கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் 32 கிலோமீட்டர் தொலைவில் அன்னூர் என்ற ஊர் இருக்கிறது. அன்னூரில் பாவிக்கும் சிவபெருமான் கோவிலுக்கு செல்லுங்கள். இத்திருத்தலத்தில் இருக்கும் சிவனை மன்னிஸ்வரர் என்ற பெயர் கொண்டு அழைக்கிறார்கள். இந்த கோவிலுக்கு சென்று 21 மண் அகல்விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த ஸ்தலத்தை 21 முறை வளம் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.
வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுப்பதன் மூலமாக நம்முடைய கர்ம வினைகள் படிப்படியாக குறைய தொடங்கும். ஒரு நாள் இதை செய்துவிட்டு அப்படியே விடக்கூடாது. உங்கள் வாழ்நாள் முழுவதும் வாயில்லா ஜீவன்களுக்கு உங்கள் கைகளால் சாப்பாட்டு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் பச்சரிசி, எள்ளு, திணை இந்த 3 பொருட்களையும் ஒன்றாக கலந்து கோவிலுக்கு செல்லும்போது எடுத்துச் சென்று மரத்தடியில் உங்கள் கையால் தூவ வேண்டும். அதை எறும்புகளும், சின்ன சின்ன பூச்சிகளும் பசிக்கு சாப்பிட்டும். பாதி கர்ம வினை தீர்ந்துவிடும்.
Comments
Post a Comment