அறிமுகம்
இந்த உலகில் பிறப்பு, மறுபிறப்பு, முப்பிறவி என்கிற கருத்துகள் ஆயிரம் ஆண்டுகளாகவே வேத ஜோதிடத்தில் பேசப்பட்டு வருகிறது.
ஒருவரின் முற்பிறவி (Past Life), இப்பிறவி (Present Life), அடுத்த பிறவி (Next Birth) பற்றிய தகவல்கள் அனைத்தும் லக்னம், லக்னாதிபதி, கேது, 5ஆம் இடம், 12ஆம் இடம் போன்ற கிரகஸ்தானங்களின் மூலம் அறிய முடியும்.
ஜோதிடத்தில் முப்பிறவி
வேத ஜோதிடத்தில் முப்பிறவி என்பது முற்பிறப்பு (Past Life), இப்பிறப்பு (Present Life), மறு பிறப்பு / அடுத்த பிறவி (Next Birth) என்பவற்றின் சுழற்சியைக் குறிக்கிறது. ஜோதிட சாஸ்திரப்படி, மனித ஆன்மா பிறவி பெறுவது பாப புண்ணியம், கர்ம பலன், கிரக நிலை, பூர்வ ஜென்ம செயல்கள் அவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
ஒருவரின் அடுத்த பிறவி பொதுவாக லக்னாதிபதி, யாருடன் சேர்ந்து இருக்கிறான்,யாரின் பார்வை பெற்றிருக்கிறான், எந்த இடத்தில் transit ஆகியிருக்கிறான், லக்னாதிபதியின் பார்வை எங்கு விழுகிறது இதன் மூலமாக தெரிந்துகொள்ளப்படுகிறது.
லக்னாதிபதி மூலம் முப்பிறவி கணிப்பது லக்னாதிபதி மிகவும் முக்கியமான கிரகமாகும். முற்பிறவியில் நீங்கள் என்ன செய்தீர்கள், இப்பிறவியில் எப்படி நடப்பீர்கள், அடுத்த பிறவியில் என்ன நிலை வரும் என்பவற்றை தீர்மானிக்கும்.
1. லக்னாதிபதி – இணைந்துள்ள கிரகம்
உங்கள் லக்னாதிபதி எந்த கிரகத்துடன் சேர்ந்திருக்கிறது என்பதே உங்களின் குணம், விதி, கர்ம பலன், மறுபிறவி தரம் எல்லாவற்றையும் நிர்ணயிக்கும்.
2. லக்னாதிபதிக்கு பார்வை இடும் கிரகம் முற்பிறவியில் செய்த நற்கர்மம் அல்லது பாபகர்மம் என்பதை வெளிப்படுத்தும்.
3. லக்னாதிபதியின் பார்வை பிறவிகளில் கடந்து வந்த கர்மங்கள் அடுத்த பிறவியில் சந்திக்கும் காரியங்கள்
எதற்கும் காரணமாக இருக்கும்.
12ஆம் இடத்தில் கேது
12ஆம் இடத்தில் கேது மறுபிறவி இல்லை. வேத ஜோதிடத்தின் மிக முக்கியமான விதி. கேது = மோட்சக் காரகன், 12ஆம் வீடு = மோட்ச ஸ்தானம் இந்த இரண்டு ஒன்று சேர்ந்தால் கர்ம பந்தங்கள் துண்டிக்கப்படும். பிறவி சுழற்சி முடியும். ஆன்மா விடுதலையை அடையும். அதனால் இப்படிப்பட்டவர்கள் அடுத்த பிறவி பெறுவதில்லை என்று முனிவர்கள் கூறியுள்ளனர்.
கூடுதல் விதி 12ஆம் இடம் அதிபதி 12ஆம் இடத்திலேயே இருந்தாலும், மறுபிறவி இல்லாமல் ஆன்மா விடுபடும்.
5ஆம் இடம் – பூர்வ புண்ணிய ஸ்தானம்
5ஆம் இடம் (Putra sthana) என்பது பிறந்தவரின் முன் ஜென்ம புண்ணியத்தை காட்டும் மிகவும் முக்கியமான வீடு. இதன் மூலம் முற்பிறவியில் அவர் செய்த நற்செயல்கள், இப்பிறவியில் உருவாகும் நற்கர்மங்கள், அடுத்த பிறவியில் கிடைக்கும் அனுபவங்கள் அனைத்தும் தெரிந்துகொள்ளலாம்.
5ஆம் இடத்தின் நிலை, நற்பலன்கள் - உயர்ந்த அடுத்த பிறவி, பாபபலன் - தாழ்ந்த அடுத்த பிறவி
பிறந்த நேரம் மூலம் முப்பிறவி கணிக்கும் முறை
முப்பிறவியை அறிய ஒரு மிக அரிய ஜோதிட முறை உள்ளது. குழந்தையின் பிறந்த நேரத்திலிருந்து 10 மாதங்கள் பின்னோக்கி கணிக்கப்படுகிறது. அந்த தருணத்தில் கரு உருவான நேரம், கருவில் ஆன்மா புகுந்த நேரம், அந்த நேரத்தில் கிரகங்கள் எப்படி இருந்தன. அவற்றின் அடிப்படையில் முற்பிறவி, இப்பிறவி, அடுத்த பிறவி மிக துல்லியமாக கணிக்கப்பட்டுவிடும்.
இந்த முறை பல முனிவர் பேரரசர்கள் பயன்படுத்தியவை.
மறுபிறவியை நிர்ணயிக்கும் முக்கிய கிரகங்கள்
கேது – மோட்சம், மறுபிறவி இல்லாமை
சனி – கர்மா, பாபம், தண்டனை
குரு – பூர்வ புண்ணியம்
ராகு – ஆசைகள், பிறவி தாகம்
சந்திரன் – மனசு, ஆன்ம நினைவுகள்
குறிப்பு: இது பொது பலன் — உங்கள் தனிப்பட்ட பலனுக்கு ஜாதக மதிப்பு அவசியம்.
Comments
Post a Comment