Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

கரணம் மற்றும் வாழ்க்கை பலன் | ராசி மற்றும் ஜாதகத்தில் முக்கியத்துவம்

போஸ்ட் முக்கிய படம்

உங்கள் தலைப்பு இங்கே

உங்கள் ராசியை போல கரணமும் முக்கியம். ஒருவரது ஜாதகத்தில் ராசி, நட்சத்திரம், லக்கினம் எவ்வளவு முக்கியமோ அதே போல கரணமும் முக்கியம். அந்த வகையில் கரணம் என்றால் என்ன. எந்த வகையான கர்ணத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்ப்போம். சந்திரனின் 16 நாட்கள் வளர்பிறை நிலை, 16 நாட்கள் தேய்பிறை. சந்திரனின் வளர்பிறை, தேய்பிறைக் காலங்களிலில் வருவது கரணங்கள். கரணங்கள் என்பது ஒரு மாதத்தில் வரும் திதிகளில் அரைப் பகுதியாகும். 11 கரணங்கள் இருக்கின்றன. 7 கரணங்கள் “ஸ்திர” கரணங்கள் அதாவது நிலையான கரணங்கள் 4 கரணங்கள் “சர” கரணங்கள் அதாவது நகரும் கரணங்கள். கரணங்களுக்குக்கான உருவமாக சில விலங்குகள், பறவைகள் உருவங்களும். அதிதேவதைகளும் ஜோதிட சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நீங்கள் பிறந்த நேரத்தை வைத்து உங்களுக்கான கரணத்தின் குணாதிசியங்கள் இருக்கும்.

முக்கிய தகவல்கள்

ஒருவரது ஜாதகத்தில் ராசி, நட்சத்திரம், லக்கினம் எவ்வளவு முக்கியமோ அதே போல கரணமும் முக்கியம்.

