தரித்திரம் நீங்கி செல்வ வளம் பெற
முறையாக விளக்கு ஏற்றி, செவ்வாய், வெள்ளி பூஜை செய்து, கோவில் கோவிலாக சுற்றி திரியும் சிலருக்கு நல்லது நடக்காமல், தரித்திரம் பிடித்தது போல சில சமயங்களில் ஆட்டிப் படைக்கும். இந்த நிலையில் இருப்பவர்கள் விநாயகருக்கு விளக்கு ஏற்றுவது நல்லது. என்ன நடந்தாலும் இறைவன் பார்த்துக் கொள்வார் என்று முழு நம்பிக்கையுடன் இருக்கும் பொழுது, அந்த நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க, பல தடைகள் வரும்.
முழு முதல் கடவுளான இந்த விநாயகப் பெருமானை வழிபட்டு வருபவர்களுக்கு சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை. இப்படி நம்பிக்கை இழந்து வாழ்க்கையில் தரித்திரம் பிடித்தது போல எப்போதும் கெட்டதே நடந்து கொண்டு இருந்தால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்லுங்கள் அல்லது தெருவில் இருக்கும் பிள்ளையாருக்கு இந்த விளக்கை ஏற்றினாலும் சரி தான். மரத்தடி பிள்ளையாருக்கு ஏற்றுவது இன்னும் சிறப்பான பலன் தரும்.
ஞாயிற்றுக்கிழமையில் விநாயகரை தேடிச் சென்று ஒரு சுத்தமான மண் அகல் விளக்கில் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றுங்கள். இரண்டு பஞ்சு திரிகளை ஒன்றாக திரித்து தீபம் ஏற்ற வேண்டும். தனித்த திரி போடக் கூடாது, இது நம்மை தனிமைப்படுத்தும். தீபம் ஏற்றிய பின்பு பிள்ளையாரை மும்முறை வலம் வந்து, தோப்புக்கரணம் போடுங்கள்.
இது போல ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் விநாயகர் கோவிலுக்கு அல்லது மரத்தடி பிள்ளையாருக்கு நல்லெண்ணெய் தீபம் தொடர்ந்து ஏற்றி வர வேண்டும். ஒன்பது வாரங்கள் ஏற்றும் பொழுது இதுவரை இருந்த தரித்திரம், பீடை அனைத்தும் ஒழிந்து மெல்ல மெல்ல உங்கள் நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும்.