Skip to main content

Posts

Showing posts from 2026

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

செவ்வாய் கிரகம்: பலன்கள், செவ்வாய் தோஷம், பரிகாரம் மற்றும் வழிபாடு முறைகள்

கிரகம் செவ்வாய் ஸ்தலம் வைதீஸ்வரன் கோவில்  வாகனம் ஆட்டுக்கடா  மலர் செண்பகம் நாள் செவ்வாய்  உலோகம் செம்பு  தானியம் துவரை நிறம் சிவப்பு  பலன்கள் பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம் ராசிகற்கள் பவழம் குறிப்பு: இது பொதுபலன் — இந்தத் தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகளைச் சார்ந்தவை. 

சந்திரன் கிரகம்: பலன்கள், தோஷம், பரிகாரம் மற்றும் வழிபாடு முறைகள்

கிரகம் சந்திரன் ஸ்தலம் திங்களூர் வாகனம் வெள்ளை குதிரை மலர் வெள்ளரளி நாள் திங்கள் உலோகம் ஈயம் தானியம் அரிசி நிறம் வெள்ளை பலன்கள் தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும் ராசிகற்கள் முத்து குறிப்பு: இது பொதுபலன் — இந்தத் தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகளைச் சார்ந்தவை. 

சூரியன் கிரகம்: பலன்கள், பரிகாரம், தோஷம் மற்றும் வழிபாடு முறைகள்

கிரகம் சூரியன் ஸ்தலம் சூரியனார் கோவில்  வாகனம் ஏழு குதிரை பூட்டிய தேர்  மலர் செந்தாமரை நாள்  ஞாயிறு உலோகம் தாமிரம்  தானியம் கோதுமை  நிறம் சிவப்பு  பலன்கள் காரிய சித்தி ராசிகற்கள் மாணிக்கம்  குறிப்பு: இது பொதுபலன் — இந்தத் தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகளைச் சார்ந்தவை. 

நவகிரகங்கள் – அர்த்தம், பெயர்கள், பலன்கள் முழு விளக்கம் | navagiragangal

வழிபாட்டு முறை: சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களை வலமாகவும், ராகு மற்றும் கேதுவை இடமாகவும் (எதிர் திசையில்) சுற்ற வேண்டும். கோயில் வரிசை (தமிழ்நாடு - நவகிரகத் தலம்): சூரியனார் கோவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம்.   நவக்கிரகங்களை எத்தனை சுற்று சுற்றி வழிபட வேண்டும் தெரியுமா? கிரகம் அதிதேவதைகள்   சூரியன் (Sun) சிவன் சந்திரன் (Moon)  பார்வதி செவ்வாய் (Mars)  முருகன் புதன் (Mercury)  விஷ்ணு குரு / வியாழன் (Jupiter)  தட்சிணாமூர்த்தி சுக்கிரன் (Venus)  லட்சுமி சனி (Saturn)    யமன் ராகு (Rahu)  துர்க்கை கேது (Ketu) விநாயகர் குறிப்பு: இது பொதுபலன் — இந்தத் தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகளைச் சார்ந்தவை.

நவகைலாயம் – 9 சிவ திருத்தலங்கள் | Navakailayam Temples

நவகைலாய வரலாறு அகத்திய முனிவரின் சீடர்களில் முக்கியமானவரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பி தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டதாகவும். அதற்கு அகத்திய முனிவரும் தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டதாகவும் அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும் தனது குரு கூறியபடி வழிபட்டு முக்தி அடைந்தார் என்றும் அப்படி அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்கள் தான் இப்போது நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுவதாகவும் இத்தலங்களின் வரலாறு கூறுகின்றது. 📌 முக்கிய தகவல்கள் சிவபெருமான் 19 அவதாரங்களை பூமியில் எடுத்திருந்தார். கடவுள் மனிதராக பிறந்து மனிதர்களை காப்பாற்றி தீமையை அழிக்கவே சிவபெருமான் இந்த 19 அவதாரம் எடுத்திருந்தார். நவகைலாயம் – 9 கோவில்கள் மற்றும் கிரக த...

