Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

இராமேஸ்வரம் பார்க்க வேண்டிய இடங்கள்


இராமேஸ்வரம்

  1. ராமர் பாதம்
  2. சாக்சி ஹனுமன்
  3. ராமர் தீர்த்தம்
  4. லக்ஷ்மன் தீர்த்தம்
  5. சீதா தீர்த்தம்
  6. ஐந்துமுக ஆஞ்சநேயர்
  7. கோதண்டராமர் கோவில்
  8. தனுஸ்கோடி 
  9. வில்லுன்டி தீர்த்தம்
  10. விவேகாநந்தர் பாறை 
  11. பாம்பன் பாலம்
  12. அபே ஆஞ்சநேயர் 

இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்ற நகரம் இருக்கிறது. இது  பாம்பன் தீவிலிருந்து  சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இலங்கை மன்னார் தீவு, உள்ளது..,இந்திராகாந்தி பாலம்  (பாம்பன்பாலம்) மூலம் நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.இராமேஸ்வரத்திற்கு  சென்னைமதுரை மற்றும் பல மாநிலங்களிலிருந்தும்   இரயில் போக்குவரத்து இருக்கிறது . இராமேஸ்வரம்  இந்தியாவில் புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இது இந்திய தீபகற்பத்தில் மிக முனையில்மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது. புராணத்தின் படி ராமரால் ஆதாம் பாலம் கட்டப்பட்டது. ராமன் சீதையை மீட்க ராவணனிடம்போர் புரிந்து கொன்றான்.ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோயில் மூலவருக்கு இராமநாத சுவாமி என்றும் ராமேஸ்வரம் என்று பெயர் ஆனது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நாகநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.

கோவிலின் வெளிப் பிரகாரத்தில் இருபத்தி இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.ராமன் ஒரு சத்ரியன், ராவணன் ஒரு பிராமணன். பிராமணனைக் கொன்ற பிரம்ம்ஹத்தி தோஷம் நீங்க சிவனை ராமன் வழிபட்டதால் ராம ஈஸ்வரம். ராமன் வழிபட்ட சிவனை, இருபத்தி இரண்டு தேவதைகள் தங்களுக்கென தனித் தனி தீர்த்தங்கள் அமைத்து அவற்றில் இருந்து நீர் எடுத்து வழிபட்டு வருவதாக நம்பிக்கை. அந்த  தீர்த்தங்களில் நீராடி வழிபட்டால் சகல தோஷமும் நீங்கும். சந்-தோசம் பெருகும். 

தீர்த்தங்களின் பெயர்கள் 

  • மகாலட்சுமிதீர்த்தம் 
  • சாவித்திரி தீர்த்தம் 
  • காயத்ரி தீர்த்தம் 
  • சரஸ்வதி தீர்த்தம் 
  • சங்கு தீர்த்தம் 
  • சக்கர தீர்த்தம் 
  • சேதுமாதவ தீர்த்தம் 
  • நள தீர்த்தம் 
  • நீல தீர்த்தம் 
  • கவய தீர்த்தம் 
  • கவாச்ச தீர்த்தம் 
  • கந்தமாதன தீர்த்தம் 
  • பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் 
  • சர்வ தீர்த்தம் 
  • சிவா தீர்த்தம் 
  • சத்யமிர்த்த தீர்த்தம் 
  • சந்திர தீர்த்தம் 
  • சூரிய தீர்த்தம் 
  • கங்கா தீர்த்தம் 
  • யமுனா தீர்த்தம் 
  • கயா தீர்த்தம் 

