மஹாகணபதயே நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. அக்ஷதை அல்லது பூ  போடவும்.

தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
அக்ஷதை அல்லது பூ  போடவும்.

நிவேதன மந்திரங்கள்

தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து மந்திரத்தைச் சொல்லவும்.

ஓம் பூர்புவஸ்ஸுவ:

தீர்த்தம் எடுத்து மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.

தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும். தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.

காலை நேரத்தில் பூஜை செய்தால்

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி

மாலை நேரத்தில்  பூஜை செய்தால்

தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
அம்ருதமஸ்து
அம்ருதோபஸ்தரணமஸி

தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும். மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்

ஓம் ப்ராணாய ஸ்வாஹா
ஓம் அபானாய ஸ்வாஹா
ஓம் வ்யாநாய ஸ்வாஹா
ஓம் உதானாய ஸ்வாஹா
ஓம் ஸமானாய ஸ்வாஹா
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா

ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச் வராய நம: நாளீகேர கண்ட த்வயம் கதலீபலம் நிவேதயாமி.

மத்யே மத்யே பானீயம்
ஸமர்ப்பயாமி.

தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.
அம்ருதாபிதாநமஸி
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

 தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.

பூகீபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்

விக்னேச் வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி

வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு நிவேதனம் செய்யவும்.

தீபாராதனை

விக்னேச்வராய நம:
கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி

மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.

பிராத்தனை 
வக்ரதுண்ட மஹாகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா
விக்னேச்  வராய நம: ப்ரார்த்தயாமி

புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்

பிரதான பூஜை

த்யானம்

சுக்லாம் சாந்தயே

சுக்லாம்பரதரம் விஷ்ணும்
சசி வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ந்தயே

ஸங்கல்பம்

பிரதான பூஜைக்குரிய ஸங்கல்பம்

நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஸ்ரீ ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வன்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுககே  ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதக் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ச்வே ச காப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே



அயனே (உத்தராயணாம்    தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயணாம்   ஆடி முதல் மார்கழி வரை)





நக்ஷத்ர யுக்தாயாம்

சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சுபதிதௌ


கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்பவரின் கோத்திரத்தின் பெயர்) நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்பவரின் நக்ஷத்திரம்) ராசௌ (பூஜைசெய்பவரின் நக்ஷத்திரத்திற் உண்டான ராசி) ஜாதஸ்ய (பூஜைசெய்பவரின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். 

  • ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
  • ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
  • ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
  • சீ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
  • வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
  • அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
  • தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ (எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலாம்.

திதி மற்றும் நக்ஷத்திரங்களை பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத் ஸராணாம் மத்யே நாம ஸம்வத்ஸர அயனே ருதௌ மாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாயாம் சுபதிதௌ

வாஸர யுக்தாயாம் நக்ஷத்ர யுக்தாயாம் சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அமாவாஸ்யாம் சுபதிதௌ மம ஸர்வ ஸௌபாக்ய ஸித்யர்த்தம் மனோ வாக்காய க்ருத மஹாபாதக நிவ்ருத்யர்த்தம் மஹதைச்வர்ய ப்ராப்த்யர்த்தம் சீக்ரமேவ ஜீவத் சத்  சந்தான அவாப்த்யர்த்தம் புத்ர பௌத்ர அபிவ்ருத்யர்த்தம் ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரீத்யர்த்தம் அமாஸோமவார புண்யகாலே அச்வத்த நாராயண பூஜாம் கரிஷ்யே ததங்கம் கலச பூஜாம் ச கரிஷ்யே

விக்னேச்வர உத்யாபனம்
(யதாஸ்தானம்)

அகஜானன உபாஸ்மஹே 

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

விக்னேச்வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி
சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச 

சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அட்சதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.

கலச பூஜை

தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

தீர்த்தபாத்திரத்தில் துளஸி அல்லது பூ மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ஸ்லோகம்

கலசஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச்ச ஸஹிதா: ஸர்வே
கலசாம்பு ஸமாச்ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

ஜபித்து, கலச தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

தியானமும்  ஆவாஹனமும்

மூலதோ ப்ரஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணுரூபிணே
அக்ரத: சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நம:
அஸ்மின் வ்ருக்ஷே த்ரிமூர்த்யாத்மகம் அச்வத்த நாராயணம்
த்யாயாமி, ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்.)