நவதிருப்பதி திருத்தலங்கள் | Navatirupathi Temples

பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம்.  வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது.  ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது. ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச : கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர என்ற ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு, அவதாரங்கள் நவகிரகங்கள் ஸ்ரீ ராமாவதாரம் சூரியன் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்  சந்திரன் ஸ்ரீ நரசிம்மவதாரம்  செவ்வாய் ஸ்ரீ கல்கியவதாரம்  புதன் ஸ்ரீ வாமனவதாரம்  குரு ஸ்ரீ பரசுராமாவதாரம்  சுக்ரன்   ஸ்ரீ கூர்மவதாரம்  சனி ஸ்ரீ மச்சாவதாரம்  கேது ஸ்ரீ வராகவதாரம்  ராகு ஸ்ரீ பலராமவதாரம்  குளிகன்   என்று, பெருமாளின்  கிரகங்கள...

அருள்மிகு பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவில் – சக்தி, பக்தி மற்றும் அருள்மிகு அம்மன் தலம் | Arulmigu Pittapurathi Amman Temple

தி ருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது அருள்மிகு பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவில். இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னையை, ‘வடக்கு வாய் செல்வி, நெல்லை மாகாளி, செண்பகச்செல்வி’ என்றும் அழைக்கிறார்கள். தற்போது இந்த அம்மன் ‘புட்டாத்தி அம்மன்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.   இங்குள்ள அம்மன் நான்கு திருக்கரங்களுடன் வலது கைகளில் உடுக்கையும், சூலமும், இடக்கைகளில் பாசமும், கபாலமும் கொண்டு காட்சியளிக் கிறாள். அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள். அருகில் இரு பக்கமும் படைக்கல தேவியும் (அஸ்திர தேவதை), சீபலி அம்மனும், ராஜராஜேஸ்வரியும் செப்பு படிமங்களில் காட்சியளிக்கிறார்கள். இந்த ஆலயத்தில்  விநாயகர், நெல்லையப்பர், காந்திமதி, நந்தி, வள்ளி, முருகன், தெய்வானை, மயில் மற்றும் ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் உள்ளன. அம்மனை கருவறையை அடுத்து அர்த்த மண்ட பமும், அதற்கு அடுத்து கருவறையும் உள்ளது. கருவறையில் அன்னை பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில், 5 அ...

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில் Thirukarukavur Garbharakshambigai Temple

இத்திருக்கோயில் இறைவன் திருக்கருகாவூர் மகாதேவர், திருக்கருகாவூர் ஆழ்வார், திருமுல்லைவனமுடைய மகாதேவர் என்றும் அழைக்கப்படுகிறார். முன்னொரு காலத்தில் இத்தலம் இருக்குமிடம் முல்லைவனமாக இருந்தது. அந்த அழகிய வனத்தில் கௌதமர், கார்க்கேயர் என இரு முனிவர்கள் இறைவனை வேண்டி தவமிருந்தனர். இந்த இரு இறை அன்பர்களுக்கும் நித்துருவர்-வேதிகைதம்பதியினர், முல்லை வனத்திலேயே தங்கி இருந்து சேவை செய்து வாழ்ந்து வந்தனர். தம்பதியர் இருவரும் இறைப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மனதில் பெரிய குறை ஒன்றிருந்தது. தங்களுக்கு குழந்தைப் பேறு இல்லையே என்று வருத்தம் இருந்தது. அந்த மனக்குறையை முனிவர்களிடம் கூறினர். அதற்கு அம்முனிவர் பெருமான்கள் இந்த முல்லைவனத்தில் எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வணங்கிட நீங்கள் வேண்டி நிற்பது கிடைக்கும் என வாழ்த்தினர். அவ்வாறே அம்மையப்பனை வணங்கி மக்கட்பேறு கிடைக்கப் பெற்றனர். இவ்வாறு வேதிகை கருவுற்றிருந்த சமயம், கணவர் இல்லாமல் வேதிகை மட்டும் தனித்திருந்த நேரத்தில் சுகமான சுமையான கருவை சுமந்திருந்த காரணத்தினால் சற்றே மயக்கத்தில் கண்ணயர்ந்த சமயத்தில் ஊர்த்துவபாதர் என்...

