பகவதி அம்மன்
புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தருகின்ற புற்றுவடிவ மூலவர் தேவிக்கு முன்பாக வெண்கலச்சிலையாக நின்ற கோலத்திலும், வெள்ளிச்சிலையாக அமர்ந்த கோலத்திலும் பகவதியம்மன் அருள் பாலிக்கிறார். இவ்வளவு பிரம்மாண்டமான புற்று வேறு எங்கும் இல்லை என்றும், இப்புற்றில் இதுவரை எந்த பாம்பும் வசித்ததில்லை என்றும் கூறுகின்றனர். பொதுவாக புற்றுக்கோயிலில் பக்தர்கள் பால் ஊற்றுவதும், முட்டைகளை வைத்து வேண்டுவதும் உண்டு. ஆனால் இங்கு பால் ஊற்றுவதோ, முட்டைகளை உடைப்பதோ கிடையாது. ஆனால் இந்த புற்றுக்கு தினமும அபிஷேகம் நடைபெறுகிறது. பூசாரி ஓர் ஏணி மரத்தை வைத்து அதில் ஏறி அம்மனுக்கு பூமாலைகளைச் சாற்றுகிறார்.
காணிக்கை
15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அமைந்துள்ள பகவதி அம்மன் இக்கோயிலின் சிறப்பாகும். பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. மாசி மாத கொடை விழா இந்த ஆலயத்துக்குப் புகழ் சேர்க்கும் ஒரு திருவிழா. பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து, கால்நடையாக இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். அவ்விழாவின்போது பக்தர்கள் கோயிலின் சுற்றுப்புறம் முழுவதும் கூடியிருப்பர். அங்கு பொங்கல் வைத்து அம்மனுக்குப் படைப்பர். பொங்கல் பொங்கி வழியும்போது குலவையிட்டு அம்மனுக்கு நன்றி தெரிவிப்பர். மங்களங்கள் பொங்கச்செய்கின்ற தேவிக்குப் பெண்கள் செய்யும் நன்றிக் காணிக்கையாக இதனைக் கருதுகின்றனர்
சங்கராச்சாரியார்
சங்கராச்சாரியார் கேரள சீடர்களோடு வந்து ஸ்ரீ சக்கரம் வைத்து பூஜை செய்கின்றார். தினமும் தான் தங்கியிருந்த குடிலில் இருந்து ஸ்ரீ சக்கரம் இருந்த இடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் ஸ்ரீ சக்கரம் திரும்ப வரவே இல்லை. எடுத்துப் பார்த்தும் திரும்ப வரவில்லை.இந்த இடத்திலேயே இருந்து சித்து விளையாட்டுக்கள் நடத்தி மண்ணுக்குள் சமாதி ஆகிவிட்டார். அந்த ஸ்ரீசக்கரம் இருந்த இடத்தின் மேல் புற்று வளர்ந்து வருகிறது. அந்த இடத்தில் சிறுவர்கள் விளையாடும்போது தடுக்கி ரத்தம் வருகிறது. இந்த விசயம் அப்பகுதியில் இருக்கும் கேரள மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கு தெரிவிக்கப் பட்டது. அவரும் அந்த இடத்தில் சிறு குடில் கட்டி வழிபாடு நடத்தினார்.
பெண்களின் சபரிமலை
இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகின்றது . ஆண்கள் சபரி மலைக்கு இருமுடி கட்டி செல்வதுபோல் இங்கு பெண்கள் இருமுடி கட்டி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றார்கள்.இங்கு வருடத்தில் 10 நாட்கள் திருவிழா, எட்டாம் கொடை மற்றும் பரணி கொடை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக்கொண்டிருக்கும் புற்று தான் பகவதி அம்மன் என்பது சிறப்பு, இருமுடி கட்டி பெண்கள் பரவசமாக வந்து அம்மனை தரிசிக்கிறார்கள் தரையிலிருக்கும் ஸ்ரீ சக்சரம் மேல் புற்று வளர்ந்து கொண்டே இருக்கிறது.
தலைவலி நோய்
காலை மட்டுமே அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப் படுகிறது. பச்சரிசி மாவு சர்க்கரை வெல்லம் கொண்டு மண்டையப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்தால் தலைவலி நோய் குணமாகும் அதிசயம் நடக்கிறது.
இருப்பிடம்
மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மண்டைக்காடு என்னும் ஊரில் அமைந்துள்ளது.இது நாகர்கோவிலில் இருந்து 23 கி மி தொலைவிலும்,குளச்சலில் இருந்து 7 கி மி தொலைவிலும் மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து 75 கி மி தொலைவிலும் அமைந்துள்ளது.
நடைதிறக்கும் நேரம்
அதிகாலை 5 மணி முதல் காலை 10.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.மாசித்திருவிழா 10 நாள்கள் இங்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும், ஒவ்வொரு தமிழ் மாத கடைசி செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்
குறிப்பு: மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் நடை திறக்கப்படும் நேரம், சிறப்பு நிகழ்வுகளைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, மாலையில் சாத்தப்படும். மாசி மாதத் திருவிழாவின்போது நடை திறப்பு நேரங்களில் மாற்றம் இருக்கலாம். தற்போதைய நேரத்தைத் தெரிந்துகொள்ள, கோவிலின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பார்ப்பது அல்லது நேரடியாக கோவிலை தொடர்புகொள்வது சிறந்தது.
Comments
Post a Comment