தனுஷ்கோடி
  
இங்கே வங்கக்குடாக் கடலும் வங்க விரிகுடாக்கடலும் ஒருங் கிணைந்து சங்கமம் ஆவதால் இது ஒரு புனித தீர்த்தக் கட்ட மாகக் கருதப்பட்டு வருகிறது. இந்தக்கடற்ரையில் காலை நேரத்தில் சூரிய உதயத்தையும் மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தையும் கண்டு களிக்கலாம். ஆடி, தை, அமாவாசை நாள்களில் இங்கு உள்ள கடலில் நீராடி எழுவது பிதிர்களுக்கு ஏற்ற புண்ணியமாகக் கருதப்படுகிறது.தனுஷ்கோடி ஒவ்வொரு இந்தியனும் ஏன் ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய இடம். அவ்வளவு அழகு அவ்வளவு அருமை.தனுஷ்கோடி செல்லும் பாதையில் நம் இரு பக்கமும் கடல் விரிகிறது. ஒரு பக்கம் வங்காள விரிகுடா இன்னொரு பக்கம் இந்தியப் பெருங்கடல். இங்கே இன்னும் ஒரு ஆச்சரியம் நிறைந்த இறைவனின் படைப்பை எண்ணி வியக்கலாம். அதனை இன்னும் ஒரு சில வரிகளில் சொல்கிறேன். 

கடல் நீர் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. சென்னை திருச்செந்தூர் கன்னியாகுமரி என்று எங்குமே இல்லாத கடலை இங்கு பார்க்கலாம். கடலின் அழகும், பரந்து விரியும் கடற்கரையும் கவிதை பேசுகிறது. காமிராக் கண்களுக்கு ஏற்ற விருந்து. தனுஷ்கோடியின் மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால் இங்கே வங்காள விரிகுடாவும், இந்தியப் பெருங்கடலும் ஒரே இடத்தில சங்கமிகின்றன. வங்காள விரிகுடா பெண்கடல். இந்தியப் பெருங்கடல் ஆண் கடல். சாதுவான பெண் கடல் அலைகள் ஏதுமின்றி அமைதியாய் ஒருபக்கமும். ஆற்பரிக்கும் ஆண்கடல் மிரட்சியாய் அதன் அருகிலும் காட்சியளிப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

ஏகாந்த ராமர் கோயில்

கருவறையில் அமைந்துள்ள ராமர், லட்சுமணர், சீதாபிராட்டி, அனுமர் ஆகியோர்களது திருமேனிகள் கல்லில் சிறப்பாக வடிக்கப்பட்டு நாள் தோறும் பூஜை செய்யப்படுகின்றன. ராமரது அருகில் நிற்கும் அனுமன் மிகவும் பணிவுடன் ராமனது வார்த்தைகளைக் கைகட்டி வாய் புதைத்துக்கேட்பது போன்ற அமைப்பு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

கோதண்டராமர் கோவில்

தனுஷ்கோடியில் இருந்து வரும் வழியில் இருக்கிறது கோதண்டராமர் கோவில். ராமன் விபீஷணனுக்கு இங்கு தான் பட்டாபிஷேகம் செய்து வைத்ததாக கூறுகிறார்கள். முன்னொரு காலத்தில் இந்தக் கோவிலை கடல் சூழ்ந்து இருந்ததாகவும், இப்போது பல மீட்டர்கள் பின் சென்று விட்டதாகவும்

ராமர் பாதம் 

ராமர் இங்கு இருந்து தான் இலங்கையை முதன் முறையாகப் பார்தரம். அது ஒரு சிறிய குன்று. ராமேஸ்வரத்தின் மொத்த காட்சியையும் இங்கிருந்து காணலாம்.  

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்

இங்கே ராமர் பாலம் கட்ட உதவிய மிதக்கும் கற்களை வைத்துள்ளனர். மேலும் ஆஞ்சநேயருக்காக முப்பது வருடங்களுக்கும் மேல் எரியும் அணையா விளக்கு ஒன்று உள்ளது.

ராமநாதசுவாமி கோவில் சீதை செய்த மணலால் செய்த லிங்கம். ராமனால் வழிபடப்பட்ட லிங்கம், அனுமன் வாலை அறுத்த லிங்கம் அகஸ்தியரால் போற்றப்பட்ட லிங்கம் என்று இந்த லிங்கத்திற்கு பல சிறப்புக்கள் உள்ளன. 

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...