- இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது.
- பஞ்ச பூதக் கோயில்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம்,காற்றைக் குறிக்கும் காலஹஸ்தி ஆலயம்,நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது,
- மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களைக் குறிக்கின்றது.
- விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதைக் குறிக்கின்றது (15*60*24 = 21,600).
- 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு செல்பவை.
- பொன்னம்பலம் சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தைக் குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை பஞ்சாட்சரப் படி என்று அழைக்கப்படுகின்றது,அதாவது சி-வா-ய-ந-ம என்ற ஐந்து எழுத்து.
- கனகசபை - பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. கனக சபையைத் தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களைக் குறிக்கின்றது,
- பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளைக் கொண்டுள்ளது. இது 64 கலைகளைக் குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள். மனித உடலில் ஓடும் பல ரத்த நாலங்களைக் குறிக்கின்றது.
- பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள்,9 வகையான சக்தியைக் குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள்,18 புராணங்களையும் குறிக்கின்றது.
- சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் என்று அழைக்க படுகின்றது.
- திருமந்திரத்தில் திருமூலர்
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார்,
அதாவது மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம். என்ற பொருளைக் குறிகின்றது.
Comments
Post a Comment