தோஷம் நீக்கும் தங்க & வெள்ளி பல்லிகள் கோயில்கள்

தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி - 16 கைகளுடன் காட்சி தரும் பிரம்மாண்ட சக்கரத்தாழ்வார் காஞ்சி மாநகரின் கம்பீரமான அடையாளமாகவும், 108 திவ்ய தேசங்களில் மிக முக்கியமான தலமாகவும் விளங்குவது அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்.  தோஷம் நீக்கும் தங்க - வெள்ளி பல்லிகள். இந்தக் கோயிலின் மேல்தளத்தில் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட இரு பல்லி உருவங்கள் உள்ளன. இதன் பின்னணியில் கதை உண்டு. கௌதம முனிவரின் சீடர்கள் இருவர், கவனக்குறைவால் தீர்த்தத்தில் விழுந்த பல்லியைப் பார்க்கத் தவறியதால் சாபம் பெற்று பல்லிகளாக மாறினர். இத்தலத்தில் வரதராஜரை வணங்கி சாப விமோசனம் பெற்றனர். சூரிய, சந்திரர்களைச் சாட்சியாகக் கொண்டு அமைந்த இந்தத் தங்க (சூரியன்), வெள்ளி (சந்திரன்) பல்லிகளைத் தொட்டு வணங்கினால், நம் உடலில் பல்லி விழுவதால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும். மேலும், தீராத வியாதிகளும் தீரும். 16 கைகளுடன் பிரம்மாண்ட சக்கரத்தாழ்வார். கோயிலின் அனந்தசரஸ் தீர்த்தக் குளத்தின் கரையில் தனிச் சன்னதியில் வீற்றிருக்கிறார் சுதர்சன ஆழ்வார் எனும் சக்கரத்தாழ்வார். தமிழகத்திலேயே வேறு எங்கும் காண முடியாத வகையில், மி...

பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் – வரலாறு | Pittukku Man Sumandha Peruman

மதுரை என்றாலே அது திருவிளையாடல் களின் ஊர். சிவபெருமான் தன் பக்தர்களுக்காகப் பலமுறை நேரில் வந்து அருள் புரிந்த தலம். அவற்றில் மிக உருக்கமானதும், இறைவனின் எளிமையைக் காட்டுவதுமான பிட்டுக்கு மண் சுமந்த படலம். வைகை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்   பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் மதுரையை ஆண்டு வந்த காலம் அது. ஒருமுறை மதுரையில் விடாது பெய்த மழையினால் வைகை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டதால், நகருக்குள் நீர் புகாமல் தடுக்க மன்னன் ஒரு கட்டளையிட்டான். அதன்படி, மதுரையில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்காரரும் ஆளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு இடத்தைப் பிடித்து, மண்ணைப் போட்டு வைகை ஆற்றின் கரையை பலப்படுத்த வேண்டும். மூதாட்டி வந்தியின் பக்தி மதுரையில் வந்தி என்ற மூதாட்டி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. பிட்டு விற்று பிழைப்பு நடத்தி வந்த அவள், சிவபெருமான் மீது அசைக்க முடியாத பக்தி கொண்டவள். தினமும் தான் செய்யும் முதல் பிட்டை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு, சிவனடியார்களுக்கு தானம் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தாள். மன்னனின் கட்டளை வந்திக்கும் வந்தது...

Yoni Porutham Tamil – யோனி பொருத்தம் திருமணத்திற்கு முக்கியமா?

ஜோதிட ரீதியாக திருமணப் பொருத்தங்களை ஆராயும் போது, யோனி பொருத்தம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தம்பதியினரிடையே இருக்கும் உடல் ரீதியான ஈர்ப்பு, தாம்பத்திய சுகம் மற்றும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்யோன்யத்தைப் பற்றி கூறுகிறது. மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களும் 14 விலங்குகளின் யோனிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. யோனி பொருத்தத்தின் வகைகள் இந்த பொருத்தம் பொதுவாக நான்கு நிலைகளில் கணக்கிடப்படுகிறது: முதல்  இரண்டாவது  உத்தமம் (சிறப்பு) இருவருக்கும் ஒரே யோனியாக இருந்தால் (உதாரணமாக: இருவருக்கும் பசு யோனி), அது தாம்பத்திய வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். மத்திமம் (சுமார்) பகை இல்லாத வேறு வேறு விலங்குகளாக இருந்தால் அது சுமாரான பலனைத் தரும். அத்தமம் (சாதாரணமானது) ஒருவருக்கு ஆண் யோனியும், மற்றொருவருக்கு பெண் யோனியும் மாறுபடும் போது இது வரும். அதமம் (பகை) இயற்கை எதிரிகளாக இருக்கும் விலங்குகளின் யோனி அமைந்தால்  (உதாரணமாக: பாம்பு மற்றும் கீரி)  அது தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு...

