
ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது:
விரதத்திற்கு முன் தயாரிப்பு
-
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
-
பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும்.
-
விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை,பௌர்ணமி, திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம்.
-
விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும்.
பூஜைக்கு தேவையான பொருட்கள்
-
மஞ்சள், குங்குமம், சந்தனம்
அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி,
-
பூக்கள், துளசி இலை
-
பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை)
-
நெய் தீபம்
-
பஞ்சாமிர்தம்
-
சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்
விரத முறை
-
கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும்.
-
ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம்.
-
ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும்.
-
அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.
-
ஆரத்தி காட்டி, பிரசாதம் பகிர வேண்டும்.
விரதத்தின் முக்கியம்
-
மன சுத்தம் மிக முக்கியம்.
-
பொய் பேசாமல், நல்ல எண்ணங்களுடன் இருக்க வேண்டும்.
பூஜை முடியும் வரை பால், பழம், ஜூஸ் உண்ணலாம். பூஜை முடிந்த பின்னர் பிரசாதம் உண்டு விரதம் முடிக்கலாம்.
-
விரத நாளில் குழந்தைகள்,வயதானவர்கள், உடல்நலம் சரியில்லாதவர்கள் சைவ உணவு மட்டும் உட்கொள்ள வேண்டும்.
-
இயன்றால் அன்றைய தினம் ஒருமுறை மட்டும் சாப்பிடலாம்.
விரத பலன்கள்
-
குடும்ப அமைதி
-
பொருளாதார முன்னேற்றம்
செல்வம் மற்றும் வளம்
-
தொழில் வளர்ச்சி
-
மன அமைதி மற்றும் ஆன்மீக முன்னேற்றம்
ஸ்ரீ ஸத்ய நாராயண கதை
அதற்கு மனைவி அடுத்தவேளை உணவுக்கு கூட வழி இல்லாமலும் சாதாரண பூஜைக்கே தேங்காய் பழம் வாங்கி பூஜை செய்வதே பெரிய கஷ்டமாக இருக்கும்போது யாரோ ஒரு மகான் சொன்னார் என்பதற்காக அன்னதானம் செய்து பூஜை செய்கிற நிலையிலா நாம் இருக்கிறோம் என்றாள். வீப்ரதன் எப்படியாவது பூஜையை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். வரும் பௌவுர்ணமியன்று அந்த பெரியவர் சொன்னது போல பூஜை ஏற்பாடுகளை செய்கிறேன். நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்றான்.
ஒவ்வோரு வீடாக சென்று ஸ்ரீசத்தியநாராயண பூஜை செய்ய இருக்கிறேன். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்று பணிவுடன் கேட்டான் வீப்ரதன். இறைவனின் அருளால் உணவு பொருட்கள் மற்றும் பூஜை பொருட்களும் கிடைத்தது. பூஜையை தொடங்கினான். பூஜையிலும் அன்னதானத்திலும் கலந்துக் கொள்ளும்படி அனைவரையும் அழைத்தான் வீப்ரதன். அங்கு வந்தவர்களோ பரேதேசியாக இருப்பவன் சத்தியநாராயண பூஜையை செய்கிறானாம். இவ்வாறு செய்தால் பணக்காரனாக மாறிவிடுவானா என்று வயிற்றெரிச்சலோடு பூஜையில் கலந்து கொண்டார்கள். அந்த பக்கமாக வந்த வழிப்போக்கன் ஒருவனும் பூஜையில் கலந்துக் கொண்டான். பூஜை நல்லபடியாக முடிந்தது. வீப்ரதனும் அவனுடைய மனைவி, குழந்தைகளும் வந்தவர்களுக்கு சிரித்த முகத்துடன் உணவை பரிமாறினார்கள். விருந்து முடிந்து எல்லோரும் புறப்பட்டார்கள். ஆனால் அந்த வழிபோக்கன் மட்டும் வீப்ரதனிடம், அய்யா நான் ஒரு வழிப்போக்கன் பசி என்னை வாட்டியெடுத்தால் இந்த பூஜையில் நீங்கள் அழைக்காமல் நான் கலந்துக் கொண்டு, நீங்கள் தந்த அன்னதானத்தில் சாப்பிட்டேன்.