பொருத்தம் பொதுபலன்கள்
பவம் கரணம்அதிதேவதை இந்திரன் இக்கரணத்தவர்கள் சற்று ஏழ்மையானச் சூழ்நிலையில் பிறந்தாலும், மிகவும் பெருந்தன்மையான குணங்களை பெற்றிருப்பர். பேராசைப்படாமல் தங்களுக்கு கிடைத்ததைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை இனிதாக்கிக் கொள்வார்கள். இக்கரணத்திற்கான விலங்காக சிங்கம் இருப்பதால், வீர தீர சாகசம் புரியும் ராணுவம், காவல்துறைப் போன்றப் பணிகளில் இவர்கள் சிறப்பாகச் செயல்புரிவர்.இக்கரணத்திற்கான விலங்கின் உருவம் சிங்கம்.
பாலவம் கரணம்   அதிதேவதை பிரம்மா இக்கரணத்தில் பிறந்தவர்கள் அழகானத் தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். மிகுந்த தைரியசாலிகளான இவர்கள் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி அதில் வெற்றியும் பெறுவார்கள். அதே நேரத்தில் பிறருக்காக எத்தகையத் தியாகத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள். விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர்கள் அது சம்பந்தமானது துறைகளில் சாதனைகள் புரிவார்கள். இக்கரணத்தவர்களுக்கான விலங்கு புலி. 
கெளலவம் கரணம்அதிதேவதை சூரியன் கெளலவ காரணத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இக்கரணத்தில் பிறந்த ஒரு சில தங்களின் சுயநலம் காரணமாக இரக்கமற்றவர்களாகவும், பிறருக்கு துன்பம் விளைவிப்பவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களிடம் அவப்பெயரைச் சம்பாதிப்பார்கள் இதன் காரணமாக இவர்கள் தங்கள் வாழ்வில் மிகவும் கஷ்டப்படுவார்கள். எந்த ஒரு நல்ல காரியத்தையும் இக்கரணத்தில் துணிந்து செய்யலாம். இக்கரணத்திற்கான விலங்கின் உருவம் பன்றி.
தைதுலம் கரணம்அதிதேவதை ஆதித்யன் இவர்கள் எப்போதுமே இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு பிரச்சனையில் தங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும், அதை அதிகாரத் தன்மையுடன் தீர்க்காமல் அமைதியான முறையில் தீர்ப்பார்கள். இயற்கையிலேயே இவர்கள் மனவுறுதி கொண்டவர்களாக இருப்பதால், எப்படிப்பட்ட சவால்களையும் ஏற்றுக் கொண்டு அதில் வெற்றி அடைவர். பொதுவாக எதிர்காலத்திற்கான பாதுகாப்பைக் கொடுக்கும் உத்தியோகங்களில் சேர்ந்து பணிபுரிவர். இக்கரணத்திற்கான விலங்கின் உருவம் கழுதை.
கரஜை கரணம் அதிதேவதை பூமாதேவி இந்நபர்கள் எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் திட்டமிட்டு செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். சிறந்தப் பேச்சுத் திறனும் அதிகம் பேசக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். கற்பனைத்திறன் அதிகம் கொண்டவர்கள் என்பதால் ஓவியம், சிற்பம், கவிதை, நாடகம், நடனம் போன்ற காலை சம்பந்தமான துறைகளில் சாதிப்பர். இவர்களுக்கு சற்று சலன புத்தி இருப்பதால், பெண்கள் விஷயத்தில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இகரணத்திற்கான உருவம் யானை.
வணசைகரணம்அதிதேவதை லஷ்மி இவர்களிடம் சிறந்த நிர்வாகத்திறன் இருக்கும். மேலும் வியாபாரதில் சாதிக்கக் கூடிய மிகச் சிறப்பான புத்திசாலித்தனம் இருப்பதால் இவர்கள் எவ்வகையான தொழில்களிலும் முன்னிலைக்கு வந்து விடுவர். மற்றவர்களிடம் இனிமையாகப் பேசி தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். காரியங்களைத் திட்டமிட்டு செய்து வெற்றிகளைப் பெறுவார்கள்.இக்கரணத்திற்கான விலங்கு உருவம் எருது. 
சகுனி கரணம்அதிதேவதை கலி புருஷன் இக்கரணத்தில் பிறந்தவர்கள் மிகவும் அமைதியானவர்களாக இருப்பார்கள். புத்திசாலித்தனமும், சிறந்த அறிவாற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள் மேலும் இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகமிருப்பதால் இவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். இவர்கள் தங்களை மிகவும் பக்குவப்பட்ட மனிதர்களாக மாற்றிக்கொள்வார்கள். போர்புரியவும்,நோய்த் தீர மருந்து உட்கொள்ளும் செயல்களை இக்கரணத்தில் செய்தால் சிறந்தப் பலன்களைக் கொடுக்கும். இக்கரணத்திற்கான உருவம் காக்கை.  
பத்ரை கரணம்அதிதேவதை யமன் இவர்களும் இங்கு கூறப்பட்ட சில கரணத்தவர்களைப் போல் தீயச் செயல்களைப் புரிவர்களாக இருப்பர். இவர்களுக்கு சற்று மந்தக் குணம் இருக்கும் காரணத்தினால் எக்காரியத்தையும் சற்றுத் தாமதமாகவே செய்து முடிப்பர். ஆனால் ஏவ்வொரு விஷயத்தையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பர். மனிதாபிமான குணம் இருக்கும். இவர்களை யாரவது தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தால் இவர்களும் வெற்றியாளர்களாகலாம். இக்கரணத்திற்கான பறவையின் உருவம் கோழி.  
சதுஷ்பாதம் கரணம்அதிதேவதை ருத்திரன் இக்கரணங்களிலில் பிறந்தவர்கள் சுதந்திரத் தன்மை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே பிறருக்கு கீழ் அவர்கள் உத்தரவுகளுக்கு பணிந்து வேலை செய்யாமல், தானே முதலாளியாக இருக்கக் கூடிய வியாபாரத் தொழிலில்களையே இவர்கள் செய்வார்கள். பிறரிடம் அனைத்திலும் உண்மையாக நடந்துகொள்வார்கள். மிகவும் கடினமாக உழைக்கக் கூடிய தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இக்கரணத்தில் சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் கொடுப்பது சிறந்த பலன்களைக் கொடுக்கும். மேலும் இவர்கள் தத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபடுவர். இவர்களுக்கான விலங்கு உருவம் நாய்.
நாகவம் கரணம் அதிதேவதை சர்ப்பம் நாக காரணத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பூமி சம்பந்தப்பட்ட சுரங்கம், தாதுக்களை வெட்டி எடுப்பது போன்ற தொழில்களையோ, வியாபாரங்களையோ செய்வர். நல்ல குணாதியசங்கள் இவர்களிடம் காணப்படும். நாக கரணத்தில் பிறந்த காரணத்தால் இவர்களிலில் சிலருக்கு விஷப் பாம்புகளை மயக்கி பிடிக்கும் ஆற்றல் இருக்கும். இவர்கள் ஆன்மிக வழியில் சென்றால், சிறந்த ஞானியாகக் கூடிய அமைப்பு உள்ளது. இக்கரணத்தில் பிறந்த ஒரு சிலர் பிறருக்கு தீமை விளைவிக்கும் காரியங்களைச் செய்வர். இக்கரணத்தின் உருவம் நாகப்பாம்பு.
கிம்ஸ்துக்னம் கரணம்அதிதேவதை வாயு இக்கரணத்தில் பிறந்தவர்கள் பிறருக்கு அதிகம் தீங்கு செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். அனால் சிறந்த அறிவாற்றலைக் கொண்டிருப்பார். தீயவர்களுன் சகவாசம் கொள்ளாதவரை இவர்கள் தவறான வழியில் செல்வதில்லை. இவர்களுக்கு சரியான ஆன்மிக வழிகாட்டி அமைந்து, அவர்கள் சொற்படி நடந்தால் சித்தி நிலை அடையக்கூடிய யோகம் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கான விலங்கின் உருவம் புழு.
குறிப்பு: இது பொது பலன் — உங்கள் தனிப்பட்ட பலனுக்கு ஜாதக மதிப்பு அவசியம்.

இந்த பதிவு உங்களுக்கு எப்படி இருந்தது?

👍 0 ❤️ 0 😮 0 👏 0 🔥 0

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...