Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

பேச்சியம்மன் அம்மன் வரலாறு | Pechiamman Goddess in Tamil

பேச்சியம்மன் அம்மன்

வல்லாளன் என்ற அரசன் மிகவும் கொடுங்கோலனாக இருந்தான். அவனுடைய எல்லா கொடுமைகளுக்கும் அவனுடைய மனைவியும் உறுதுணையாக இருந்தாள். இதனால் அந்நாட்டு மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகினர். அவனது மனைவியின் பிரசவ நேரத்தில், அவனுக்குப் பிறக்க இருக்கும் குழந்தையின் உடல் இந்தப் பூமியைத் தொட்டவுடன் அவன் அழிந்து விடுவான் என்றும், மாறாக அது பூமியைத் தொடாமல் ஒரு நாள் இருந்து விட்டால், அதற்குப் பிறகு அவனுக்கு அழிவே இருக்காது என்றும் அவன் ஒரு சாபம் பெற்றிருந்தான். இந்தச் சாபத்தை அறிந்த அந்நாட்டு மக்கள், அவனுக்குப் பிறக்கும் குழந்தை தன் கொடூரத்தால் நாட்டையே அழித்து விடும் என்று பயந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அவனது மனைவி கருவுற்றாள். பிறக்கும் குழந்தை பூமியை உடனே தொட்டுவிட்டால் தனக்கு மரணம்  ஏற்படும் என்றாலும், அந்தச் சாபம் தோல்வி அடைந்து விட்டால் அதற்குப் பிறகு தனக்கு அழிவே கிடையாது என்பதால், மனைவியின் பிரசவத்தின் போது, குழந்தையின் உடல் பூமியைத் தொடாதபடி பிரசவம் பார்ப்பதற்கு ஏற்ற பெண்மணியைத் தேடி வந்தான்.

அவனது மனைவிக்குப் பிரசவ நேரம் நெருங்கியது. அரசனான அவன் தனது மனைவிக்குப் பிரசவம் பார்க்கத் தகுந்த மருத்துவச்சியை அழைத்து வரச் சென்றான். அப்போது அவன் எதிரில் வயதான ஒரு பெண்மணி வந்து கொண்டிருந்தாள். அவன் அவளிடம் யாரென்று விசாரித்தான். அவள் தனது பெயர் பெரியாச்சி என்றும், தான் ஒரு மருத்துவச்சி என்றும் சொன்னாள்.
அரசன் மகிழ்ச்சியடைந்தான். அவளிடம், ‘நான் இந்நாட்டின் அரசன். எனது மனைவிக்குப் பிரசவம் பார்க்க வேண்டும். பிறக்கும் குழந்தை பூமியைத் தொடாமல் ஒரு நாள் முழுவதும் பார்த்துக் கொண்டால், நிறைய பொன்னும் பொருளும் தருவதாகச் சொன்னான். வயதான அந்தப் பெண் மணியும் அதற்குச் சம்மதித்து அவனுடன் அரண்மனைக்குச் சென்றாள்.

அந்தப் பெண்மணி அரசிக்கு நல்லமுறையில் பிரசவம் பார்த்து, குழந்தையைப் பூமியில் பிறக்கும்படியாக விடாமல், தன் கைகளில் ஏந்திக் கொண்டாள். அரசனின் விருப்பப் படியே பிரசவம் பார்த்த அவள், தனக்குத் தருவதாகச் சொன்ன பொன்னையும் பொருளையும் உடனடியாகத் தரும்படி அவனிடம் கேட்டாள். அவன் அதைத் தராமல், அவளைத் தன்னுடைய அடிமை என்றும், இனி அரண்மனையை விட்டு வெளியேற முடியாது என்றும் சொல்லி மூதாட்டியை இகழ்ந்து பேசினான். 

இதைக் கேட்டு கோபம் கொண்ட அந்தப் பெண்மணி, பயங்கர தோற்றம் கொண்டவளாக உருமாறினாள். அரசனைக் கீழே தள்ளி அவனைத் தன் கால்களால் மிதித்துக் கொண்டு, அவன் மனைவியைத் தூக்கித் தன் மடியில் போட்டுக்கொண்டு அவள் வயிற்றைத் தன் கரங்களால் பிளந்தாள். அந்த அரசனையும் காலால் மிதித்துக் கொன்றாள். கொடுங்கோல் ஆட்சி புரிந்த அரசனும், அவன் மனைவியும் அழிக்கப்பட்டார்கள் என்று அறிந்த அந்நாட்டு மக்கள், அனைவரும் அங்கு ஒன்று கூடினர்.

அரசனையும், அவன் மனைவியையும் அழித்து, தங்களைக் காப்பாற்றியது ‘பெரியாச்சி’ என்ற பெயரில் வந்திருந்த காளியம்மன் என்பதையும் தெரிந்து கொண்டனர், அன்னையை வணங்கினர். தங்களைக் காப்பாற்றிய அம்மனுக்கு ‘பெரியாச்சியம்மன்’ என்ற பெயரிலேயே கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். இந்தப் பெரியாச்சியம்மன் என்பதே நாளடைவில் ‘பேச்சியம்மன்’ என்றாகி விட்டது.

மதுரை மாநகரின் சிம்மக்கல் பகுதியில் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்மன் சுயம்பு மூர்த்தியாவார். இந்த ஆலயத்தில் உள்ள பேச்சியம்மன் வலது புறம் ஓங்கிய கையுடனும், இடது கையில் குழந்தையுடனும், காலில் அரக்கனை மிதித்து இருப்பது போன்றும் இருக்கிறது. இந்தப் பேச்சியம்மனைச் சரஸ்வதியின் மற்றொரு தோற்றமென்று இந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆலயம் எழுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.   

பேச்சுக் குறைபாடு உள்ளவர்கள், பேச்சாற்றல் வேண்டுபவர்கள் இந்த அம்மனை வணங்கினால் குறைகள் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கல்விக் கடவுளான சரஸ்வதியின் மறுதோற்றமாகக் கருதப்படும் இந்த அம்மனை வழிபட்டு மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பிடத்தைப் பெற முடியும். ராகு, கேது தோஷமுடையவர்கள் இந்தக் கோவில் வளாகத்தில் உள்ள நாகரை வழிபட்டு, அதன் பிறகு அம்மனை வணங்கி நற் பலன்களைப் பெறலாம்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...