பூஜை சிறப்பாக இருந்தது. உணவுக்காக தேடி வந்த நான் ஸ்ரீசத்தியநாராயண பூஜை தரிசனத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் என்றான் வழிபோக்கன். ஸ்ரீசத்தியநாராயண பூஜையை காண கண்கோடி வேண்டும். என் கண்களுக்கும் வயிற்றுக்கும் விருந்தளித்த தாங்களும், தங்கள் குடும்பமும் எல்லா செல்வமும் பெற்று நோய் நொடியின்றி மகிழ்ச்சியுடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்தினான். பூஜையின் பயனாக வீப்ரதன், எடுக்கும் முயற்சியெல்லாம் வெற்றியாக அமைந்தது. அவன் ஆரம்பித்த தொழிலும் நல்ல லாபம் தந்தது. பூஜையில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட வழிபோக்கனின் மகளுக்கு திருமணம் நல்ல வேலைவாய்ப்பு கிடைத்தது. பூஜையே செய்யா விட்டாலும், வீப்ரதன் நடத்திய பூஜையில் நல்ல எண்ணத்துடண் கலந்து கொண்டதற்கே நன்மைகளை பெற்றான் வழிப்போக்கன். வீப்ரதனின் பூஜை மற்றும் அன்னதானத்தை கேலி பேசியவர்கள், முன் இருந்ததை போலவே இருந்தனர், புனிதமான நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போது நம்முடைய எண்ணங்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
ஸ்ரீ ஸத்ய நாராயணவிரத ஸங்கல்பம்
ஸோபனே முஹுர்த்தே ஆத்யே
ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே
ஸ்வேதே வராஹ கல்பே வைவஸ்வத
மன்வந்தரே கலியுகே ப்ரதமபாதே
ஜம்புத்வீபே பரதவர்ஷே
பரதக்கண்டே அஸ்மின்
வர்தமானே வியவஹாரிகே
சாந்திரமானேன ப்ரபவாதி
ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…………..
நாம ஸம்வத்ஸரே …………..அயனே…………..
மாஸே……..பக்ஷே………….வாஸர
யுக்தாயாம் சுபநக்ஷத்ர சுபயோக
விஷ்ணு சுபகரன ஏவங்குண
விஷேஷன விஷிஷ்டானாம்
ஸு பதிதௌ அஸ்மாகம்
ஸஹ குடும்பானாம் க்ஷமஸ்
தைர்ய விஜய ஆயுராரோக்ய ஐஸ்வர்யாபி
வ்ருத்யர்த்தம் தர்மார்த்த காம மோக்ஷ
சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம்
புத்ர பௌத்ராபி வ்ருத்யர்த்தம்
ஸத்யநாராயண தேவதா
முத்திஸ்ய ஸத்ய
நாராயண தேவதா ப்ரீத்யர்த்தம்
ஸத்யநாராயணபூஜாங்க த்வேன
யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி
ஷாடஸ உபசார பூஜாம் கரிஷ்யே
ஸ்ரீ ஸத்ய நாராயண கணபதி பூஜை
ஸ்ரீ ஸத்ய நாராயண நவக்கிரக பூஜை
ஆவாஹயாமி
ஆஸனம் ஸமர்ப்பயாமி
அர்க்யம் ஸமர்ப்பயாமி
வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
யக்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி
கந்தம் ஸமர்ப்பயாமி
அக்ஷதான் ஸமர்ப்பயாமி
புஷ்பாணி ஸமர்ப்பயாமி
தூப தீப நைவேத்யாதி ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
சூரியனுக்கு சொல்வதை போல் மற்ற தெய்வங்களுக்கும் சொல்லவும்
சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது, பிரம்மா, சரஸ்வதி, சிவன், பார்வதி, நாராயணன், லட்சுமி, பித்ருக்கள், குலதெய்வம்
ஸ்ரீ ஸத்ய நாராயண கலச பூஜை
ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜை
த்யாயேத் ஸத்யம் குணாதீதம்
ஸ்ரீ ஸத்ய நாராயணஅங்க பூஜை
ஸ்ரீ ஸத்ய நாராயண அஷ்டகம்
ஸ்ரீபத்மலோசன கதாதர பத்மனாப
ஸ்ரீகிருஷ்ண வ்ருஷ்ணிவர யாதவ ராதிகேஸ
கலஸம் கந்தம் மூத்திஸ்ய
ஸ்ரீ ஸத்ய நாராயண தேவதா ஸமர்ப்பயாமி
புஷ்பம் ஸமர்ப்பயாமி
அக்ஷதான் ஸமர்ப்பயாமி
தூபம் ஆக்ராபயாமி
தீபம் தாஸ்யாமி
நைவேத்யம் ஸமர்ப்பயாமி
கர்ப்பூர நீராஞ்சனம் ஸமர்ப்பயாமி.