இராமேஸ்வரம் பார்க்க வேண்டிய இடங்கள்

ராமர் பாதம் சாக்சி ஹனுமன் ராமர் தீர்த்தம் லக்ஷ்மன் தீர்த்தம் சீதா தீர்த்தம் ஐந்துமுக ஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவில் தனுஸ்கோடி  வில்லுன்டி தீர்த்தம் விவேகாநந்தர் பாறை  பாம்பன் பாலம் அபே ஆஞ்சநேயர்  இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்ற நகரம் இருக்கிறது. இது  பாம்பன் தீவிலிருந்து  சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இலங்கை மன்னார் தீவு, உள்ளது..,இந்திராகாந்தி பாலம்  (பாம்பன்பாலம்) மூலம் நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.இராமேஸ்வரத்திற்கு  சென்னைமதுரை மற்றும் பல மாநிலங்களிலிருந்தும்   இரயில் போக்குவரத்து இருக்கிறது . இராமேஸ்வரம்  இந்தியாவில் புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இது இந்திய தீபகற்பத்தில் மிக முனையில்மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது. புராணத்தின் படி ராமரால் ஆதாம் பாலம் கட்டப்பட்டது. ராமன் சீதையை மீட்க ராவணனிடம்போர் புரிந்து கொன்றான்.ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வண...

பித்ரு தோஷ நிவர்த்தி பூஜை – பரிகாரம் & செய்யும் முறை

இந்த வகை பூஜை முறையானது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சித்தர்களும், ரிஷிகளும் கடைபிடிக்கும் வழிபாட்டுமுறையாகும், இந்த தோஷம் ஒருசமயம் சிவனுக்கும் நிகரான அகத்தியர், கொங்கணர் போன்ற முனிவர்களையே தன் சித்திகளை அடையாவண்ணம் தடுத்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை - பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதனால்தான் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும். பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் வேள்விகள் செய்து கோவில் கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்காது. நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும்.  நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்...

பித்ரு தோஷம் பரிகாரம் | முன்னோர் தோஷ நிவாரணம்

பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது. ஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஒரு பெண் தன் முற்பிறவியில் தனது கணவனை கவனிக்காமல் வேறு ஆணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது. ஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஒருவர் தன் முற்பிறவியில் முறையற்ற கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது. பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில் இறந்...

சக்குளத்துக்காவு அம்மன் கோவில் | Chakkulathukavu Amma Temple – Famous Kerala Devi Temple

கோயிலின் பண்டைய வரலாறு தேவி மகாத்மியத்தில் காணப்படும் சும்ப மற்றும் நிசும்ப அசுரர்களும் பிரம்ம தேவரைத் தியானிப்பதன் மூலம் மகத்தான சக்தியைப் பெற்றனர். ஒரு பெண்ணால் மட்டுமே அவர்களை வெல்ல முடியும் என்ற வரம் அவர்களுக்கு வழங்கப்பட்டது, இது கிட்டத்தட்ட சாத்தியமற்ற நிலை. இந்த நன்மையைக் கொண்டு, அவர்கள் இந்திரன் உள்ளிட்ட தேவர்களை வென்று மூன்று உலகங்களையும் ஆண்டனர். உதவியற்ற தேவர்கள் தொலைதூர காடுகளில் தஞ்சம் புகுந்தனர். தேவர்களின் துயர நிலையைக் கண்ட நாரதர், தனது தந்தை பிரம்மதேவரை அணுகினார். வாழ்க்கைக்கு ஏற்ற தாழ்வுகள் உண்டு என்று பிரம்மா விளக்கினார். ஒரே ஒரு தீர்வுதான் தேவியின் சக்தி. தேவர்கள் தேவியை தேடத் தொடங்கினர். மலைகளின் மன்னனான இமவான் அருகே வந்து, தேவியை மகிழ்விக்க சக்திவாய்ந்த மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினர். சக்தி, அறிவு, படைப்பாற்றல், கருணை மற்றும் ஆசீர்வாதங்களின் உருவகமாக தேவியை அவர்கள் புகழ்ந்தனர். கங்கைக் கரையில் தேவர்களின் வேண்டுதல்களை பார்வதி தேவி கேட்டாள். அவர்களின் துயரத்தை உணர்ந்து, தேவிக்குள் இருந்து மற்றொரு தேவி தோன்றினாள் - துர்கா என்ற அவதாரம். அசுரர்களின் தொல்லைகளி...