கன்னி (Virgo)
(உத்திரம் 2,3,4 பாதம், ஹஸ்தம், சித்திரை 1,2 பாதம் முடிய)
கன்னி ராசி அன்பர்களே! இந்த பெயர்ச்சியில் குடும்பத்தில் பிள்ளை இல்லாதோருக்கு புத்திர பாக்கியமும், மற்றவர்களுக்கு பேரக்குழந்தை பாக்கியமும் உண்டாகும். குடும்பத்திலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு உயரும். பாகப்பிரிவினை போன்றவைகளும் சுமுகமாக முடியும். வருமானம் சிறப்பாக அமையும். மனதிலிருந்த அழுத்தங்கள் விலகித் தெளிவான சிந்தனையில் இருப்பீர்கள். வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். அனுபவத்தின் மூலம் நிரந்தரமான முடிவை எடுப்பீர்கள். ஆன்மீகத்திலும், தர்ம காரியங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களின் திறமையால் புதிய நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள்.

Comments
Post a Comment