கங்கேச யமுனே சைவ
கோதாவரி சரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு.
ஏவம் கலஸபூஜாம் க்ருத்வா
மயா கரிஷ்ய மாண
ஸ்ரீ ஸத்ய நாராயண விரத பூர்வாங்க:
ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜாம் கரிஷ்யே:
மந்திரம்
த்ரிலோகேஸம் கௌஸ்துவாபரணம் ஹரிம்
தியானம்
பதபூஷிதம் கோவிந்தம் கோகுலாநந்தம்ப
ப்ரஹ்மாத்யைரபி பூஷிதம் ஸமர்ப்பயாமி
அர்க்யம்
ஹ்ருஷீக பதயே நம:
மயாநிவேதிதோ பக்த்யா அர்க்யோயம்
ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி
பாத்யம்
தாரக பாத்யம் க்ருஹாண தேவேஸமம
ஸெளக்யம் விவர்த்தய ஸமர்ப்பயாமி
ஆசமனீயம்
பாபஹரம்ஸுபம் ததிதம் கல்பிதம் தேவ
ஸம்யகர சம்யதாம் விபோ ஸமர்ப்பயாமி
ஸ்நானம்
புருஷாத்தம அனாதனாத ஸர்வக்ஞ
கீர்வாண ப்ரணதிப்ரிய ஸமர்ப்பயாமி
வஸ்த்ரம்
ஸமன்விதேஸர்வவர்ண ப்ரதே தேவி
வாஸஸீ ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி
யக்ஞோபவீதம்
ப்ரஹ்மஸுத்ரம் யக்ஞோபவீத தானேன
ப்ரியதாம் கமலாபதிம் ஸமர்ப்பயாமி
சந்தனம்
ஸுமனோஹரம் விலேபனம் ஸுரஸ்ரேஷ்ட
சந்தனம் ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி
புஷ்பாணி
வைரப்போ மயாஹ்ருதானி பூஜார்த்தம்
புஷ்பாணி ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸேஷஸாயிநே நம: குல்பௌ பூஜயாமி
ஓம் காலஸ்வரூபிணே நம: ஜங்கே பூஜயாமி
ஓம் விஸ்வரூபாய நம: ஜானுனீ பூஜயாமி
ஓம் ஜகந்நாதாய நம: குஹ்யம் பூஜயாமி
ஓம் கமலநாபாய நம: நாபிம் பூஜயாமி
ஓம் ஜகத்குக்ஷிணே நம: குக்ஷிம் பூஜயாமி
ஓம் லக்ஷ்மிவிலஸ்தவக்ஷஸே நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி
ஓம் சக்ராதிஹஸ்தாய நம: ஹஸ்தான் பூஜயாமி
ஓம் சதுர்பாஹவே நம: பாஹுன் பூஜயாமி
ஓம் ஸ்ரீகண்டாய நம: கண்டம் பூஜயாமி
ஓம் சந்த்ரமுகாய நம: முகம் பூஜயாமி
ஓம் ஸத்யவாசே நம: வக்த்ரம் பூஜயாமி
ஓம் ஸ்ரீஸாய நம: நாஸிகாம் பூஜயாமி
ஓம் ரவிந்துலோசனாய நம: நேத்ரே பூஜயாமி
ஓம் திக்ஸ்ரோத்ராய நம: ஸ்ரோத்ரே பூஜயாமி
ஓம் ஸர்வவ்யாபிணே நம: ஸிரோ பூஜயாமி
ஓம் ஸ்ரீஸத்யநாராயணஸ்வாமிநே நம: ஸர்வாங்கானி பூஜயாமி
தூபம் காட்டும் போது
கத்த உத்தம: அக்ரே யஸ்ஸர்வ
தேவானாம் தூபோயம்
ப்ரதிக்ருஹ்யதாம் ஆக்ராபயாமி
தீபம் காட்டும் போது
னாயோஜிதம் மமா தீபம் க்ரூஹாண
