Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

அருள்மிகு சாட்சிநாத சுவாமி திருக்கோயில்

ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில் பெரு வெள்ளம் இந்த ஊரை அணுகாமல் வெளியே நின்றுவிட்டது. பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தமையால் இத்தலம் திருப்புறம்பியம் என்ற பெயரைப் பெற்றது. பிரளயம் ஏற்பட்ட போது சப்த சாகரத்தின் நீரையும் இத்தலத்தில் உள்ள கிணற்றில் அடங்கிவிடும்படி விநாயகர் செய்தமையால் இத்தலத்து விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

மதுரையில் வசிக்கும் வணிகன் ஒருவன் உடல் நிலை சரியில்லாத தன் மாமனைப் பார்க்க திருப்புறம்பியம் வந்தான். மாமன் இறக்கும் தருணம் தன் மகளை அவனிடம் ஒப்படைத்து விட்டு கண்ணை மூடினான். அவளையும் அழைத்துக் கொண்டு மதுரை செல்லு முன் வணிகன் இத்தல ஆலயத்திற்கு வந்தான். இரவு தங்கியிருந்த போது அரவு கடித்து இறந்து விட்டான். அப்பெண் சிவபெருமானிடம் முறையிட்டாள். இறைவன் வணிகனை உயிர்ப்பித்து அவளுக்கு மணமுடித்தார். பெண்ணை கூட்டிக் கொண்டு மதுரை சென்ற வணிகன் அங்கிருந்த தன் முதல் மனைவியிடம் விபரம் கூறி வாழ்ந்து வந்தபோது வணிகனின் முதல் மனைவி, இரண்டாவது பெண்ணுடன் தன் கணவனுக்கு திருமணம் ஆகவில்லை என்றும் அவள் மானம் கெட்டவள் என்றும் பழி கூறினாள். 

இரண்டாம் மனைவி திருப்புறம்பியம் இறைவனை நோக்கி முறையிட வன்னிமரம், மடைப்பள்ளி, கிணறு இவற்றோடு மதரை சென்று திருமணம் நடந்ததற்குச் சாட்சி பகன்றார். வணிகப் பெண்ணின் பொருட்டு மதுரைக்கு எழுந்தருளி சாட்சி கூறியதால் இத்தல இறைவனுக்கு சாட்சிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடற் புராணத்திலும், தலபுராணத்திலும் வருகிறது. மதுரை சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் ஈசான்ய மூலையில் சாட்சி கூறிய படலத்திற்குச் சான்றாக இப்போதும் வன்னிமரமும், மடைப்பள்ளியும் இருப்பதைக் காணலாம். செட்டிப் பெண்ணுக்கு இறைவன் திருமணம் நடத்தி வைத்ததற்கு சாட்சியாக இருந்த வன்னிமரம் இத்தலத்தின் இரண்டாம் பிரகாரத்திலுள்ளது. ஆனால் இம்மரம் தலமரமன்று. தலமரம் புன்னை மரமே. இத்தல விநாயகரான பிரளயம் காத்த விநாயகர் கிளிஞ்சல் மண்ணால் திருமேனி கொண்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி நாளில் இரவு முழுவதும் தேனாபிஷேகம் நடைபெறும். தேன் அனைத்தும் திருமேனியில் இறங்கி விடும். வெளியில் தேன் எதும் வராது. பிரளய வெள்ளத்தில் இருந்து இத்தலத்தை விநாயகர் காப்பாற்றியதால் கடல் தேவனான வருண பகவான் கிளிஞ்சல், கடல் நுரை, நத்தான் கூடு ஆகியவற்றை கொண்டு விநயாகரை உருவாக்கி வழிப்பட்டதால் இவர் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு சாட்சி நாதர் மட்டுமில்லாமல் சட்ட நாத சுவாமியும் எழுந்தருளியிருப்பது சிறப்பு. 

சட்ட நாத சுவாமிக்கு என்று தனிக் கோவில் சீர்காழியில் உள்ளது. இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியன்று இரவு முழுவதும் தேன் கொண்டு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் செய்யப் பெறும் தேன்யாவும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்பட்டு விடும். வேறு நாட்களில் இந்த விநாயகருக்கு எந்த விதமான அபிஷேகமும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகர் சதுர்த்தி நாளில் இரவு முழுவதும் தேனாபிஷேகம் நடைபெறும். தேன் அனைத்தும் திருமேனியில் இறங்கி விடும். வெளியில் தேன் எதும் வராது.

சுவாமி : அருள்மிகு சாட்சிநாதர்.

அம்பாள் : அருள்மிகு கரும்பன்ன சொல்லி.

மூர்த்தி : அகத்தியர், நால்வர், புலத்தியர், சனகர், சனந்தனர், விசுவாமித்திரர், குகாம்பிகை.

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்.

தலவிருட்சம் : புன்னை மரம்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...