ஷோடசோ உபசார பூஜை

ஓம் நமோ வாஸுதேவாய ஸத்யானந்த சிதாத்மனே
ரத்ன ஸிம்ஹாஸனம் துப்யம் தாஸ்யாமி ஸ்வீகுரு ப்ரபோ
அச்வத்த நாராயண ஸ்வாமினே நம:
ரத்ன ஸிம்ஹாஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அட்சதைகளை போடவும்)

கஜவாஹன ஸர்வஜ்ஞ ஸர்வ லக்ஷண ஸம்யுத
பாத்யம் க்ருஹாண மத்தத்தம் ச்ரியா ஸஹ ஸுரோத்தம
அச்வத்த நாராயண ஸ்வாமினே நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

பரித்ராண பரானந்த பத்ம பத்ரேக்ஷண ப்ரபோ
க்ருஹாணார்க்யம் மயா தத்தம்
க்ருஷ்ண விஷ்ணோ ஜனார்த்தன
அச்வத்த நாராயண ஸ்வாமினே நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

நமச்சுத்தாய நித்யாய யோகி த்யான பராயண
மதுபர்க்கம் க்ருஹாணேதம் ஸர்வ லோகைக நாயக
அச்வத்த நாராயண ஸ்வாமினே நம:
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தேன்கலந்த தயிரை தெளிக்கவும்)

ஸம்ஸ்னாபனம் கரிஷ்யாமி லக்ஷ்மீநாராயண ப்ரபோ
ஸ்னானேனானேன தேவேசமம பாபம் வ்யபோஹய
அச்வத்த நாராயண ஸ்வாமினே நம:
பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தொட்டு பஞ்சாமிருதம் தெளிக்கவும்)

கங்கோதகம் ஸமானீதம் ஸுவர்ண கலச ஸ்திதம்
ஸ்நாபனார்த்தம் மயா (ஆ) நீதம் க்ருஹாண பரமேச்வர
அச்வத்த நாராயண ஸ்வாமினே நம:
சுத்தோதக ஸ்னானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

ஸ்நானானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

தேவ தேவ ஜகன்நாத நம: ஸ்ரீவத்ஸ தாரிணே
வஸ்த்ரயுக்மம் ப்ரதாஸ்யாமி ஸங்க்ருஹாண ஜனார்தன
அச்வத்த நாராயண ஸ்வாமினே நம:
வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அட்சதை ஸமர்ப்பிக்கவும்)

லக்ஷ்மீசாய நமஸ்தேஸ்து த்ராஹி மாம் பவஸாகராத்
ப்ரம்ஹஸூத்ரஞ் சோத்தரீயம் க்ருஹாண ப்ரார்த்திதோ மயா
அச்வத்த நாராயண ஸ்வாமினே நம:
யஜ்ஞோபவீதார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அட்சதை ஸமர்ப்பிக்கவும்)

கர்பூராகரு கஸ்தூரீ குங்குமோன்மிச்ர சந்தனம்
துப்யம் தாஸ்யாமி தேவேச ஸங்க்ருஹாண நமோஸ்து தே
அச்வத்த நாராயண ஸ்வாமினே நம:
கந்தான் தாரயாமி
(சந்தனமிடவும்)

கந்தோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி
(குங்குமிடவும்)

தண்டுலாநார்த்ரகான் ஸ்வச்சான் மஹாவ்ரீஹி ஸமுத்பவான்
அக்ஷதானர்ப்பயே துப்யம் ஸங்க்ருஹாண ஸுரேச்வர
அச்வத்த நாராயண ஸ்வாமினே நம:
அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

மால்யானி ச ஸுகந்தீனி மாலத்யாதீனி ச ப்ரபோ
மயா (ஆ) ஹ்ருதானி பூஜார்த்தம் க்ருஹாண கமலாதிப
அச்வத்த நாராயண ஸ்வாமினே நம:
புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் போடவும்)

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...