Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் – வரலாறு | Pittukku Man Sumandha Peruman


பித்ரு தோஷம் பரிகாரம்
மதுரை என்றாலே அது திருவிளையாடல்களின் ஊர். சிவபெருமான் தன் பக்தர்களுக்காகப் பலமுறை நேரில் வந்து அருள் புரிந்த தலம். அவற்றில் மிக உருக்கமானதும், இறைவனின் எளிமையைக் காட்டுவதுமான பிட்டுக்கு மண் சுமந்த படலம்.


வைகை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் 

பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் மதுரையை ஆண்டு வந்த காலம் அது. ஒருமுறை மதுரையில் விடாது பெய்த மழையினால் வைகை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டதால், நகருக்குள் நீர் புகாமல் தடுக்க மன்னன் ஒரு கட்டளையிட்டான். அதன்படி, மதுரையில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்காரரும் ஆளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு இடத்தைப் பிடித்து, மண்ணைப் போட்டு வைகை ஆற்றின் கரையை பலப்படுத்த வேண்டும்.

மூதாட்டி வந்தியின் பக்தி

மதுரையில் வந்தி என்ற மூதாட்டி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. பிட்டு விற்று பிழைப்பு நடத்தி வந்த அவள், சிவபெருமான் மீது அசைக்க முடியாத பக்தி கொண்டவள். தினமும் தான் செய்யும் முதல் பிட்டை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு, சிவனடியார்களுக்கு தானம் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

மன்னனின் கட்டளை வந்திக்கும் வந்தது. ஆனால், வயதான அவளால் மண் சுமக்க முடியாது. கூலிக்கு ஆள் அமர்த்தவும் அவளிடம் வசதி இல்லை. சொக்கநாதா கட்டளையை நிறைவேற்ற என்னால் முடியவில்லையே என்று அழுது இறைவனிடம் முறையிட்டாள்.

கூலி ஆளாக வந்த சிவபெருமான்

பக்தையின் குரலுக்குச் செவிசாய்த்த சிவபெருமான், அழுக்குத் துணி உடுத்தி, தலையில் ஒரு கூடையும் கையில் ஒரு மண்வெட்டியும் ஏந்திய கூலி ஆள் போல வேடம் தரித்து வந்தியின் முன் வந்து நின்றார். அம்மா உனக்காக நான் வேலை செய்கிறேன். எனக்குக் கூலியாக என்ன தருவாய் என்று கேட்டார் இறைவன்.

வந்தி மகிழ்ச்சியுடன் மகனே என்னிடம் காசில்லை உதிர்ந்த பிட்டு மட்டுமே இருக்கிறது என்றாள். அதற்கு இறைவன் எனக்கு உதிர்ந்த பிட்டு போதும். உதிர்ந்த பிட்டை மட்டும் கொடு என்று கூறிவிட்டு வைகை கரைக்குச் சென்றார் இறைவன்.


சிவபெருமானின் லீலை 

கரைக்குச் சென்ற இறைவன் அங்கு வேலை ஏதும் செய்யவில்லை. வந்தி கொடுத்த பிட்டை வயிறார உண்டுவிட்டு மரநிழலில் படுத்து உறங்கினார். மற்றவர்கள் கடினமாக வேலை செய்தபோது, இவர் மட்டும் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் மற்ற வேலைக்காரர்களை வம்பு இழுத்துக்கொண்டும் இருந்தார். மாலையில் வேலைகளைப் பார்வையிட மன்னன் வந்தான். அனைவரும் தங்கள் பகுதியை முடித்திருக்க, வந்திக்கு ஒதுக்கப்பட்ட இடம் மட்டும் மண் போடப்படாமல் அப்படியே இருந்தது. இதைக் கண்ட மன்னன் ஆத்திரமடைந்து, அங்கு நின்று கொண்டிருந்த கூலி ஆளை (இறைவனை) அழைத்து, பிரம்பால் அவர் முதுகில் ஒரு பலமான அடி கொடுத்தான். அகிலமெல்லாம் விழுந்தது அடி. மன்னன் அடித்த அந்த ஒரு அடி, உலகிலுள்ள அனைத்து உயிர்கள் மீதும் விழுந்தது.
மன்னனின் முதுகில் தழும்பு ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள், விலங்குகள் என அனைவர் முதுகிலும் அந்த அடி விழுந்தது.

கருவறையில் இருந்த சொக்கநாதரின் திருமேனியிலும் அந்த தழும்பு விழுந்தது. அப்போது அந்த கூலி ஆள், ஒரு கூடை மண்ணை எடுத்து உடைந்த கரையில் கொட்டினார். அந்த ஒரு கூடை மண்ணிலேயே உடைந்த கரை முழுமையாக அடைக்கப்பட்டது. அடுத்த நொடியே அந்த கூலி ஆள் மறைந்து போனார்.

தன்னை அடித்தது சாட்சாத் சிவபெருமானே என்பதை உணர்ந்த மன்னன் நடுங்கினான். தன் தவறை உணர்ந்து இறைவனை வேண்டினான். வந்திப் பாட்டியின் தூய பக்தியை உலகிற்கு உணர்த்தவே இறைவன் இந்த திருவிளையாடலை நிகழ்த்தினார். இறுதியில் வந்திப் பாட்டியை அழைத்துச் செல்ல சிவலோகத்திலிருந்து விமானம் வந்தது.

இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழாவின் போது, இந்த 'பிட்டுக்கு மண் சுமந்த லீலை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...