அறிமுகம்
சபரிமலை தரிசனத்துடன் ஆழ்ந்த தொடர்புடைய புனித மலைகளில் ஒன்றானது பொன்னம்பலமேடு (Ponnambalamedu). இது சபரிமலை அய்யப்பன் சன்னிதானத்துக்கு அருகே அமைந்துள்ள மிக உயர்ந்த ஆன்மிக சக்தி மிக்க மலை. மகா தீபாராதனை, மந்திர சத்துவம், பழமையான வழிபாட்டு மரபுகள் போன்றவை காரணமாக பொன்னம்பலமேடு சிறப்பிடமாக கருதப்படுகிறது. ஐயப்பன் ஜோதியாய் இருக்கும் இடம்தான் இந்த பொன்னம்பலமேடு. இங்கு கண்ணுக்கு தெரியாத ஒரு கோயில் இருப்பதாகவும் இங்கு சாஸ்தா தியானத்தில் ஆழ்ந்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பொன் என்றால் தங்கம், அம்பலம் என்றால் கோவில், மேடு என்றால் மலை பரசுராமர் இங்கு ஐயப்பனை கற்சிலையாக வடித்து ஆவாகனம் செய்து பூமிக்கடியில் வைத்ததாக கூறுகின்றனர். சாஸ்தா சிலை ஆவாகனம் செய்யும்போது பரசுராமர் பாடிய பாடல்தான் லோகவீரம் ஸ்லோகம் அதனால் இங்கே லோகவீரம் சஸ்லோகம் சொல்லி நாம் எது வேண்டினாலும் அது நிச்சயம் நிறைவேறும் என்பது உண்மை.
பொன்னம்பலமேடு
பொன்னம்பலமேடு என்பது சபரிமலைக்கு அருகில் உள்ள ஒரு உயரமான மலைச்சிகரம். இங்கு பழமையான வழிபாட்டு முறைகள்,குலபூசை மரபுகள்,மகர ஜோதி தீபாராதனை செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த மலை அடர்ந்த காட்டு சூழல், அமைதி, ஆன்மிக அதிர்வு என்ற காரணங்களால் சந்நியாசிகள், முனிவர்கள் தியானம் செய்த புனித தலமாக அறியப்படுகிறது.
பொன்னம்பலமேடும் சபரிமலையும் – ஆழ்ந்த ஆன்மிகக் கட்டுப்பாடு
முக்கியமாக நம்பப்படுவது முனிவர்கள், சித்தர்கள் தபஸ் செய்த இடம். அய்யப்பன் அம்சம் இருப்பதாக கருதப்படும் புனித மலை. சபரிமலை மரபின் ஒரு முக்கிய ஆஸ்தானம்.
மகர ஜோதி – பொன்னம்பலமேடு தொடர்பு
மகர ஜோதி என்றால் மகர சங்கராந்தி நாளில் அய்யப்பனுக்கான பிரத்யேக தீபாராதனை,தொன்மையான வழிபாட்டு சின்னமாகக் கருதப்படும் ஒரு வெளிச்ச நிகழ்வு. பக்தர்கள் ஆன்மிக சின்னமாகப் பார்க்கும் “புனித வெளிச்சம்”
பக்தர்களின் நம்பிக்கை மகர ஜோதி என்பது அய்யப்பனின் அருள்விழிப்பு, தரிசனத்தின் உச்சநிலை, மனிதனின் உள்ளார்ந்த ஆன்மிக ஒளி என்று பலரும் நம்புகின்றனர்.
பொன்னம்பலமேடு செல்ல வழிகள் & அனுமதி
நம்பிக்கைகள் & ஆன்மிக அர்த்தங்கள்
பொன்னம்பலமேடு ஆன்மிக ரீதியாக தபஸின் சின்னம், தன்னடக்கத்தின் சின்னம், அமைதியின் சின்னம், ஆன்மீக வளர்ச்சியின் சின்னம் எனப் பக்தர்களால் கருதப்படுகிறது.
Comments
Post a Comment