ஸ்ரீவைகுண்டம் – சனி தோஷ நிவாரணம் தரும் நவகைலாயம் 6வது ஸ்தலம்
நவகயிலாயத்தில் ஆறாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சனி பகவான் அம்சமாக விளங்குகிறார்.
"தோமாம் பொழிலுடுத்த தென் வைகுந்தக் கயிலை" என்கிறார் குமரகுருபர சுவாமிகள். நவதிருப்பதி நாயகரின் பெயர் வைகுண்டபதி. நவ கைலாயபிரானின் பெயர் கைலாசநாதர் சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. கைலாச நாதர் சுயம்புலிங்கம்.
ஓவியங்கள்
கோயிலின் உட்புறத்தில் கிழக்கில் திருக்கல்யாண மண்டப விதானத்தில் மூலிகைகளால் வரையப்பட்ட நவ கைலாய ஓவியங்கள் உள்ளன. நந்தவனத்துக்குச் செல்லும் முன்மண்டபத்தில் உரோமச முனிவர் வடிவமைக்கப்பட்டுள்ளார். வடக்குப் பகுதியில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சி அம்பிகையும் உள்ளனர். இங்கு கைலாசநாதர், சிவகாமி அம்மை, விஸ்வநாதர், விசாலாட்சி, அம்பிகை ஆகியயோரின் கருவறைகளின் மேல் அழகான விமானங்கள் உள்ளன.
சிற்பங்கள்
இக்கோயிலில் பூதநாதர் உள்ளார். இவர் இந்தக் கோயிலின் காவல் தெய்வம் மட்டுமல்ல இந்த ஊர் மக்களின் காவல் தெய்வம் சாஸ்தாவும் ஆவார். நவக்கிரகங்களும் இந்தக் கோயிலில் உள்ளன. இந்த கோயிலின் காவல் தெய்வங்களான அக்னி பத்ரர், வீரபத்ரர் சிற்பங்கள் வணங்கத்தக்கவை. கோயில் சந்தனசபாபதி மண்டபத்தில் யாழித் தூண்கள் உள்ளன. யாளியின் வாயில் உருளும் கல் உருண்டைகள் உள்ளன.
திருத்தல இருப்பிடம்
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷனிலிருந்து 2 கிமீ தொலைவில் தாமிரபரணி வட கரையில் இக்கோயில் உள்ளது.
மூலவர் : கைலாசநாதர்
அம்பிகை : சிவகாமி அம்மன்
📌 முக்கிய தகவல்கள்
108 திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்ற விஷ்ணு கோவிலும் இந்த ஊரில் இருக்கிறது.
நவகைலாயம் – 9 கோவில்கள் மற்றும் கிரக தொடர்பு
1️⃣ பாபநாசம் – சூரியன்
பாபநாசம் சிவன் கோவில்
பாவநாசம் தரும் தலம். சூரிய தோஷ நிவாரணத்திற்கு முக்கியமானது.
2️⃣ சேரன்மகாதேவி – சந்திரன்
சேரன்மகாதேவி கைலாசநாதர் கோவில்
மனஅமைதி மற்றும் குடும்ப நலத்திற்காக வழிபடப்படும் தலம்.
3️⃣ கோடகநல்லூர் – செவ்வாய்
கோடகநல்லூர் அபிமுக்தீஸ்வரர் கோவில்
செவ்வாய் தோஷம் நீங்க வேண்டி தரிசிக்கப்படும் தலம்.
4️⃣ குன்னத்தூர் – ராகு
குன்னத்தூர் கைலாசநாதர் கோவில்
ராகு தொடர்பான பிரச்சனைகள் நீங்க வழிபடப்படுகிறது.
5️⃣ முறப்பநாடு – குரு
முறப்பநாடு கைலாசநாதர் கோவில்
குரு கிரக அருள் பெற தரிசிக்கப்படும் தலம்.
6️⃣ ஸ்ரீவைகுண்டம் – சனி
ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில்
சனி தோஷ நிவாரணத்திற்குப் பிரசித்தமானது.
7️⃣ தென்திருப்பேரை – புதன்
தென்திருப்பேரை கைலாசநாதர் கோவில்
புத்திசாலித்தனம் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்காக வழிபடப்படுகிறது.
8️⃣ ராஜபதி – கேது
ராஜபதி கைலாசநாதர் கோவில்
கேது தோஷ நிவாரண தலம்.
9️⃣ சேர்ந்தபூமங்கலம் – சுக்கிரன்
சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோவில்
திருமண தடை நீங்க வழிபடப்படும் தலம்.