வசுக்கள் எனப்படும் எட்டு தேவகணங்கள், முனிவர் வசிஷ்டர் அளித்த சாபத்தால் மனிதராகப் பிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் கங்காதேவியை அணுகி, தங்களை மனிதராகப் பெற்றெடுத்து விரைவில் விடுவிக்குமாறு வேண்டினர். கங்காதேவி இதற்கு ஒப்புக் கொண்டார். சந்தன மகாராஜா ஒருமுறை காட்டிற்கு வேட்டையாட சென்றார. அப்போது கங்காதேவி வருடத்திற்கு ஒருமுறை பூமிக்கு தன் தோழிகளுடன் நீராட வருவதை பார்த்த சநதன மகாராஜா அவள் அழகில் மயங்கி தன்னை திருமணம் செய்யுமாறு கேட்டார்.
சம்மதம் சொல்ல வேண்டுமானால் நான் என்ன செய்தாலும் கேட்க கூடாது. நான் எப்போதும் உங்களுடன் இருக்க முடியாது. அடிக்கடி சொர்க்கம் சென்று வருவேன். அவ்வாறு மீறினால் நான் உங்களை விட்டு சொர்க்கம் சென்று விடுவேன் என்றாள். அதற்கு சம்மதம் தெரிவித்த சநதன மகாராஜா கங்கா தேவியுடன் வாழ்ந்து வந்தார். முதல் குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையை கங்கை நீரில் விட்டாள். இவ்வாறு ஏழு குழந்தையை கங்கை நீரில் விட்டாள். சாந்தனு மன்னனுடன் திருமணம் செய்து கொண்ட கங்கை, பிறந்த ஏழு குழந்தைகளையும் நதியில் கரைத்து, அவர்களை சாபத்திலிருந்து விடுவித்தார். எட்டாவது குழந்தையை (தேவவிரதன்) கரைக்க முயன்றபோது சாந்தனு தடுத்து நிறுத்தினார். அப்போது கங்கை தன் காரணத்தை விளக்கி, தேவவிரதனை சாந்தனுவிடம் ஒப்படைத்து மறைந்தார்.பின்னர் எட்டாவது குழந்தையை கங்கை நீரில் விடுவதைப் பார்த்த சநதன மகாராஜா கங்கா தேவியிடம் இனியும் இந்த கொடுமையை பார்த்து சும்மா இருக்க முடியாது. நீ ஏன் இவ்வாறு செய்கிறாய் என்றார்.
உடனே நீங்கள் என் நிபந்தனையை மீறி விட்டீர்கள் நான் செல்கிறேன். இந்த குழந்தை வளர்ந்து பனிரெண்டு வயது முடிந்தவுடன் திருப்பி கொடுக்கிறேன் என்றாள் கங்கா தேவி.பிதாமகர் பீஷ்மர் மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் முக்கியமான வீரர். அவரின் இயற்பெயர் தேவவிரதன்.
பொறுப்புத்துறப்பு:
இந்த பதிவு புராண மற்றும் பாரம்பரிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தகவல் மற்றும் ஆன்மிக நோக்கத்திற்காக வெளியிடப்பட்டுள்ளது.கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இதன் முழுமை, துல்லியம் அல்லது விளைவுகளுக்கான பொறுப்பை எழுத்தாளர் அல்லது வலைத்தளம் ஏற்காது.
Disclaimer:
This post is published based on Puranic and traditional sources for informational and spiritual purposes. Opinions may vary. The author or website does not accept any responsibility for the completeness, accuracy, or any consequences arising from the use of this content.
Comments
Post a Comment