Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

அருள்மிகு பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவில் – சக்தி, பக்தி மற்றும் அருள்மிகு அம்மன் தலம் | Arulmigu Pittapurathi Amman Temple


பிட்டாபுரத்தி

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது அருள்மிகு பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவில். இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னையை, ‘வடக்கு வாய் செல்வி, நெல்லை மாகாளி, செண்பகச்செல்வி’ என்றும் அழைக்கிறார்கள். தற்போது இந்த அம்மன் ‘புட்டாத்தி அம்மன்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.  

இங்குள்ள அம்மன் நான்கு திருக்கரங்களுடன் வலது கைகளில் உடுக்கையும், சூலமும், இடக்கைகளில் பாசமும், கபாலமும் கொண்டு காட்சியளிக் கிறாள். அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள். அருகில் இரு பக்கமும் படைக்கல தேவியும் (அஸ்திர தேவதை), சீபலி அம்மனும், ராஜராஜேஸ்வரியும் செப்பு படிமங்களில் காட்சியளிக்கிறார்கள். இந்த ஆலயத்தில்  விநாயகர், நெல்லையப்பர், காந்திமதி, நந்தி, வள்ளி, முருகன், தெய்வானை, மயில் மற்றும் ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் உள்ளன.

அம்மனை கருவறையை அடுத்து அர்த்த மண்ட பமும், அதற்கு அடுத்து கருவறையும் உள்ளது. கருவறையில் அன்னை பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் அழகிய இருக்கையில்(பீடத்தில்) வலது காலை பீடத்தின் மேலே ஊன்றி, இடது காலை தொங்க விட்டு வலது கைகளில் அரவு, வேதாளம், வாள், சூலம் ஆகியவற்றையும், இடது கைகளில் தீ, மணி, கேடயம், கபாலம் ஆகியவைகளை தாங்கியும், இருக்கையின் கீழ் வீழ்ந்து கிடக்கும் அரக்கனை வலக்கை சூலத்தால் அழுத்தியபடி எழிற்கோலம் காட்டுகிறாள்.

இந்த அன்னைக்கு நடைபெறும் இரு நேர பூஜையிலும் பிட்டு படைக்கப்படுவது சிறப்பான ஒன்றாகும். பிட்டு படைப்பதால்தான் இந்த அம்மனுக்கு பிட்டா புரத்தி அம்மன் என்று பெயர் வந்துள்ளதாக தெரிகிறது
அம்மனுக்கு தீபாராதனை ஆன பின்னர் அலங்காரத்தில் ஏற்படும் குறைகளை சரிசெய்ய மாட்டார்கள். அதேபோல் தீபாராதனை முடிந்த பின்னர் மாலைகளோ, பூக்களோ அம்மனுக்கு அணிவிக்கப்படாது.

குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களுக்கும் இக்கோவிலில் வேர்கட்டி, மையிடப்படுகிறது. இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. 

இதனை நிரூபிக்கும் விதமாக நாள்தோறும் ஏராளமானோர், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் குழந்தைகளை இக்கோவிலுக்கு கொண்டு வந்து தீர்த்தம் தெளித்தும், மையிட்டும் செல்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து செல்வது சிறப்பம்சமாகும்.

மேலும் மகப்பேறு விரும்பியும், பீடைகள் நீங்கவும், நோய்கள் தீரவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரளான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டி செல்கிறார்கள். ராகுகால நேரத்தில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பாகும். 
குறிப்பு: இது பொதுபலன் — இந்தத் தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகளைச் சார்ந்தவை.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...