வராஹம் எனப்படுவது பன்றியின் அம்சமாகும். அன்னை வராஹி பன்றி முகத்தோடு மூன்று கண்களுடன் காட்சியளிப்பவள். மிருகசக்தியும்,தேவகுணமும் கொண்ட வாரஹி பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். வராஹி எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள். சிவனின் அம்சமான வராஹி அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள்.
வராஹி என்றாலே வரம் என்று பொருள். இவள் அதர்வண வேதத்தின் தலைவியாகவும் விளங்குகிறாள். வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும். இதனால் தன வசியம் ஏற்படும் தொழில் விருத்தியாகும் வியாபாரம் செழிக்கும்.
வராஹிதேவிக்கு இஞ்சி பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை நைவேத்தியம் செய்யலாம் நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் பிடித்தமானது. மிளகும் ஜீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூவும் சர்க்கரையும் ஏலக்காயும் லவங்கமும் பச்சைக்கற்பூரமும் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாக படைக்கலாம். சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்து படைக்கலாம்.
வாராஹி அன்னையை வழிபடுவர்களுக்கு வாக்கு பலிதம் ஏற்படும், எதிரிகள் ஓடி ஒளிவார்கள், விரோதிகள் நண்பர்களாவர், செய்வினை மாந்திரிக தோஷங்கள் அகலும், தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழியும். நெடுநாள் நோய்கள் குணமாக தொடங்கும். தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை போன்ற குணங்கள் உண்டாகும். எதிர்பாரா விபத்துக்கள், ஆபத்துகள் ஏற்படாமல் காப்பாள் அன்னை வாராஹி. நோய் தொற்று பரவி வரும் இந்த கால கட்டத்தில் நோய்கள் பரவாமல் இருக்க இரவு நேரத்தில் வராஹி தேவியை வழிபடலாம். வராஹி அன்னையை வழிபடுபவர்கள் மாமிசம் தவிர்ப்பது நல்லது.
ஓம் ச்யாமளாயை விக்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
இந்த மத்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜபிப்பது சிறந்தது. இந்த மந்திரத்தை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும்.
வராஹி அன்னையை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்
ஞாயிறு கிழமை - நோய்கள் தீரும்.
திங்கட்கிழமை - மன நல பாதிப்புகள் நீங்கும்.
செவ்வாய்கிழமை - வீடு நிலம் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.
புதன்கிழமை - கடன் தொல்லைகள் தீரும்.
வியாழக்கிழமை - குழந்தை பேறு கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை - கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும்.
சனிக்கிழமை - நினைத்த காரியம் நிறைவேறும்.
ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, நினைத்தது நிறைவேறும்.
ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதி ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்த அன்னை வராஹி. அன்னைக்கு பிடித்த நிறம் நீலம், கருப்பு, பவள நிறம், நீல சங்குப் பூக்களும், கருந்துளசி, வில்வமும் அன்னைக்கு ஏற்றது. பௌர்ணமி நாளில் அன்னையின் வலிமை கூடும். பஞ்சமி, அஷ்டமி, தசமி நாட்களில் அன்னையை வழிபடலாம். இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் வீட்டிலேயே வராஹியை நினைத்து வழிபடலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எருமைத்தயிர். தேன் கலந்த மாதுளை, அண்ணாசி, செங்கரும்பு, நிலக்கடலை, அன்னைக்கு பிடித்தமானது.
Comments
Post a Comment