சீதாவை இராவணன் கடத்தி செல்லும் போது இராமருக்கு வழிகாட்ட ஒவ்வொரு பொருளாக போட்டு கொண்டு வந்தாள். அந்த இடத்தில் முத்துமாலை விழுந்தது. முத்துமாலை முத்துமாலை அம்மனாக வழிபடுகின்றனர். ஏரல் அருகே உள்ள முக்கூடல் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் அந்த காலத்தில் குரங்கனியில் உள்ள முத்துமாலை அம்மனை வழிபட்டு வந்தனர். அந்நாளில் திருடர்கள் இடையூறு அதிகமாக இருந்ததால் மக்கள் குரங்கனி செல்ல பயந்தனர். அதனால் முக்கூடல் இந்து நாடார் சமுதாயத்தைச் சார்ந்த பெரியவர்கள்சேர்ந்து குரங்கனி முத்துமாலை அம்மன் கோயிலில் இருந்து பிடிமண் கொண்டு வந்து முக்கூடல் தாமிரபரணி வடக்கரையில் குடில் அமைத்து அம்பாளை வழிபாடு செய்து வந்தனர்.
அந்நாளில் சலவைத் தொழிலாளர்கள் துணிகளை துவைத்த பின்பு மண் தாழிகளை ஈரப்பதம் காய்வதற்கு மணல் மீது கவிழ்த்து வைப்பார்கள். அடுத்த நாள் எடுக்கும் போது ஒரு தாழியை எடுக்க முடியவில்லை. இந்த அதிசயம் அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அன்று இரவு கோயில் பூசாரி மாடக்கண் நாடார் அவர்கள் கனவில் அம்மன் வந்து தாழியை எடுக்க வேண்டாம். அங்கு நான் இருக்கிறேன் அந்த இடத்தை சுற்றி கோயில் கட்டி வழிபடுங்கள் என்று கூறினாள். இன்றும் கர்ப்பகிரஹத்தில் அம்பாள் அருகே உள்ள தாழிக்கும் பூஜை நடைபெறுகிறது.
சிலநாட்களுக்கு பின்னர் அம்பாளுக்கு சிலை அமைக்க நினைத்தனர். அப்போது கோயில் பூசாரி மாடக்கன் நாடார் கனவில் அம்பாள் வந்து பக்கத்தில் உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் மேற்கு பகுதியில் ஒரு வயலில் என் சிலை புதைந்துள்ளது. அங்கே வானத்தில் கருடன் வட்டமிட்டு நிழல் காட்டும் இடத்தில் தோன்டினால் சிலை கிடைக்கும் என்றாள். அதே போல வயல் சொந்தக்காரர்கனவில் அம்பாள் வந்து வயலை தோன்டி சிலை எடுப்பதை தடுக்க வேண்டாம் என்றாள். அம்மன் கூறியபடி கருடன் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து தற்போது வழிபட்டு வரும் கருங்கல் சிலை சுயம்புவாக கிடைத்தது. அந்த சிலையை பூஜை செய்து பக்தியுடன் முக்கூடலுக்குகொண்டு வந்து மண்தாழிக்கு அருகில் சிலையை வைத்து ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.
முக்கூடல் இந்துநாடார் மக்கள் இக்கோயிலை 150 ஆண்டுகளுக்கு மேலாகநடத்திவருகிறார்கள்.
முத்துமாலையம்மன் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும். விழாவில் தினமும் காலையில் செம்புகுட்டி சிவில் பவனியும்,மதியம் சிறப்புபூஜையும், அன்னதானமும், மாலை யானைமீது தீர்த்தவாரியும்,இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் பவனியும் நடைபெறும்.
Comments
Post a Comment