தேவேச த்ரைலோக்ய
திமிராபஹம் தர்ஸயாமி
ஓம் ஸத்ய நாராயண ஸ்வாமினே நம:
நைவேத்யம் காட்டும் போது
ஸுர்க்கரம் நாநாவிதஞ்ச நைவேத்யம்
விஷ்ணோமே ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி
ஆசமனீயம்
நிர்மலம்ஜலம் ஆசமனம் மயாதத்தம்
க்ருஹ்யதாம் புருஷாத்தமம் ஸமர்ப்பயாமி
தாம்பூலம் காட்டும் போது
ஸுரபூஜிதம் ப்ரீதயாக்ருஹா தேவேஸ
மமஸெளக்யம் விவர்த்தய ஸமர்ப்பயாமி
பலம்
புரதஸ்தவ தேவ மே ஸபலாநாபி
பவேஜ்ஜனமணி ஜன்மணி ஸமர்ப்பயாமி
நீராஞ்சனம்
ஸுபூஜிதம் நீராஜனேன ஸந்துஷ்டோ
பவதேஸன ஜகத்பதி ஸமர்ப்பயாமி
நமஸ்காரம் செய்யும் போது
க்ருதானிச தானிதானி ப்ரணஸ்யந்தி
ப்ரதக்ஷிண பதேபதே ஸமர்ப்பயாமி
நிவேதனம்
க்ருத்வாஸ்துவததி யான்மயா பக்தியுக்தேன
பத்ரபுஷ்ப புலம் ஜலம் ஸமர்ப்பயாமி
பரிபூர்ணம்
க்ரியாஹீனம் பக்திஹீனம் ஜனார்த்தன
யத்பூஜிதம் மயாதேவ ததஸ்துமே ஸமர்ப்பயாமி
கோவிந்த மாதவ ஜனார்த்தன தானவாரே
நாராயணா மரபதே த்ரிஜகந்நிவாஸ
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி
ஸ்ரீதேவதேவ மதுஸுதன ஸார்ங்கபாணே
தாமோதார்ணவ நிகேதனகைடபாரே
விஸ்வம் பராபரணபூஷித பூமிபால
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி
பத்மேச பத்மபத பாவன பத்மபாணே
பீதாம்பராம்பரருசே ருசிநாவதார
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி
ஸ்ரீகாந்த கௌஸ்துப தரராதி ஹராக்ஞபாணே
விஷ்ணோ த்ரிவிக்ரம மஹோதர தர்மசேதோ
வைகுண்டவாஸ வசுதாதிப வாசுதேவ
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி
ஸ்ரீநாராஸிம்ஹ நரகாந்தக காந்தமூர்தே லக்ஷ்மீதே
கருடவாஹன ஸேஷஸாயினே
கேஸிப்ரணாஸன சுகேச கிரீடமௌளே
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி
ஸ்ரீவத்ஸலாஞ்சந சுரர்ஷப சங்கபாணே
கல்பாந்தவாரிதி விஹாரஹரே முராரே
யக்ஞேசயக்ஞ மயயக்ஞ முகாதி தேவ
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி
ஸ்ரீராம ராவணரிபோ ரகுவம்ஸகேதேர்
ஸீதாபதே தஸரதாத்மஜ ராஜஸிம்ஹ
சுக்ரீவமித்ர ம்ருகவேதா ஸாபபாணே
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி
கோவர்த்தநோத்தரண கம்ஸவிநாஸசௌரே
கோபால வேணுகர பாண்டுசுதைக பந்தோ
ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி
Comments
Post a Comment